‘பொன்னியின் செல்வன்’ படத்தை நாடே கொண்டாடுகிறது – கார்த்தி

‘பொன்னியின் செல்வன்’ படத்தை நாடே கொண்டாடுகிறது – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில்…

” பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. மேக்கப் போட்ட பிறகு முதல் காட்சி கோயில் ஒன்றில் எடுக்கப்பட்டது முதல் அனைத்து அனுபவமும் மனதில் மறையாமல் இருக்கிறது. அனைவரும் இணைந்து குடும்பம் போல் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது புதிது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒரு குடும்பமாக பணியாற்றியதும் மறக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு மன நிறைவை அளித்திருக்கிறது.

இதைவிட பொன்னியின் செல்வன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக குழுவாக ஒவ்வொரு இடத்திற்கும் பயணித்த அனுபவமும் புதிது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம். இது ஒரு முக்கியமான பதிவு. இதை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று, அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

தற்போது பான் இந்தியா சீசன் என்பதால், இந்த படத்தைப் பற்றி தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய இந்திய மொழிகள் பேசும் மக்களிடத்திலும் சென்று அறிமுகப்படுத்தினோம். ஏனெனில் நம்மிடம் இவ்வளவு அழுத்தமான கதையம்சம் கொண்ட படைப்பு இருக்கிறது.

இதனை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லும் போது தன்னம்பிக்கையும் இருந்தது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இப்படத்தை பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது. இந்த தருணத்தில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் இடம்பெற்ற சிறிய சிறிய விசயங்களை கூட நுட்பமாக விவரித்து பாராட்டி எழுதி இருந்தனர். இதையெல்லாம் வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது உண்மையில் சந்தோஷமாக இருந்தது.

பொன்னியின் செல்வன் நாவலை வாசித்து விட்டு, அதனை படமாக திரையரங்குகளில் பார்க்கும்போது மாயாஜாலம் நடத்திய மணி சாருக்கு நன்றி. லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் ஆண்டு கணக்கில் ஊறப் போட்டிருந்த கதாபாத்திரங்களையும், கதையையும் திரையில் கொண்டு வருவது எளிதல்ல.

இந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்று யாரும் மணிரத்னத்தை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மணி சார் தான், நான் கூடுதல் சுமையை தூக்குவேன். இதனை தூக்குவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன் என்று சொல்லி, பொறுப்பை உணர்ந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழிநடத்தி,, உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை வழங்கியதற்கும் நெஞ்சார்ந்த நன்றி. ” என்றார்.

Karthi speech at Ponniyin Selvan success meet

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை எதிர்பார்க்கல – தமிழ் குமரன்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை எதிர்பார்க்கல – தமிழ் குமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில்…

” பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து, கைவிட்டார்கள்.

அதனை கையில் எடுத்து இந்த படத்தை உருவாக முக்கிய காரணமாக இருந்த லைகா குழும தலைவர், எங்கள் அண்ணன் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தினமும் இது குறித்த தகவல்களை ஆர்வமுடன் கேட்டறிவார்.

அவருக்கு நூற்றுக்கணக்கான தொழில்களும், வணிகமும் இருந்தாலும், திரைப்படத் தயாரிப்பில் வேறு படங்களைத் தயாரித்து வந்தாலும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மீது மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். ‘பொன்னியின் செல்வன்’ படம் தயாரானவுடன், நானும் சுபாஸ்கரன் அண்ணனும் படத்தை பார்த்தோம். ‘இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும்’ என்றும், ‘இந்த திரைப்படம் வேற லெவலில் ரீச் ஆகும்’ என்றும் முழு நம்பிக்கையுடன் பேசினார்.

இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் இந்த திரைப்படத்தை நாங்கள் சொந்தமாக வெளியிட்டோம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்னம் தான். அவர் இல்லையென்றால் இது போன்ற படைப்பை வழங்கி இருக்க இயலாது. இது எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது. இத்தனை பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடத்தில் ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு தங்களது நிறுவனத்தின் சொந்த படைப்பாக கருதி விளம்பரத்தில் பங்களிப்பு செய்த சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், எங்களது நிறுவனத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படத்தில் சரித்திர காலகட்ட நாயகர்களாகவே தோன்றிய நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன் ஆகியோருக்கும் நன்றி.” என்றார்.

gkm tamil kumaran speech at Ponniyin Selvan success meet

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மணிரத்னம்.; அவரை கொண்டாட வேண்டும் – ஜெயம் ரவி

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மணிரத்னம்.; அவரை கொண்டாட வேண்டும் – ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அந்த விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேசுகையில்…

” நல்ல படைப்பை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. தமிழ் ஊடகங்கள் மட்டுமில்லாமல்.. இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல்.. சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பொன்னியின் செல்வன் படைப்பை கொண்டாடுகிறார்கள். இன்று உலகம் டிஜிட்டல் மயமான பிறகு அனைத்தும் எளிதாக இருக்கிறது.

நட்சத்திரங்களைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் விசயங்கள்.. எங்களை விரைவாகவும், எளிதாகவும் வந்தடைகிறது. உலகம் முழுவதும் அனைவரும் இந்த படைப்பை விமர்சனம் செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் மணி சார் தான்.

அவர் நாற்பது வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பை வழங்கி கலை சேவை செய்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று துல்லியமாக தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மணி சார் மற்றும் சுபாஸ்கரன் சார் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வெற்றியைக் கடந்த வாழ்த்துக்கள்.

இந்த தருணத்தில் நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை அளித்துவிட்டு, இயக்குநர் மணிரத்னம் அமைதியே உருவமாக அமர்ந்திருக்கிறார்.

இவரை நாம் கொண்டாட வேண்டும். அவரின் கண் முன்னால், அவரை வைத்துக் கொண்டு அனைவரும் பேச வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும். ” என்றார்.

Jayam ravi speech at Ponniyin Selvan success meet

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் வாரிசு கல்வி செலவையும் ஏற்கும் விஷால்.

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் வாரிசு கல்வி செலவையும் ஏற்கும் விஷால்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (06.11.2022) 11 ஜோடிகளுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலையுடன் சீர்வரிசையோடு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

அந்த விழாவில் அவர் பேசியதாவது:

இங்கு வந்திருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும், திருமணம் ஆன 11 தம்பதிகளுக்கும், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய என் தம்பி கண்ணனுக்கும், மற்ற மாநில செயலாளர்கள் அத்துணை பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மாநகராட்சி ஊழியர்ர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹரி, கண்ணன் மற்றும் 22 பேருக்கும் நன்றி.

ஏனென்றால் எனக்கு பட்டு வேஷ்டி சட்டை அணிவது மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அது பயன்படும். பல மாதங்களுக்குப் பிறகு இன்று எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு நாள் கண்ணன் இந்த விழாவை பற்றி யோசனை கூறினார். ஆனால் எனக்கு படப்பிடிப்பில் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருந்தது.

சிகிச்சைக்காக கேரளா சென்று வந்தேன். பின்பு இந்த தேதியை தேர்ந்தெடுத்த முடிவு செய்தோம். இன்று என் குடும்பம் பெரிதாகி விட்டது. எனக்கு 11 தங்கைகள் கிடைத்திருக்கிறார்கள். தங்கை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவர்களை நான் எனது உடன்பிறந்த தங்கைகள் போலவே பார்க்கிறேன். ஆகவே, மாப்பிள்ளைகள் அனைவரும் என்னை வேட்டியை மடித்துக் கட்ட வைத்து விடாதீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம் என்று இல்லாமல் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன்.

என் தங்கைகளிடம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். அதற்கு மாப்பிளைகளாகிய நீங்கள் தான் முழு பொறுப்பு.
என் தங்கைகளை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதேபோல் இந்த 11 தம்பதிகளின் குழந்தைகளுடைய கல்வி செலவு மற்றும் எதிர்காலத்தை தேவி அறக்கட்டளை பார்த்துக் கொள்ளும்.

