‘சூரரைப் போற்று’ படத்தை கொண்டாடும் கேரளத்து சூர்யா ரசிகர்கள்.; டென்ஷனில் தமிழக ரசிகர்கள்

‘சூரரைப் போற்று’ படத்தை கொண்டாடும் கேரளத்து சூர்யா ரசிகர்கள்.; டென்ஷனில் தமிழக ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா முரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியது இந்த திரைப்படம்.

கடந்தாண்டு 2020ல் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

ஓடிடி ரிலீசை விட தமிழக திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வசூல் சாதனை படைத்திருக்கும் என அனைத்து தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

தற்போது 100% இருக்கைகளுடன் தியேட்டர்களில் அனுமதி கிடைத்திருப்பதால் இப்படம் தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஓடிடி-யில் ரிலீசான படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

ஆனால் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட முன்வந்தனர்.

அதன்படி ‘சூரரைப் போற்று’ பட சிறப்பு காட்சிகள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.

இப்படத்தை கேரளத்து சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட்டான ‘சூரரைப் போற்று’ படத்தை தமிழகத்தில் நாம் கொண்டாட முடியவில்லையே என சூர்யா ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Kerala suriya fans celebrate soorarai pottru in theatres

‘புஷ்பா’ ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா.? அசத்தும் அல்லு அர்ஜூன்

‘புஷ்பா’ ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா.? அசத்தும் அல்லு அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.

இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.

முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே ‘அலா வைகுந்தபுரமுலோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ‘புஷ்பா: தி ரைஸ்’ வெளியாகிறது.

‘அலா வைகுந்தபுரமுலோ’ வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக கூறப்படும் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

அணைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

‘புஷ்பா: தி ரைஸ்’, படத்தின் முன் வெளியீட்டு வணிகம் இன்னும் அதிமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளதால், உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் தடம் பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

‘புஷ்பா: தி ரைஸ்’ 2021-ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமாகும்.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து வரவிருக்கும் விளம்பரங்களுடன், ‘புஷ்பா’ பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

Allu Arjun’s Pushpa total business deals

‘மாநாடு’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய டி.ஆரை கண்டித்து பாரதிராஜா அறிக்கை

‘மாநாடு’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய டி.ஆரை கண்டித்து பாரதிராஜா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரு. டி. ராஜேந்தர் அவர்களுக்கு, வணக்கம்…
.
தங்கள் மகன் திரு. சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் திரு. சுரேஷ் காமாட்சி தயாரித்த வெளியான மாநாடு திரைப்படம் சம்மந்தமாக தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் TFAPA பலமுறை தலையிட்டு படம் சுமூகமாக வெளியாக உதவியதை தாங்கள் அறிந்ததே. படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று திரு. சிலம்பரசன் அவர்களின் வியாபாரமும் அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்த திரையுலகமும் அறியும்.

அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

மாநாடு வெளியீட்டுக்கு முந்தையநாள் மொத்த திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்கு சான்று.

படத்தின் தொலை்காட்சி உரிமம் விற்கப்படாத்தால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்திரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரியமனதுடன் ஒத்துக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்திரவாதம் தர முனவந்தீர்கள்.

படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைகாட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனை திரும்பி தருகிறார். ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிக தவறான முன் உதாரணம் ஆகும்.

ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?
ஒரு அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?

இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திரு. சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டூ உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்?

வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்கு போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அன்புடன்,

பாரதிராஜா
தலைவர்,
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

Legendary director Bharathi Raja condemns T Rajendar

ஓ சொல்றியா மாமா… சர்ச்சைக்குள்ளான சமந்தா பாடல்..; நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் வழக்கு

ஓ சொல்றியா மாமா… சர்ச்சைக்குள்ளான சமந்தா பாடல்..; நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருக்கிறார்.

இந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி, சாமி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது.

தமிழ் பதிப்பில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாட விவேகா எழுதியிருக்கிறார்.

இதுவரை இந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் லைக்குகளை யூடியுப்பில் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு ஆந்திராவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Case filed against Samantha’s dance number in Pushpa

எங்கள் இசையும் மங்கள இசையே.; திருவையாறு இசை நிகழ்ச்சிக்கு எதிராக ரஞ்சித்.?

