தசாவதாரம் பாணியில் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படம்

தசாவதாரம் பாணியில் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthikeyanum Kaanamal Pona Kadhaliyum‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தை எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார்.

இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி.

தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலா.

பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது.

இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஆயுதபூஜை ஸ்பெஷலாக வரும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர்

ஆயுதபூஜை ஸ்பெஷலாக வரும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bhaskar oru rascalமலையாளத்தில் வெற்றிப் வெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் உருவாக்கி வருகிறார் அதே இயக்குனர் சித்திக்.

இதில் அரவிந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்க முக்கிய வேடத்தில் மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர்.

மற்றொரு முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்துள்ளார்.

அம்ரிஷ் இசையமைக்க, விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இதன் டீசரை ஆயுதபூஜை விருந்தாக செப்டம்பர் 29ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு மொழி பேசப்போகும் குரங்கு பொம்மை

தெலுங்கு மொழி பேசப்போகும் குரங்கு பொம்மை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kurangu bommaiஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கிய குரங்கு பொம்மை மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதில் வித்தார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், குமரவேல், பிஎல்.தேனப்பன் கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்க,
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.

இதன் தெலுங்கு உரிமையை எஸ் போக்கஸ் நிறுவனம் சார்பில் சரவணன் கைப்பற்றியிருக்கிறார்.

இதுகுறித்து சரவணன் கூறியதாவது…

”திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம்.

இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. ‘குரங்கு பொம்மை’ படம் ஒரு அற்புத படைப்பு.

நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு ரசிகர்களும் இப்படத்திற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

வித்தியாசமான படங்களில் விஜய் நடிக்க கமல் வேண்டுகோள்

வித்தியாசமான படங்களில் விஜய் நடிக்க கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and kamal haasanசீனியர் நடிகரான கமல் மற்ற நடிகர்களை பாராட்டுவதிலும் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதிலும் தவறுவதில்லை.

இந்நிலையில் கமல் ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியின் போது விஜய்யின் படங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அவர் கூறியதாவது…

ரஜினி சார், விஜய் சார் படங்கள் பார்ப்பேன். ரஜினியின் முள்ளும் மலரும் படம் எனக்கு பிடிக்கும். அவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

விஜய் படங்களையும் நிறைய பார்த்து இருக்கிறேன். அவர் தற்போது வெற்றிப் பெற்ற நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

அவரும் வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும். இந்தியில் பல வெற்றி பெற்ற நடிகர்கள் நல்ல தரமான படங்களை செய்கின்றனர்.

நான் சகலகலா வல்லவன் படத்தை செய்தேன். அது கமர்சியல் படம்தான் நல்ல பெயர் கிடைத்தது.

அதுபோல் மூன்றாம் பிறை படத்தில் நடித்தேன். அதுவும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.” என்றார் உலகநாயகன்.

மக்கள் மீது அக்கறையுள்ள ரஜினி-கமல் அரசியலுக்கு வரலாம்… விஜய்சேதுபதி

மக்கள் மீது அக்கறையுள்ள ரஜினி-கமல் அரசியலுக்கு வரலாம்… விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalவிஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் தொடர்பான பிரஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது விஜய்சேதுபதியிடம் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அவர் பதிலளித்தாவது…

மத்திய அரசு நம்மை நசுக்கி கொண்டிருக்கிறது. ரயில் டிக்கெட்டில் நமது தமிழ் மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம்.

நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஏன் நடிகர்களை பார்த்து அந்த கேள்வியை கேட்க வேண்டும். அந்த கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை.

மக்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ள ரஜினி, கமல் போன்ற யார் வேண்டுமானாலும் வரலாம்.” என்று பதிலளித்தார் கருப்பன்.

Rajini and Kamal has care for Peoples So they can come to politics says Vijay Sethupathi

டிகே இயக்கத்தில் காட்டேரியாக மிரட்ட வருகிறார் ஓவியா

டிகே இயக்கத்தில் காட்டேரியாக மிரட்ட வருகிறார் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaateri first look launchஇயக்குனர் டிகே இயக்கத்தில் கிருஷ்ணா, ஓவியா, கருணாகரன் ஆகியோர் நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `யாமிருக்க பயமே’.

இதனையடுத்து கவலை வேண்டாம் என்ற படத்தை இயக்கினார் டிகே. ஆனால் பெரும் கவலையை அந்தப்படம் அவருக்கு தந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது 3 வருடத்திற்கு பின்னர் `காட்டேரி’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில் பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா சாய் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

காமெடி கலந்த பேய் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

ஏற்கனவே ஞானவேல் ராஜா தயாரிப்பில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கும் கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முறட்டு குத்து’ என்ற படத்திலும் ஓவியா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Oviyas next ghost movie Katteri with director Deekay

katteri

More Articles
Follows