கார்த்தி – ராஜூமுருகன் இணையும் படத்தின் தலைப்பு இதுதானா.?

கார்த்தி – ராஜூமுருகன் இணையும் படத்தின் தலைப்பு இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதனையடுத்து அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி.

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் மோதும் விஜய்சேதுபதி

இந்த படத்திற்காக கார்த்தியின் தோற்றம் மிக வித்தியாசமான முறையில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இணையும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று பெயரிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படம் வழக்கம்போல ராஜூமுருகன் பாணியில் இருக்கும் என நம்பலாம்.

பான் இந்தியா படத்தில் இணையும் விஷ்ணு விஷால் & செல்வராகவன்

பான் இந்தியா படத்தில் இணையும் விஷ்ணு விஷால் & செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

இவர் தற்போது சொந்தமாகவும் படங்களை தயாரித்து வருகிறார். இவர் அடுத்த தயாரித்து நடிக்க உள்ள படத்திற்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளார்.

இவரின் முதல் மனைவியின் பெயர் ரஜினி நடராஜ். தற்போது இவர்கள் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு பிறந்த மகன் ஆர்யன் என்ற குழந்தையை விஷ்ணு விஷால் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தான் இந்த படத்திற்கு தனது மகனின் பெயரான ‘ஆர்யன்’ என தலைப்பு வைத்துள்ளார்.

இதில் செல்வராகவன், வாணி போஜன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றனர்.

க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த படத்திற்கு சுபாஷ் விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

இயக்குநர் கே. பிரவீண் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கின்றனர்.

‘த பர்பெஃக்ட் கிரைம் ஸ்டோரி: என்ற டேக் லைனுடன் தயாராகும் இந்த படம் பான் இந்திய படமாகும்.

விஷ்ணு விஷால் கைவசம் தற்போது ‘மோகன்தாஸ்’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

The special pooja video of #Aaryan, out now. Catch the glimpses from the pooja!

@TheVishnuVishal @selvaraghavan, @shraddhasrinath, @vanibhojanoffl.

Directed by @adamworx.

https://twitter.com/VVStudioz/status/1565995588638081025/video/1

Here’s the first look poster of @TheVishnuVishal’s #Aaryan. A perfect crime story!

Directed by @adamworx.

@VVStudioz @selvaraghavan @shraddhasrinath @vanibhojanoffl @vishnu_subhash @SamCSmusic @Sanlokesh @silvastunt #indulalkaveed @SVynod @kunaldaswani @prathool @thanga18 @DuraiKv @teamaimpr @UrsVamsiShekar @decoffl

சிம்பு படம் ரிலீஸ்.: முதல்வருக்கு கூல் சுரேஷ் வைத்த கோரிக்கையால் கடுப்பான நெட்டிசன்கள்

சிம்பு படம் ரிலீஸ்.: முதல்வருக்கு கூல் சுரேஷ் வைத்த கோரிக்கையால் கடுப்பான நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர் கூல் சுரேஷ்.

இவர் அண்மைக்காலமாக youtubeல் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு புதிய படங்களும் ரிலீஸ் ஆகும் நாள் அன்று படத்தை பார்த்து விட்டு தியேட்டர் வாசலில் படத்தை பற்றி விமர்சனம் செய்வார்.

எனவே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

மீடியாக்களும் இவரின் பேச்சைக் கேட்க ஆவலாக காத்திருப்பர்.

எனவே இவருக்கு வெள்ளிக்கிழமை நாயகன் என்ற பட்டத்தை இவரது ரசிகர்கள் வழங்கி உள்ளனர். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று இவர் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்…

“செப்டம்பர் 15ஆம் தேதி வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆகிறது.

அன்றைய தினம் தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என சிம்பு ரசிகர்கள் சார்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக கருத்துக்களைச் சொல்லி வந்தாலும் மற்ற நெட்டிசன்கள் இவரை திட்டி வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் கூல் சுரேஷ் நிச்சயம் கண்டு கொள்ள மாட்டார். ஏனென்றால் அவரின் பெயரில் தான் ஆல்ரெடி கூல் இருக்கிறதே.