எங்கள் இசையும் மங்கள இசையே.; திருவையாறு இசை நிகழ்ச்சிக்கு எதிராக ரஞ்சித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக டிசம்பர் மாதங்களில் சென்னையில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும் மார்கழியில் மக்களிசையை நடத்துகிறார்.

இதற்கான 2021 வருட அழைப்பிதழில் ‘எங்கள் இசையும் மங்கள இசையே..’ என தலைப்பு வைத்துள்ளார். எனவே இது மற்றொரு இசை நிகழ்ச்சிக்கு எதிராக பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி இந்த வருடம் மதுரையிலும், கோவையிலும் சென்னையிலும் நடைபெறுகிறது .

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இசைக்கலைஞர்கள், மற்றும் பாடகர்கள் , நடனக்கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி டிசம்பர் 18, மதுரையிலும்,
டிசம்பர் 19 கோவையிலும் டிசம்பர் 24 முதல் 31 வரை சென்னையிலும் நடைபெறுகிறது

உலகப் பொதுமறை கண்ட தமிழ் நிலத்தின் வரலாற்றில் , கலைகளும் பண்பாட்டு வடிவங்களும் ஆற்றிய பங்கினை எவராலும் மறக்கவோ மறைக்கவோ இயலாது.

ஒவ்வொரு நிலத்தின் சிறப்பையும், வளங்களையும், குடிகளின் வாழ்வையும் அந்நிலத்தின் பாடல்களே நமக்கு விவரித்திருக்கின்றன.

இயற்கையை வணங்கி எல்லா உயிர்களும் சமம் என்ற மனங்கொண்டு , ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடி வாழ்ந்த சமத்துவ சமூகம் நம் தமிழ்ச்சமூகமே என்கிற வரலாற்று உண்மையை உரக்கச் சொல்வதே மக்கள் கலைகளின் பெருமைமிகு மாண்பாக உள்ளது.

கலைகளை வளர்த்தலும் பண்பாட்டு வேர்களை மீட்டெடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நம்மை ஒன்றுசேர்க்கும் என்ற சமத்துவ நோக்கமே..

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்வுக்கான அடிப்படை.

கொண்டாடுவோம் மார்கழியில் மக்களிசையை.

Director Pa Ranjith against Chennaiyil Thiruvaiyaru music concert

இளையராஜாவுடன் முதன்முறையாக இணைந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் இவர்கள்தான்

இளையராஜாவுடன் முதன்முறையாக இணைந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார்.

இதில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மூத்த நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டை கலைஞர்கள் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார்கள்.

‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசைஞானி இளையராஜா எழுதி இருக்கிறார்.

இந்தப் பாடலுக்கு இணையதளங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதள பார்வையாளர்களையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ”தீயோரை திருத்தாது திருப்பணி ஏற்கின்றாய், கோயில் செல்வம் கொள்ளை போக தடுத்திடாமல் படுத்து கிடப்பது அழகோ..!” என்ற வரிகளில் இசைஞானி, இன்றைய இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடமுள்ள மனக்குமுறலை நேர்த்தியாக பதிவு செய்திருப்பது திரையிசை ரசிகர்களுக்கு வியப்பை அளித்திருக்கிறது.

‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் இந்தப் பாடல், ‘மாயோன்’ படத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், ரஞ்சனி & காயத்ரி ஆகியோரின் இனிமையான குரலில், பக்தி பாடலாகவும், தமிழகத்திலுள்ள அனைத்து இல்லங்களிலும் தவறாது ஒலிக்கக்கூடும் என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

இந்த பாடலில் நீண்ட நாட்கள் கழித்து கர்நாடக இசைக் கலைஞர்களின் காந்த குரலில் சங்கதிகளைக் கேட்கும் போது, இசைஞானியின் மெத்த இசையனுபவம் ரசிகர்களின் காதிற்கு தேனிசையாக பாய்கிறது என்றால் அது மிகையல்ல.

Ranjini and Gayathri joins for Maayon title track

More Articles
Follows