பெற்றோரின் ஆசியுடன் காதலனை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ் ?

பெற்றோரின் ஆசியுடன் காதலனை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கீர்த்தி சுரேஷ் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், தனது பள்ளி காதலனை பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இரு தரப்பிலும் உள்ள பெற்றோர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், நடிகை தனது திரைப்பட ஒப்பந்தங்களை முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கீர்த்தியின் காதலருக்கு கேரளாவில் ரிசார்ட்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Keerthy Suresh to marry her long time lover with parents blessings?

கமலின் ‘விக்ரம்’ படத்தின் வசூலை முறியடித்த விஜய்யின் ‘வாரிசு’ படம்…!

கமலின் ‘விக்ரம்’ படத்தின் வசூலை முறியடித்த விஜய்யின் ‘வாரிசு’ படம்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்போது, ​​சமீபத்திய அப்டேட் விஜய்யின் ‘வாரிசு’ படம் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை முறியடித்து, இங்கிலாந்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

UK சந்தையில் ‘வாரிசு’ அதிகாரப்பூர்வமாக £835K சம்பாதித்துள்ளது, மேலும் இப்படம் சந்தையில் கமல்ஹாசனின் ஆல்-டைம் பிளாக்பஸ்டர் ‘விக்ரம்’ (£833 K) ஐ விஞ்சியுள்ளது.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ (£1.2 மில்லியன்) படத்திற்குப் பிறகு ‘வாரிசு’ இப்போது இங்கிலாந்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப் படமாக உள்ளது.

இங்கிலாந்து விநியோக நிறுவனங்களில் ஒன்றான Ahimsa Entertainment நிறுவனம் ‘வாரிசு’ படத்தின் வசூல் சாதனையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வாரிசு

Vijay’s ‘Varisu’ beats the collection of Kamal’s ‘Vikram’

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ வசூல் குறித்து வெளிவந்த தகவல்

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ வசூல் குறித்து வெளிவந்த தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அதிரடி நடிப்பில் வெளியான வால்டேர் வீரய்யா 200 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் Mythri Movie Makers சமீபத்தில் ட்வீட் செய்து, சிரஞ்சீவியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த மொத்த வசூலில் பாதிக்கும் மேலானது முதல் மூன்று நாட்களில் இருந்து வந்தது. சங்கராந்தி மற்றும் படத்தின் கதை இதை சாத்தியமாக்கியது . பாபி கொல்லி இயக்கிய இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.108 கோடி வசூலித்தது.

இந்நிலையில், சிருவின் அடுத்த படமான ‘போலா ஷங்கர்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது.

‘Waltair Veerayya’ grosses Rs 200 Cr successfully!

எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்ட விஷால்.; இதான் விஷயமா?

எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்ட விஷால்.; இதான் விஷயமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் இதயக்கனி என பல பெயர்களால் அழைக்கப்படுபவர் எம் ஜி ராமச்சந்திரன்.

நடிகராக இருந்தபோதே தமிழக மக்களை தன் வசம் கவர்ந்த எம்ஜிஆர் பின்னர் மக்களின் ஆதரவுடன் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார்.

அவர் இருந்த வரையில் அவரே ஆட்சி பொறுப்பில் இருந்தார். அவர் மறைந்து தற்போது 35 ஆண்டுகள் ஆன நிலையிலும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை கடவுளாக நினைத்து வணங்கும் தமிழக மக்களை இன்றளவும் கிராமங்களில் பார்க்கலாம்.

ஏழை மக்கள் பலர் எம்ஜிஆரின் உருவத்தை தங்கள் கைகளிலும் தங்கள் இதயங்களிலும் பச்சை குத்திக் கொள்வர்.

இந்த நிலையில் எம்ஜிஆரின் உருவத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளார் நடிகர் விஷால்.

இந்த படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தற்போது ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

எனவே இது அந்த படத்திற்கான விஷாலின் கெட்டப் என எதிர்பார்க்கலாம்.

*புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் படத்தை தன் நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும் நடிகர் விஷால்* #Vishal @VishalKOfficial @HariKr_official @VffVishal @johnsoncinepro @ajay_64403 @UrsVamsiShekar #MGR

Actor Vishal gets a tattoo of Legendary Leader MGR on his chest

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஷங்கர் & அதிதி குடும்பம்

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஷங்கர் & அதிதி குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் தான்.

ரஜினி கமல் விஜய் விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

இவரது படங்களில் கமர்சியல் கலந்து சமூக கருத்துக்கள் இருப்பதால் எப்போதும் ஷங்கரின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

தற்போது இவரது 2வது மகள் அதிதி ஷங்கரும் நடிகையாகிவிட்டார்.

கார்த்தியுடன் ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அப்பா & மகள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதிக்கு சென்ற ஷங்கருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

ஏழுமலையான் தரிசனம் முடிந்து வெளியே வந்த ஷங்கர் & அதிதியுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Shankar and Aditi family visiting Tirupati temple

BREAKING பிரபல இயக்குநர் எழுத்தாளர் நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்

BREAKING பிரபல இயக்குநர் எழுத்தாளர் நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் – எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ்.. என பன்முகத் திறமை கொண்டவர் இவர்..

ஈ ராமதாஸ் நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், ராவணன், வாழ்க ஜனநாயகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

கமலின் “வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” (2004) படத்தில் வார்டு பாயாக நடித்ததைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார்.

மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் அப்பாவி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார்.

அதைத் தொடர்ந்து “விசாரணை”(2016), “தர்மதுரை” (2016), “விக்ரம் வேதா” (2017) ஆகிய படங்களில் நடித்தார்.

தனது முதல் திரைக்கதை பணியாக பி. எஸ். நிவாஸ் இயக்க சுமன், சுமலதா ஆகியோர் நடித்த “எனக்காக காத்திரு”(1981) படத்திற்காக எழுதினார். நிவாசுடன் பணிபுரிந்த பிறகு, இராமதாஸ் ஆறு படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர் மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பியிடம் பணிபுரிந்தார்.

பெரும்பாலும் எழுத்தாளராக மற்ற திரைப்பட இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்தார், “மக்கள் ஆட்சி” (1995), “சங்கம் “, “கண்ட நாள் முதல்” (2005) உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் MGM மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் ராமதாஸ். இந்த தகவலை அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவரது இறுதிச் சடங்கு ஜனவர் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இவரின் மனைவி பெயர் திலகவதி. இவர்களின் மகன் இராம பாண்டியனுக்கு கடந்த 2019 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

Actor Director E Ramadoss passed away

More Articles
Follows