கவிக்கோ அப்துல் ரகுமான் மறைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான் (80) காலமானார்.

இன்று அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட திடீர் மூச்சு திணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

அப்துல் ரகுமான், (பிறப்பு: நவம்பர் 9, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார்.

‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்.

பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார்.

அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

Kaviko Abdul Rahman passed away

‘ஓபிஎஸ்ஸை விட 1000 மடங்கு உயர்ந்தவர் ரஜினி..’- தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் அரசியல் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஒரு தனியார் டிவியிலும் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அதை அவரே விரைவில் அறிவிப்பார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை விட, 1000 மடங்கு உயர்ந்தவர் ரஜினிகாந்த்.

நான் ரஜினியை சந்தித்தபோது அவர் கூறியதாவது…

தமிழக மக்கள் எனக்கு எல்லாம் கொடுத்துவிட்டார்கள். அதை விட இந்த மந்திரி பதவி ஒன்றும் பெரிதில்லை.

ஒரு முதல்வராகத்தான் நான் அமர வேண்டும் என்ற கட்டாயமில்லை.

ஒரு சாமானியனாக தமிழ்நாட்டுக்குள்ளே வந்தவன். சாலை ஓரங்களில் படுத்து உறங்கியிருக்கிறேன்.

எனக்கு அனைத்தையும் கொடுத்த இந்த தமிழர்களுக்காக அரசியல் அமைப்பை சுத்தப்படுத்துகிற பணியையையாவது செய்ய வேண்டும்.” என்றார்.

நிச்சயம் ரஜினியின் அரசியல் ஒரு புதிய மாற்றமாக இருக்கும்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே அவர் அரசியலுக்கு வருகிறார்.” என்றார் தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian Open talk about Rajini political entry and his ideas

வேகம் எடுக்கும் அஜித்தின் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷாராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம்.

இப்படக்குழுவினர் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் காட்சிகளை படமாக்கிவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.

எனவே, விரைவில் இதன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது.

விவேகம் குழுவின் வியாழன் சென்டிமெண்ட்டை முன்னிட்டு இதன் டப்பிங் பணிகளை இன்று தொடங்கியுள்ளனர்.

ஆனாலும் சில காட்சிகள் மீதமிருப்பதால் சென்னையில் படமாக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதால் இன்னும் விறுவிறுப்பாக பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்களாம்.

சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Ajith Vivegam movie post production work updates

செக்ஸியான பெண்கள் பட்டியலில் ரஜினி-விஜய் பட ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் செக்ஸியான 100 பெண்கள் யார்? என்ற பட்டியலை ஆண்டுதோறும் ஒரு பிரபல பத்திரிகை (மேக்ஸிம்) வெளியிட்டு வருகிறது.

தற்போது இந்தாண்டுக்கான உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய நடிகைகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

தீபிகா படுகோனே 10வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 32 இடத்திலும் உள்ளனர்.

இதில் ரஜினியுடன் கோச்சடையான் படத்திலும் தீபிகாவும், விஜய்யுடன் தமிழன் படத்திலும் பிரியங்கா சோப்ராவும் நடித்திருந்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் அண்மையில் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Deepika and Priyanka Chopra feature In Maxims List Of Sexiest Women 2017

அஜித் வில்லன் விவேக் ஓபராயின் சிறுபிள்ளைத்தனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது…

’சாக்லேட் அதிகம் சாப்பிடக்கூடாது. உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்’ என என் மனைவி அடிக்கடி கண்டிப்பாள்.

ஆனாலும் என்னை அறியாமல் குழந்தையைப்போல சாக்லேட்களை திருடி சாப்பிடுகிறேன்.

என் குழந்தைகளுக்கான சாக்லேட்டுகளையும் திருடுகிறேன்.

எனக்கு சாக்லேட் ரொம்ப பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Ajith villain Vivek Oberoi behaves like kids

80களின் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பில் ரஜினி கலந்து கொள்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி, மோகன், அர்ஜீன், சுமன் மற்றும் சரிதா, ராதிகா, அம்பிகா, ராதா, நதியா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் 1980களில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வருடம் வருடம் ஒரு குறிப்பிட்ட தேதியில் சந்தித்து தங்களது நட்பை புதுப்பித்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இவ்வருட சந்திப்பை இந்தாண்டு சீனாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இச்சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது. ஆனால் இதில் யார், யார் கலந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

காலா சூட்டிங்கில் ரஜினிகாந்த் பிஸியாக இருப்பதால், அவர் கலந்துகொள்ள வாய்ப்பு மிக குறைவு என சொல்லப்படுகிறது.

Will Rajini participate in Ever Green 80s actors meeting in China

More Articles
Follows