விஜய் & சிம்புக்கு லெட்டர்.: இப்படியொரு விளம்பரம் தேவையா டாக்டர் சார்..? காண்டான ‘காட்டேரி’ பட டைரக்டர்.!

1610253173325பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளது.

அந்த சமயத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

மூடப்பட்ட திரையரங்குகளில் கொரோனா தொற்று வேகமாக பரவும் என பலரும் எச்சரித்த நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் விஜய் மற்றும் சிம்புவுக்கு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த கடிதத்தில்…, “விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு… “நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

நாங்கள் ஹீரோக்கள் இல்லை. எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.” என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ‘காட்டேரி’ பட இயக்குநர் டிகே என்பவர் இது குறித்து கூறியதாவது…

“ஏ.சி. உள்ள பார்கள் மற்றும் கிளப்புகள் எல்லாம் திறக்கப்பட்டபோது இந்த டாக்டர் ஏன் கடிதம் எழுதவில்லை என்று வியக்கிறேன்.

சினிமாவை தாக்கிப் பேசினால் 15 நிமிடத்தில் எளிதில் பிரபலமாகவிடலாம் என்பதால் தான்” என பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.

Katteri movie Director Condemns Doctor on Vijay Simbu letter issue

 

 

Overall Rating : Not available

Latest Post