15 கோடி ரூபாய் தங்க கடத்தல் விவகாரம்.; மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

modi pinarayi vijayanகொரோனா வைரஸ் உயிரிழப்புகள் மனிதருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கடத்தல் விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்…

தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்…. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு தன் கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post