தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் 1, சர்தார் என மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்தி.
இந்த ஆண்டு 2023 ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியானது.
இதனையடுத்து கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.
ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இன்று மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான போஸ்டரில் நடிகர் கார்த்திக் தங்கத்தால் ஜொலிப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் ஜப்பான் யார் என்பதை நடிகர் சிம்பு இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவார் என அறிவித்துள்ளனர்.
அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக வலம் வரும் சுனில், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர இயக்குநர் விஜய் மில்டன் இப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்
Karthi shining in gold on his birthday; Who is Japan? Simbu will say.!