பேட்ட சூட்டிங் ஓவர்; பீட்சா சென்டிமெண்டில் கனெக்ட்டாகும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படம் ரிலீஸாகும் முன்பே பேட்ட பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வந்தார்.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், மகேந்திரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அக்டோபர் 19ஆம் தேதியுடன் பேட்ட சூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதை ரஜினிகாந்த் ட்விட்டரில் உறுதி செய்து பதிவிட்டுள்ளதாவது…

“பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 15 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஆறு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முதல் படமாக பீட்சா (2012) ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Subbaraj wrapped Petta shooting It Connects with Pizza release date

டிசம்பரில் வருகிறார் சுசீந்திரன் உருவாக்கிய புட்பால் *சாம்பியன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது !

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

விளையாட்டை மையமாக வைத்து வந்த “வெண்ணிலா கபடி குழு“, “ஜீவா“ போன்ற வெற்றி படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தற்போது உருவாகி வரும் சாம்பியன் புட்பாலை மையமாக கொண்டது.

இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள்.

இவர்களோடு GK ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ், RK சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை அரோல் குரொலி, ஒளிப்பதிவு சுஜித் சாரங், களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக K. ராகவி இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

சுசீந்திரன் இயக்கியுள்ள ஏஞ்சலினா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Suseenthirans Champion Wraps Up Dubbing Works On Full Swing

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய பாடல் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள கனா படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள” பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த என் நண்பரும் திரைப்பட இயக்குனருமான அருண்ராஜா காமராஜிற்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என்கிறார் எஸ்கே. புரொடக்‌ஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் டிரெய்லர் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

Vayadi petha pulla song crossed 50 Million views in Youtube

*எழுமின்* தந்த ஏற்றம்; மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுக்க முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் எழுமின்.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி.

இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் இருத்து கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக் கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது,

தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் ’எழுமின்’ படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம், இந்த அறிவிப்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது, எங்கள் படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார், எழுமின் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி.

Ezhumin movie impact Martial arts should be lesson in Govt Schools

சபரிமலை சந்நிதானத்தில் பெண்களை அனுமதிக்க சிவகுமார் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 60-70 வருடங்களுக்கு மேலாக சபரிமலையில் 10 முதல் 50 வரையில் உள்ள பெண்களுக்கு அனுமதியில்லை.

ஆனால் அண்மையில் எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேரள அரசை கேட்டுக் கொண்டது.

ஆனால் இதற்கு சபரிமலை தேவசம் போர்ட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் சபரிமலை பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று 2 பெண்கள் சபரிமலை சந்நிதானத்திற்கு இன்று செல்ல முயன்ற போது, போராட்டக்காரர்கள் தடுத்தனர்.

இறுதியாக அவர்கள் பக்தர்கள் இல்லை என போலீசாரும் அவர்களை திருப்பி அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவகுமார் கூறியிருப்பதாவது…

“நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது.

எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை.

தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது.

இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்” என சிவகுமார் கூறியுள்ளார்.

All women should be allowed in Sabarimala Temple says Sivakumar

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்கள் தொடர் தோல்வி.; ரஜினி உஷார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாகவே வெற்றிப் பெற்ற படங்களின் 2ஆம் பாகத்தை எடுப்பதை தமிழ் சினிமா உலகினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

முனி வெற்றிப் பெற்றதை அடுத்து அதே கதைக்களத்தில் காஞ்சனா 1 வெளியானது. இதனையடுத்து காஞ்சனா 2 படமும் வெளியானது.

ஆனால் முதல் பாகத்தை போன்று மற்ற படங்கள் இல்லை என கூறப்பட்டது.

அதுபோல் சிங்கம் 1 வெற்றிப் பெற்றதை அடுத்து சிங்கம் 2, சிங்கம் 3 படங்கள் வெளியானது. 3ஆம் பாகம் எதிர்பார்த்த அளவு வெற்றிப் பெறவில்லை.

அதுபோல் தமிழ்படம் 1, தமிழ்ப்படம் 2 ஆகியவை வெளியானது. இந்த படங்களாவது ஓரளவு பேசப்பட்டது.

ஆனால் டார்லிங்2, விஐபி2, மணல் கயிறு2, பில்லா2, ஜித்தன்2, கோ2, சென்னையில் ஒரு நாள்2 ஆகியவை தோல்வியை தழுவியது.

அதுபோல் அண்மையில் வெளியான விஸ்வரூபம்2, சாமி2 மற்றும் சண்டக்கோழி2 படங்களும் முதல் பாகத்தை போல ஹிட் அடிக்கவில்லை.

முதல் பார்ட்டில் தந்த சுவாரஸ்யத்தை இயக்குனர்கள் 2ஆம் பாகத்தில் தரவில்லை என கூறப்படுகிறது.

மேலும் நடிகர், நடிகைகளின் தேர்விலும், திரைக்கதை அமைப்பதிலும் இயக்குனர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மாபெரும் சூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா படத்தின் 2ஆம் பாகத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு பாட்ஷா. அந்த படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பது சரியல்ல என ரஜினி உஷாராக தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

அதுபோல் மற்ற டைரக்டர்களும் உஷாராக இருப்பார்கள் என நம்புவோம்.

விரைவில் எந்திரன் படத்தின் 2ஆம் பாகம் 2.0 ரிலீஸாகவுள்ளது.

அதுபோல் இந்தியன்2, தேவர் மகன்2 ஆகிய படங்களில் கமல் நடிக்கவுள்ளார்.

அதுபோல் உள்ளே வெளியே 2 படத்தை பார்த்திபன் இயக்கவுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பாகுபலி படமானது ஒரே கதையை 2 பாகங்களாக எடுத்திருந்தார் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.

Failure of Sequel movies in Tamil Cinema

More Articles
Follows