*நேர்மையாளர் கமல் எங்களுடன் இணைய வேண்டும்… – கெஜ்ரிவால்*

*நேர்மையாளர் கமல் எங்களுடன் இணைய வேண்டும்… – கெஜ்ரிவால்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind kejriwalஇன்று சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்…

“கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் நேர்மையாக உள்ளனர்.

இணைந்து செயலாற்றுவது குறித்தும் விவாதித்தோம். நேர்மைக்கும், துணிவுக்கும் பேர் போனவர் கமல்ஹாசன்.

இந்த நாடு பெரும் ஊழலையும் வகுப்புவாதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த இரு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்துள்ளோம்.

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வகுப்புவாதத்தை எதிர்க்கின்றனர்.

கமல் அரசியலுக்கு வரவேண்டும்” என்று தெரிவித்தார்.

*ஊழலுக்கு எதிரானவர்கள் என் உறவினர்கள்… கெஜ்ரிவாலை சந்தித்த கமல் பேட்டி*

*ஊழலுக்கு எதிரானவர்கள் என் உறவினர்கள்… கெஜ்ரிவாலை சந்தித்த கமல் பேட்டி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and arvind kejriwalஇன்று, சென்னை வந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

இதன் பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூறுகையில்…

“கெஜ்ரிவால் என்னை சந்தித்தது பெருமை. நாங்கள் சந்தித்து பேசிக்கொண்ட விஷயங்கள் என்ன என்பதை உங்களால் யூகிக்க முடியும்.

ஊழலை எதிர்ப்பவர்கள் யாருமே என் உறவினர்களாகி விடுவார்கள் என்பது உண்மை.

அந்த வகையில் கெஜ்ரிவாலும் எனது உறவினர்.

எனது தந்தை இருந்த போது அரசியலுடன் இந்த வீட்டுக்கு தொடர்பு உள்ளது.

கெஜ்ரிவாலுடன் எனது சந்திப்பு சிலவற்றை தெரிந்து கொள்ள உதவியது” என்று கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா..?

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Devarakondaஅர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு பட நாயகன் விஜய் தேவரகொண்டா மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக விசாரித்த போது, “‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு மணிரத்னத்திற்கு வெகுவாக பிடித்திருந்தது உண்மை தான்.

அவரோடு ஒரு படத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை மணிரத்னத்திற்கு உள்ளது.

ஆனால், அது விரைவில் தொடங்கவுள்ள புதிய படத்தில் இல்லை.

இருவரும் இணையும் மற்றொரு படம் உருவாக வாய்ப்பு இருக்கிறது.” என்று தெரிவித்தனர்.

விஜய் பர்ஸ்ட் லுக்குக்கு 2000 போட்டோஸ்; மெர்சலாகும் ரசிகர்கள்

விஜய் பர்ஸ்ட் லுக்குக்கு 2000 போட்டோஸ்; மெர்சலாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal first look posterஒரு சில படங்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கிய காரணம் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்தான்.

இது அண்மைகாலமாக அதிகரித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் உருவான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இருபடங்களின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களால் அதிகளவில் பாராட்டப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் குறித்து பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராமன் தன் சமீபத்திய பேட்டில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது… மெர்சல் பட சூட்டிங் தொடங்கிய முதல் அதன் ஃபஸ்ட் லுக் போஸ்டருக்காக விஜய் மற்றும் அட்லீ இருவருமே பயந்தனர்.

காலை 10 மணிக்கு ஷுட்டிங் என்றால் விஜய் 8.30 மணிக்கே வந்து மேக்கப் போட்டு தயாராக இருப்பார்.

முதல் ஃபஸ்ட் லுக்கில் விஜய்யுடன் ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் இருக்கும்.

இதற்காக கிட்டதட்ட 2000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அதிலிருந்துதான் சில போட்டோக்களை படக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

முதலில் விஜய்யை தனியாகவும் பின்னர் காளையை தனியாகவும் எடுத்து அதை ஒன்றாக இணைத்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக்களை மக்களுக்கு எழுதிவச்சிட்டு அரசியலுங்க வாங்க ரஜினி… – சிங்கமுத்து

சொத்துக்களை மக்களுக்கு எழுதிவச்சிட்டு அரசியலுங்க வாங்க ரஜினி… – சிங்கமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and singamuthuபோர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை முறைமுகமாக தெரிவித்துவிட்டு படத்தில் நடிக்க சென்றுவிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

அவர் ஸ்டைலில் சொன்னால் பத்த வச்சிட்டியே பரட்டை என்பதுபோல அவரின் பேச்சு இன்றுவரை அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காமெடி நடிகர் சிங்கமுத்து அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருப்பதாவது..

“இளமையாக இருக்கும்போது நடிக்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

இப்போது வயதாகி விட்டது. இனி அவர் அரசியலுக்கு வந்து எந்த பலனும் இல்லை.

இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்கிறார்.

மக்களுக்காக அவர் இதுவரை என்ன செலவு செய்துள்ளார்?

ரஜினி நடிக்கலாம்; சம்பாதிக்கலாம்; ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படக்கூடாது.

தனது சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு ரஜினி அரசியலுக்கு வரட்டும்” என சிங்கமுத்து கூறியுள்ளார்.

ஆர்ட் டைரக்டர் ஜிகே (எ) கோபிகிருஷ்ணா காலமானார்

ஆர்ட் டைரக்டர் ஜிகே (எ) கோபிகிருஷ்ணா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

art director GKபிரபல திரைப்பட கலை இயக்குனர் GK என்கிற கோபிகிருஷ்ணா இன்று காலமானார்.

இருதய பிரச்சனை காரணமாக கடந்த 14.9.2017 அன்று மதியம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் செப். 21ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு காலமானார்.

அண்ணாருக்கு வயது 60
மனைவி நாகேஸ்வரி.
ஒரு மகன் கிருஷ்ணா.
ஒரு மகள் ஹேமச்சந்திரா,
ஆகியோருடன் வசித்துவந்தார்

முகவரி:-
எண் 16, அன்பு நகர் பிரதானசாலை குப்பம்
வளசரவாக்கம்
சென்னை 87.

More Articles
Follows