தமிழகத்தின் 50 ஆண்டு கால தண்ணீர் பிரச்னையை சொல்லவரும் கேணி

தமிழகத்தின் 50 ஆண்டு கால தண்ணீர் பிரச்னையை சொல்லவரும் கேணி

keni stillsதமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான்.

கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.

ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது.

இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.

“காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர்.

அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார் என மிகப்பெரிய பட்டாளமே இந்த கதைக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். “ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ்” சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் இணைந்து “கேணி” திரைப்படத்திற்காக பாடியிருக்கும் “அய்யா சாமி” பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

பெண் கொடுமைக்கு எதிரான படம் தமிழனானேன்

பெண் கொடுமைக்கு எதிரான படம் தமிழனானேன்

Thamizhananen stillsதமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.

அதனை அன்றைய ஆதித்தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகுவான்? அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ’தமிழனானேன்’

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ‘தமிழனானேன்’. கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன், அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார்.

சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ராமையா இசை அமைத்துள்ளார்.படம் பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

“இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன.

படம் மூன்று வித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் போலத் தெரியும்.

இன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது.

மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை . கயிறுகள், பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள் தான்.

இப்படம் இம்மாதம் 23 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது ” என்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

ஏண்டா தலைல எண்ண வெக்கல படம் அடல்ட் ஒன்லி படமா..?

ஏண்டா தலைல எண்ண வெக்கல படம் அடல்ட் ஒன்லி படமா..?

Yenda Thalaiyila Yenna Vekkalaயோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’.

ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.

புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது.

இதை முன்னிட்டு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரகுமான் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தி பேசினார்.

20 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பாளர் யோகி, சுபா எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள்.

என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு படம் பண்ணனும் என சொல்லிட்டே இருப்பாங்க. நான் தான் சினிமா ரிஸ்க், வேணாம்னு சொல்லிட்டே இருந்தேன்.

பின் ஒரு நாள் ரெஹானா மேடம் வழிகாட்டுதலில் படத்தை துவங்கியதாக சொன்னார்கள். கதை ரொம்ப நல்லா இருந்துச்சி.

எனக்கும் திருப்தியாக இருந்தது. பாடல்களும், ஒரு சில காட்சிகளும் பார்த்தேன், சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோரையும் ஈர்க்கும் தலைப்பாக அமைந்துள்ளது.

ரெஹானாவின் இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. துருவங்கள் 16 படத்தை போலவே இதுவும் முழுக்க புதுமுகங்கள் நடித்த படமாக இருந்தாலும் அதே போலவே பெரிய வெற்றியை பெறும் என்றார் சிறப்பு விருந்தினர் நடிகர் ரகுமான்.

படத்தின் ட்ரைலர் மாதிரியே மொத்த படமும் ரசிகர்களை சிரிக்க வைக்கும். ரெஹானா மேடம் படத்துக்கு பெரிய பில்லர்.

தயாரிப்பாளர்கள் யோகி, சுபா இருவரும் நினைத்திருந்தால் பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் எங்களை நம்பி படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

புதுமுகமான எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம் என்றார் நாயகன் அசார்.

என் முதல் படத்திலிருந்தே மீடியா எனக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக தான் நினைத்து நடித்து வருகிறேன். அசார் ரொம்ப திறமையான நடிகர்.

ரெஹானா இசையில் வச்சி செய்றேன், அம்மா பாடல் என சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது புது அனுபவம். இந்த தலைப்பு பலரையும் படத்தை பற்றி பேச வைத்துள்ளது என்றார் நாயகி சஞ்சிதா ஷெட்டி.

நான் கனடா போனபோது ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க சுபா. ஒரு பட்ஜெட் கொடுத்தேன். சென்னை வந்தப்புறமும் அவங்க கேட்டுட்டே இருந்தாங்க. நானும் நிறைய பேரை பார்த்தேன்.