எனவே அவர் கூலாக தான் இருப்பார் என நம்புகிறோம்.

புனித தலமான காசியில் உருவாகி காதலின் புனிதத்தை சொல்லும் ‘பனாரஸ்’ பட ரிலீஸ் தேதி

புனித தலமான காசியில் உருவாகி காதலின் புனிதத்தை சொல்லும் ‘பனாரஸ்’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான ‘பனாரஸ்’ திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.

ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யுவனின் வாழ்க்கை திரைப்படமானால் ஹீரோ யார்? அவரே அளித்த சுவாரசிய பதில்

யுவனின் வாழ்க்கை திரைப்படமானால் ஹீரோ யார்? அவரே அளித்த சுவாரசிய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.

இளையராஜாவின் வாரிசு என அறிமுகமானாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இசை ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் யுவன்.

இதுவரை கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ஓரிரு படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர் தனது இசை பயணத்தை தொடங்கி 25 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்களுடன் கலந்து உரையாடினார்.

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அதில் ஒருவர் உங்களின் வாழ்க்கை படத்தை தயாரிக்க இருந்தால் அதில் யாரை நடிக்க வைப்பீர்கள்? யாரை நடிக்க வைக்க உங்களுக்கு விருப்பம்? என கேட்கப்பட்டது

“தற்போது வரை அது போன்ற எண்ணங்கள் எனக்கு இல்லை. ஒருவேளை என் வாழ்க்கை படமானால் அதில் நானே நடிக்க விருப்பம்” என பதிலளித்தார்.

JUST IN நான் மாஸா.? க்ளாஸா.? வெந்து தணிந்தது காடு விழாவில் சிம்பு பன்ச் டயலாக்

JUST IN நான் மாஸா.? க்ளாஸா.? வெந்து தணிந்தது காடு விழாவில் சிம்பு பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் கலந்து கொண்டு “லூசு பெண்ணே….” என்ற பாடலை சிம்புக்காக பாடினார்.

நடிகர் சிம்பு பேசும்போது…

“பத்து வருடங்களுக்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை விழாவுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட். நான் வேட்டையாடு விளையாடு இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.. அந்தப் படமும் சூப்பர் ஹிட்.

அவர் நடித்த விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் சென்று இருந்தேன்.. இன்று என் பட விழாவுக்கு அவர் வந்திருக்கிறார். மீண்டும் அந்த மேஜிக் வெற்றி நடைபெறும் என நம்புகிறேன்.

யுவன் என் படத்திற்கு ஹிட் பாடல்களை கொடுப்பது போல ரகுமானும் எனக்கு ஹிட் பாடல்கள் கொடுத்து வருகிறார்.

முதலில் எனக்கு ஒரு காதல் கதையை சொன்னார் கௌதம் மேனன். ஆனால் நான் அது வேண்டாம் வேறு ஏதாவது சொல்லுங்கள்.. என்றேன்

இந்த கதையை சொன்னார். இந்த படத்திற்காக நான் 19 பையனாக மாறி உள்ளேன்.. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் இல் ஒரு விஷயம் இருக்கு.

சென்ற முறை மாநாடு இசை விழாவில் அழுதுவிட்டேன். அந்த படம் ஹிட்டானது. இப்போ அழுதா செண்டிமெண்ட்டா ஹிட் ஆகும் சொன்னாங்க. என் கண்ணீரை ஏற்கனவே துடைச்சு விட்டுட்டாங்க.

இந்த காலத்தில் நிறைய பேர் நன்றி மறந்துடறாங்க. செஞ்ச உதவியை யாரும் மறக்காதீங்க.. அப்பா, அம்மாவை பார்த்துக்கோங்க.. என் ரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே நீங்க இல்லன்னா நான் இல்ல. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்.

நான் மாசா கிளாஸா சொல்ல விரும்பல. நாம படம் பண்றோம். அந்த ஒர்க்கு மாஸா கிளாஸ்.. என்று மக்கள் தான் சொல்லணும்.

இவ்வாறு சிம்பு பேசினார்.

Simbu mass speech at Vendhu Thanindhathu Kaadu Audio Launch

More Articles
Follows