*பரியேறும் பெருமாள்* படத்தில் இடம்பெற்ற *கருப்பி* படைக்கும் சாதனை

Karuppi En Karuppi song crossed 1 million views in youtubeமாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’.

முக்கிய வேடம் ஒன்றில் கருப்பி என்ற ஒரு நாயும் நடித்துள்ளது.

கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக நடித்துள்ளனர்.

இப்படத்தினை நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் காலா பட இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வரவுள்ளனர்.

மண் மணம் மாறாத வகையிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை வலியுறுத்தி இப்படம் உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள ‘கருப்பி.. என் கருப்பி..’ என்ற பாடலை யூ-டியூப் பக்கத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karuppi En Karuppi song crossed 1 million views in youtube

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

இயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனத்தின்…
...Read More
மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் உள்ளிட்ட…
...Read More

Latest Post