அதில் கிடைத்தவர் தான் விக்னேஷ் கார்த்திக். காமெடி படம் தான் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன், அவர் சொன்ன கதையும் ரொம்ப நல்லாவே இருந்தது.

அசார் எனக்கு முன்னாடியே அறிமுகமானவன், விக்னேஷ் கார்த்திக் கிட்ட சொன்னப்போ அவரும் அசார் என் நண்பன் தான், எனக்கு ஓகேன்னு சொன்னார்.

சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், ஈடன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க. காமெடிக்கு பஞ்சமில்லை என்றார் இணை தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளருமான ஏஆர் ரெஹானா.

விக்னேஷ் கார்த்திக், அசார், சஞ்சிதா ஷெட்டி மூணு பேரும் என் பிள்ளைகள் மாதிரி. முதல் தடவை விக்னேஷ் கார்த்திக் பார்த்தப்போ ரொம்ப சின்ன பையனா இருக்காரே, இவர் எப்படி படத்தை இயக்குவார்னு சந்தேகமா இருந்துச்சி.

முதல் நாள் ஷூட்டிங்கிலேயே எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். நாயகன் அசார் மாத்திட்டு வேற ஹீரோ புக் பண்ண நினைச்சேன், ஆனால் அசார் மிகவும் திறமையானவர் என்பதை நிரூபித்தார்.

சூது கவ்வும் நாயகி சஞ்சிதா ஷெட்டி தான் நாயகின்னு சொன்னதும் உடனே புக் பண்ண சொல்லிட்டேன் என்றார் தயாரிப்பாளர் சுபா தம்பி பிள்ளை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க. இந்த படத்தோட ட்ரைலரே படத்தை பத்தி சொல்லும்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாமே சிறப்பாகவே அமைஞ்சிருக்கு. அசார் ரொம்ப இயல்பான நடிகர். ட்ரைலர், பாடல்கள் பார்த்துட்டு சிம்பு சாரும், சந்தானம் சாரும் ஃபோன் பண்ணி அசாரை வாழ்த்துனாங்க. அவர்களுக்கு என் நன்றிகள் என்றார் சிங்கப்பூர் தீபன்.

சேஃபா ஒரு காமெடி படம் பண்ணலாம்னு தயாரிப்பாளர்கள் நினைக்குறப்ப, ஒரு வித்தியாசமான படத்தை பண்ணலாம்னு முன்வந்த தயாரிப்பாளர்களுக்கும், ரெஹானா மேடத்திற்கும் நன்றி.

கல்லூரிக்கு போகும் ஒரு நாயகனா அசார் கிடைச்சிருக்காரு. சஞ்சிதா ஷெட்டி ரொம்ப சின்சியரான நடிகை, ஒரு நாள் கூட அவரால் படம் தாமதமானது கிடையாது.

சிங்கப்பூர் தீபனுக்கு ஏன் பெரிய பிரேக் கிடைக்கலனு தெரில. இந்த படத்துல அவருக்கு நல்ல பேரு கிடைக்கும். கவிராஜ் என்ற உதவி இயக்குனர் சொன்ன தலைப்பு தான் இந்த ஏண்டா தலைல எண்ண வைக்கல.

பல பேருக்கு படத்தை கொண்டு போய் சேர்த்ததே இந்த தலைப்பு தான்னு சொல்லலாம். ஏண்டா தலைல எண்ணை வைக்கல லைன் மூலமாக தான் படம் ஆரம்பிக்கிறது என்றார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வம்சி தரன் முகுந்தன், எடிட்டர் சிஎஸ் பிரேம், தயாரிப்பாளர் யோகி தம்பி பிள்ளை, ஸ்டுடியோ 9 விஜித் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்புக்கு பதிலாக மாதவன்

விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்புக்கு பதிலாக மாதவன்

simbu and madhavanகௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

சிம்புவின் திரை பயணத்தில் இப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது. அதில் நடிகர் மாதவன் நாயகனாக கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு இப்படத்தில் கமிட் ஆகாததுக்கு காரணம் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் என்று கூறப்படுகிறது.

