கருத்தவனெல்லாம் கலீஜாம்… வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

எனவே இதனை முன்னிட்டு மோகன் ராஜா அடுத்து இயக்கியுள்ள வேலைக்காரன் படத்தின் சிங்கள் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதன் மியூசிக் ரைட்ஸை பெற்றுள்ள சோனி நிறுவனம் இந்த சிங்கிள் பாடலை இன்று சற்றுமுன் வெளியிட்டது.

அதில் ‘கறுத்தவன்லாம் கலீஜாம்… என்று தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளது.

இது தரலோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது.

இந்த சிங்கிள் ட்ராக், ‘Gaana’ மற்றும் ‘Saavn’ இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Karuthavanlaam Galeejaam Velaikkaran single track released

நிஜமான புலியுடன் மோதிய விஜய்; மெர்சலாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டின்போது இதில் 14 சண்டைக்காட்சிகள் இருப்பதாக தெரிவித்தார் இயக்குனர் அட்லி.

அதில் ஒரு சண்டைக்காட்சியில் புலியுடன் விஜய் மோதுவாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

முதலில் இதை கிராபிக்ஸ் புலியாக செய்யலாம் என்ற ஆலோசனையில் இருந்தார்களாம்.

ஆனால் நன்கு பழக்கப்பட்ட சர்க்கஸ் புலியாக இருந்தால் அதனுடன் நான் நிஜமாகவே மோதுகிறேன் என்று விஜய் சொன்னாராம்.

அதன்படி விஜய்-புலி மோதும் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அது நிச்சயம் ரசிகர்களுக்கு மெர்சலான விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

In Mersal movie Vijay fights with real tiger

இரண்டு சூர்யாவை தொடர்ந்து தனுஷை இயக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார் செல்வராகவன்.

அப்போது தனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் விரைவில் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

Selvaraghavan teams up with Dhanush after Suriya movie

தமிழகம் மற்றும் உலகளவில் விவேகம் வசூல் எவ்வளவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடித்த விவேகம் ரிலீஸ் ஆனது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் 3 நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் வேட்டை செய்து வருகிறது.

சென்னையில் முதல்நாள் வசூலில் கபாலி மற்றும் தெறி பட சாதனைகளை முறியடித்துள்ளது.

நான்கு நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 5.7 கோடியை வசூலித்துள்ளது.

  • முதல் நாள்- ரூ. 1.22 கோடி
  • இரண்டாம் நாள்- ரூ. 1.51 கோடி
  • மூன்றாம் நாள்- ரூ. 1.55 கோடி
  • நான்காம் நாள்- ரூ. 1.47 கோடி
  • மொத்தம் – ரூ. 5.75 கோடி

மேலும் தமிழகளவில் ரூ- 50 கோடி வசூலையும் உலகம் முழுவதும் ரூ. 95 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வசூல் விவரங்கள் இதோ…

  1. சென்னை- ரூ 5.7 கோடி
  2. செங்கல்பட்டு- ரூ 11 கோடி
  3. சவுத் ஆற்காடு- ரூ 2.2 கோடி
  4. நார்த் ஆற்காடு- ரூ 2.6 கோடி
  5. திருச்சி, தஞ்சாவூர்- ரூ 5 கோடி
  6. சேலம்- ரூ 5 கோடி
  7. மதுரை- ரூ 8.1 கோடி
  8. கோயமுத்தூர்- ரூ 8.7 கோடி
  9. திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ 2.7 கோடி
  10. கர்நாடகா- ரூ 8.6 கோடி
  11. ஆந்திரா, தெலுங்கானா- ரூ 5 கோடி
  12. கேரளா- ரூ 4கோடி
  13. மற்ற மாநிலங்கள்- ரூ 58 லட்சம்
  14. மலேசியாவில் ரூ. 7.8 கோடி
  15. அமெரிக்கா ரூ. 2.8 கோடி
  16. வெளிநாடுகள்- ரூ 27 கோடி

Vivegam movie box office collection worldwide

முதல்வராகும் தகுதி எனக்கே உள்ளது; ரஜினி-கமலுக்கு சரத்குமார் சவால்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என சினிமாவில் பன்முகம் காட்டிய சரத்குமார் சமீபகாலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனிடையில் சில விளம்பரங்களிலும், சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

அக்கட்சியின் பொது செயலாளர் சரத்குமார் அப்போது பேசியதாவது…

ஜெயலலிதா இருந்தவரை அரசியல் பற்றி பேசாத ரஜினி-கமல் இருவரும் தற்போது அரசியல் குறித்து பேசுவது ஏன்?

அரசியல் குடும்பத்திலிருந்து வந்த தனக்கு தமிழக முதலமைச்சராகும் தகுதி உள்ளது.

முதலமைச்சர் பதவி என்பது ஒரு சிலருக்கு மட்டும்தான் தானாக கிடைக்கும். கடுமையான உழைப்பால் மட்டுமே ஒருவர் முதலமைச்சர் ஆக முடியும். என்று பேசினார்.

மேலும் சினிமாத்துறையினரை தான் பகைத்து கொள்ள விரும்பவில்லை என்றும் ரஜினி-கமல் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இதுவரை ரஜினியின் கடவுள் பேசிவிட்டாரா? எனத் தெரியவில்லை. சினிமா பிரச்சினையில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறிய கமல் இப்போது அரசியல் ஏன் பேச வேண்டும்.

அவரின் ட்விட்டர் பதிவுகளை பார்த்து மக்கள் திசை திரும்ப கூடாது. என்று கேள்விகளை எழுப்பினார்.

விரைவில் கமலின் ட்விட்டர் பதிவுகளுக்கு தெளிவுரை எழுத தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு அ,ஆ எழுதியவன் நான் என்றும்
பேசினார்.

இறுதியாக தி.மு.க.வை விட்டு வெளியேறிய நான் கட்சி மாறுபவன் அல்ல என்றும் அரசியல் குறித்து யாருடன் வேண்டுமானலும் விவாதிக்க தயார் என்றும் சவால் விடுத்தார் சரத்குமார்.

I have eligibility to become Chief Minister says Sarathkumar and he challenge to Rajini Kamal

போகன் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா-கேத்ரீன் தெரசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்த படம் போகன்.

இமான் இசையைமைத்திருந்த இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா நடிக்க, லட்சுமண் இயக்கியிருந்தார்.

தமிழில் வெற்றிப் பெற்ற இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளளனர்.

இதில் ஜெயம் ரவி கேரக்டரில் ரவிதேஜா நடிக்க, ஹன்சிகா கேரக்டரில் கேத்ரீன் தெரசா நடிக்கிறார்.

அரவிந்த்சாமி கேரக்டரில் நடிப்பது யார்? என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

Ravi Teja and Catherine Tresa star in Telugu remake of Bogan

More Articles
Follows