தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அனிருத் இசையைமத்துள்ள இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பட நாயகன் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பட நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது… நான் சூர்யாவின் ரசிகை. இன்று அவருடன் நடித்துவிட்டேன். என்றார்.
மேலும் பட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை பலமுறை பிரதர் பிரதர் என்று அழுத்தமாக அழைத்தே பேசினார்.
அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவன் பயப்படாதீங்க சிஸ்டர், நீங்க பாதுகாப்பத்தான் இருக்கீங்க” என்றார்.
என்ன ரகசியமோ? என்ன நடந்துச்சோ..?