அதற்காக நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் அனைவரின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தால் நான் தானாகவே மகிழ்ச்சி அடைவேன்.

மக்கள் நல இயக்கம் தொடங்கியதற்கு ஒரே ஒரு விஷயத்திற்காக தான். இந்த நோக்கமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த சமுதாயத்திற்கு இறங்கி வேலை செய்து நல்லது செய்ய வேண்டும் இன்று ஒரு வார்த்தை தான் கூறினேன். யார் இந்த மனநிலையில் இருக்கிறீர்களோ அவர்கள் என்னுடன் வாருங்கள் என்று கூறினேன்.

ஏனென்றால், ஒரே ஆளாக என்னால் இதை செய்ய முடியும். ஆனால், பல கைகள் கோர்த்தால் பலருக்கு இந்த விஷயம் சென்று சேரும் என்று நம்பி இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம்.

சொந்த தம்பிக்கு நன்றி சொல்வது தவறு. ஆகையால், ஹரிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன். எது சொன்னாலும் அதை நன்றாக அலசி ஆராய்ந்து சரியான ஆட்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் சேருவதற்கான விஷயங்களை செய்தோம்.

அதேபோல், சௌந்தரும் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான நோட்டுகள் பேனா பென்சில்கள் வாங்கி கொடுக்கும்படி கேட்டார். அதையும் செய்தேன். பொதுவாக எந்த ஒரு கடை திறப்பு விழாவிற்கு நான் செல்லும் போதும் எனக்கு கொடுக்கும் தொகையை அப்படியே இது போல தேவைப்படும் மாணவர் மாணவியர்களுக்கு உதவி புரிந்து வருகிறேன்.

அதே கடை உரிமையாளர்களிடம் நீங்கள் எனக்கு கொடுக்கும் தொகை 100 குழந்தைகள் படிப்பதற்கு உதவும் என்று கூறுவேன். இது போன்ற திறப்பு விழாக்களை அனைத்தும் நான் எப்போதும் ஒப்புக்கொண்டு வருகிறேன். இது போல் ஒரு விழா நடத்துவதற்கு இந்தப் பகுதியில் என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணமில்லை.

மனதார செய்து வருகிறேன். இதற்கு உதவி புரிந்த திருவள்ளூர் மாவட்ட தம்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது போல் தொடர்ந்து அடுத்த மாவட்டங்களுக்கும் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

அம்மாக்கள் எங்களுக்கு எப்போது பட்டுப் புடவை வாங்கி கொடுப்பாய்? 11 பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறாய்! நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்று கேட்டார்கள்.

ஒரு வார்த்தை சொன்னால் அதிலேயே நிற்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். கடவுளை நம்புகிறேன், உங்களை நம்புகிறேன், இந்த பூமியை நம்புகிறேன், அடுத்த வருடம் எத்தனை தடைகள் வந்தாலும், மனது சுத்தமாக இருந்தால்… லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக தீர்ப்பு வரும், அதுவும் நல்ல தீர்ப்பு வரும். அதுக்காக சங்கத்தின் கட்டிட பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

இடம் பற்றாக்குறையாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் வரவேண்டும். ஒவ்வொரு வருடமும் அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சுமார் 3500 நாடக நடிகர் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கத்தினர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு முதல் ஓடி உழைத்து வருகிறோம். இன்னும் பாதி தூரம் இருக்கிறது. அதை கடந்து கட்டிடம் கட்டி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி வெற்றி அடைவோம் என்று நம்புகிறோம்.

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நான் வாழ்த்துவதை விட இங்கு வந்திருக்கும் நிறைய அம்மாக்கள் மனதார வாழ்த்தினால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இது போன்று விழாக்களுக்கு சென்று வந்த பின் படப்பிடிப்பிற்கு செல்லும் போது உற்சாகமாக இருக்கும். என்னைப் பற்றி யார் என்ன கூறினாலும் நான் காதில் வாங்கிக் கொள்ள மாட்டேன்.

