தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளி பண்டிகைன்னா புதுப்படங்கள் ரிலீஸ் இல்லாமலா?
எனவே, தீபாவளியை குறிவைத்து நிறைய படங்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த காஷ்மோரா, தீபாவளி அன்று ரிலீஸ் என்று முன்பே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் எவரும் எதிர்பாரா விதமாக சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கத்தி சண்டை படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ தயாரித்த இப்படத்தை ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.
நடிகர் சங்கம் தேர்தல் பணிகள் தொடங்கியது முதல் விஷால்-கார்த்தி நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.
தற்போது இவர்களின் படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ளவிருக்கிறது.
தனது தம்பி கார்த்திக்காக சூர்யா தன் படத்தை தள்ளி வைத்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
பின்குறிப்பு : 2013ஆம் பொங்கலுக்கு விஷாலின் ‘சமர்’ மற்றும் கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ இரண்டும் மோதியது குறிப்பிடத்தக்கது.