தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதற்கு முன் இவர்கள் இணைந்த கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.
எனவே இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பே விஜய்யுடன் பைரவா படத்தில் கீர்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் கதை விவசாயம் சார்ந்த கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பே கத்தி படத்தில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை பற்றி தெரிவித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
படத்தில் மற்றொரு நாயகியும் இருப்பார் என சொல்லப்படுகிறது.