என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை கடவுள் வந்து சொல்கிறார் என்று நினைத்து அதை அப்படியே செய்து விடுவேன். சமீபத்தில் கூட நான் காசிக்கு சென்று வந்தது அரசியல் ஆக்க பார்த்தார்கள். ஆனால், அரசியல் நோக்கத்திற்காக காசி செல்லவில்லை. சில விஷயங்களை அங்கு சென்றால் தான் உணர முடியும். ராமகிருஷ்ணா மற்றும் மனோபாலா சாருக்கு நன்றி. டிசம்பர் 22ஆம் தேதி நான் நடித்த லத்தி படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மேலும், சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் என்னிடம் வந்து, அண்ணா அண்ணி பென்ஸ் மற்றும் ஆடி கார் போன்ற விலையை வந்த கார்களில் வரும் மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் என்னை சேர்த்து விடுங்கள்.

நான் நன்றாக படித்து என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். கல்வி என்று வந்த பிறகு நான் பிச்சை எடுக்க தயங்க மாட்டேன். அவர் கேட்டுக் கொண்டது போல் நான் கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்தேன். சில மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்தார். அண்ணா என்னுடைய முதல் செமஸ்டரில் நான் தான் முதல் மார்க் வாங்கி இருக்கிறேன் என்றார்.

இதை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், அந்த பெண்ணிடம், நீ மூன்று வருடம் கழித்து தங்கப்பதக்கம் வாங்க வேண்டும். அதன் பிறகு உன்னை போல் இருக்கும் இன்னொரு பெண்ணை நீ படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.

இந்த விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த பாபு சாருக்கு நன்றி அவருடைய நல்ல மனதை நான் புரிந்து கொண்டேன். இனிமேல் நான் அவரை விட மாட்டேன். இது போன்ற விழாக்களுக்கு தொடர்ந்து அவரை அழைப்பேன் என்றார்.

விஷால்

Actor Vishal gets 11 couples married today at Chennai

மீண்டும் ஆலுமா டோலுமா கூட்டணி.; அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த அனிருத்

மீண்டும் ஆலுமா டோலுமா கூட்டணி.; அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகும் ‘துணிவு’ படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் ‘சில்லா சில்லா’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பதனை ஜிப்ரான் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் அனிருத் பாடிய ‘ஆலுமா டோலுமா’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Anirudh sung Chilla Chilla for AJITH in Thunivu

Once A King Always A King.; மீண்டும் இணைந்த கமல் – மணிரத்னம்.; முதன்முறையாக ஏஆர் ரஹ்மான்

Once A King Always A King.; மீண்டும் இணைந்த கமல் – மணிரத்னம்.; முதன்முறையாக ஏஆர் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை இந்தியளவில் கொண்டு சென்றவர்களில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தை முதலிடத்தில் வைக்கலாம்.

இவர்கள் இருவரும் புதிய யுக்திகளை கையாண்டு தமிழ் சினிமாவின் தரத்தை இந்திய அளவில் உயர்த்தினர்.

இன்றளவிலும் பாலிவுட் பிரபலமான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்களும் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த ஈடு இணையற்ற கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. கமல்ஹாசனின் 234 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை கமலும் மணிரத்னமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கமல் நடிக்க மணிரத்னம் இயக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார். அதுபோல கமலின் இந்தியன், தெனாலி உள்ளிட்ட படங்களுக்கும் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஆனால் 35 வருடங்களுக்கு பிறகு கமல் மணிரத்னம் இணையும் படத்திற்கு ரகுமான் இசையமைப்பது இதுவே முதன் முறையாகும்.

2024ல் இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நாளை நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் இன்று மாலை இந்த அறிவிப்பை ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்று இருக்கிறார்.

இந்தப் பட அறிவிப்பில் Once A King Always A King என குறிப்பிட்டுள்ளனர்.

After 35 years Kamal and Maniratnam join together

#KH234 #OnceAKingAlwaysAKing

#Ulaganayagan #KamalHaasan

@ikamalhaasan #ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM

More Articles
Follows