தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.
அன்றைய தினம் விஜய் சென்னையில் இல்லாவிட்டாலும் அவரது ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.
தற்போது தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் இந்த கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டன.
இதில் ஒரு படி மேலே சென்ற விஜய்யின் தீவிர ரசிகைகள் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக அனைத்து வகை ரத்த பிரிவுகளையும் சேகரித்து இருக்கிறார்களாம்.
ஒரு நடிகரின் பிறந்தநாள் விழாவை பொழுதுபோக்காக எண்ணாமல், மனிதாபிமான எண்ணத்துடன் கொண்டாட உள்ள இந்த ரசிகைகளை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.