மீண்டும் ரஞ்சித் தயாரிப்பில் கயல் ஆனந்தி.; தினேஷுக்கு ஜோடியானார்

Kayal Anandhi team up with Dinesh in Irandam Ulagaporin Kadaisi Gunduநீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்து வரும் படம் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’.

இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் நாயகன் தினேஷ் இதில் லாரி டிரைவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கயல் ஆனந்தி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

விசாரணை படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்தனர்.

ரஞ்சித் முதன்முறையாக தயாரித்த பரியேறும் பெருமாள் படத்திலும் ஆனந்தி தான் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் அனேகா, ரித்விகா, லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா என்பவர் இசையமைக்கிறார்.

Kayal Anandhi team up with Dinesh in Irandam Ulagaporin Kadaisi Gundu

Overall Rating : Not available

Latest Post