தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இயக்கம் தவிர ரஜினியின் ‘சிவா’, ‘அண்ணாமலை’, கமல்ஹாசனின் ‘உன்னால் முடியும் தம்பி’, விக்ரமின் ‘சாமி’ உள்ளிட்ட பல படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
‘இயக்குநர் சிகரம்’ எனக் கொண்டாடப்பட்டவர் இவர் சில வருடங்களுக்கு முன் காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு அவரின் மகள் புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், மயிலாப்பூர் வாரன் சாலையில் இருக்கும் கே.பாலசந்தரின் வீடும், அதேபகுதியில் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே இருக்கும் கவிதாலயா அலுவலகமும் ஏலத்துக்கு வருகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
யூகோ வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் போனதால் கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் மற்றும் அவரது வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வர உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரஜினி கமலை உருவாக்கியவருக்கே இந்த நிலைமையா? என சினிமாவுலகில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் அந்த செய்தியை நம்ப வேண்டாம் என மறுப்பு தெரிவித்து கவிதாலயா நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Kavithalaya clarifies KBalachanders house office auction
இதோ அந்த அறிக்கை…