கவுதம் மேனனின் இந்த முடிவு சிம்பு ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

கலாம் இறுதிசடங்கு குறித்த பேச்சு; முதல்நாளிலேயே சொதப்பிய கமல்

கலாம் இறுதிசடங்கு குறித்த பேச்சு; முதல்நாளிலேயே சொதப்பிய கமல்

Kamal controversial speech about Abdul Kalam death final eventதனது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார்.

அதன்பின்னர் அவர் வருகைக்காக ஏற்பாடாகி இருந்த ‘நம்மவர் சந்திப்பு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ராமேஸ்வர மீனவர்கள் தங்களின் கோரிக்கையை அவரிடம் தெரிவித்தனர்.

அதனையடுத்து நடிகர் கமல், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம் ‘அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்காத நீங்கள், அவரது இல்லத்தில் இருந்து கட்சியை தொடங்குவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல், “நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அப்படியொரு பழக்கமில்லை. அது என் நம்பிக்கை” என்று குறிப்பிட்டார்.

தற்போது கமலின் இந்த பேச்சு தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்த பல தகவல்கள் தற்போது இணையங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கமலின் குருநாதர் இயக்குநர் ஆர்.சி. சக்தி மறைந்த போது அவரது வீட்டிற்கு வருகை தந்த கமல் அவரது உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

கூடவே ‘உடலை எடுக்கும் போது செய்தி சொல்லுங்கள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மயானம் வரை வந்திருந்தார்.

அதேபோல நடிகை ஆச்சி மனோரமா மரணத்தின் போதும் கலந்து கொண்டார்.

பத்திரிகையாளர் திரு வல்லபன் மறைவுக்கு வந்த அவர் பல மணிநேரம் அமர்ந்திருந்தார்.

இவையெல்லாம் சிலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மரணத்தின் போதும் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது கமலும் ரஜினியும் அந்த ஊர்வல வண்டியில் பல மணிநேரங்கள் அமர்ந்திருந்தனர்.

அதுபோல் நடிகர் நாகேஷ் மறைவின் போது கமல் கலந்துக் கொண்டார்.

இவ்வாறு பல உண்மைகள் வரலாற்றில் இருக்க இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையோடு வாழ்கிறேன் கமல் சொன்னதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்த முதல் நாளில் கமலின் இந்த பேச்சு இப்படி சொதப்பி விட்டதே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kamal controversial speech about Abdul Kalam death final event

sivaji (2)

Breaking: இனி நான் சினிமா நட்சத்திரம் அல்ல; உங்க வீட்டு விளக்கு.. : கமல்

Breaking: இனி நான் சினிமா நட்சத்திரம் அல்ல; உங்க வீட்டு விளக்கு.. : கமல்

Kamal speech at Public meeting regarding his political entryகமல்ஹாசன் இன்று தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்து விட்டார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து அப்துல் கலாம் பயின்ற பள்ளியின் வாசலுக்கு சென்று பார்த்தார்.

பின்னர் ராமநாதபுரம் மீனவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடையே பேசினார்.

தற்போது ராமநாதபுரம் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசி வருகிறார்.

அங்கு பேசும்போது…

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்துள்ளேன். மதுரைக்கு சென்று பேசலாம் என நினைத்தேன்.

ஆனால் உங்கள் அன்பை பார்க்கும்போது இங்கேயே பேச தோன்றுகிறது.

இதுவரை நீங்கள் என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள்.

என்னை பற்றி நான் என்ன நினைகிறேன் என்பதை நான் உங்களிடம் சொல்கிறேன்.

இனி நான் சினிமா நட்சத்திரமல்ல. உங்கள் வீட்டு விளக்கு.

அதை பத்திரமாக ஏற்றி வைத்து, பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
அதை நீங்கள் செய்வீர்கள் என் நம்புகிறேன்” என் பேசினார்.

இதனையடுத்து இன்று மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தன் கட்சி பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார்.

Kamal speech at Public meeting regarding his political entry

More Articles
Follows