விநியோகத்தில் அஜித்தை முந்திய கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே தற்போது தயாராகும் தமிழ் படங்கள் கேரள ரசிகர்களை குறிவைத்தே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட படங்கள் கேரளாவில் ரூ. 1.6 கோடிக்கு விற்பனை ஆனதாம்.

தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள காஷ்மோரா படத்தின் விநியோக உரிமை மட்டும் ரூ. 1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் கபாலி உரிமையை மோகன்லால் ரூ. 8 கோடிக்கு பெற்றது தனிக்கதை.

விக்ரம் படத்திற்கு விஜய்யால் வந்த சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புலி வாலை பிடித்த கதையா இருக்கே… என்றொரு பழமொழி தமிழகத்தில் உண்டு.

அப்படித்தான் புலி படத்தின் தோல்வி தொடர்கதையாகி வருகிறது.

விஜய் நடித்த இப்படத்தை பிடி செல்வகுமாருடன் ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரித்திருந்தார்.

இந்நிலையில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள விக்ரமின் இருமுகன் படத்திற்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புலி படத்தின் நஷ்டத்தை ஈடுக்கட்டினால் தான் விக்ரம் நடித்த இருமுகனை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

கமிட் ஆகியும் விஜய்யுடன் நடிக்காமல் தவிக்கும் அபர்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி 60 படத்தில் விஜய்யுடன் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார் அபர்ணா வினோத்.

இவருடன் சேர்த்து நிறைய மலையாள நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் இவரது பெற்றோர்களாக நடிக்கும் விஜயராகவன் மற்றும் சீமா ஆகியோரும் மலையாள நட்சத்திரங்களே.

இந்நிலையில் இப்படம் குறித்து அபர்ணா தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது..

“விஜய்யுடன் நடிக்க கமிட் ஆனதில் இருந்து அவருடன் நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

ஆனால், இதுவரை அவருடன் இணைந்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இனிமேல்தான், இருவருக்குமான காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம்.

அதற்குள் அபர்ணா தவிக்கும் தவிப்பை பாருங்களேன்.

விஜய்யுடன் மோதும் சிம்பு; காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு தளபதி என பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

இப்படத்தை 2017 பொங்கல் ரிலீஸாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தையும் வெளியிட இருக்கிறார்களாம்.

முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் மோதுவதால் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் சர்க்கரை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ச்சீட்டிங் செய்தாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தை ஆர்டி ராஜாவின் 24 ஏஎம் ஸடூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனையடுத்து நிவின்பாலி, பிரகாஷ் ராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

இதனிடையில் மேலும் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதில் இரண்டிலும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை மோகன் ராஜா இயக்கவும், மற்றொரு படத்தை பொன்ராம் இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு தனது அடுத்தடுத்த படங்களை சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டு வருகிறார் என தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் புகார் தர முடிவு செய்திருக்கிறார்களாம்.

சிவ சிவா… இதெல்லாம் உண்மையா?

மதுரை மக்களை மலைக்க வைத்த ‘மங்காத்தா’ போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிச்சயமாக இவ்வருடம் அஜித் நடிப்பில் எந்த படமும் வராது.

ஆனாலும் துவண்டு விடாத இவரது தீவிர ரசிகர்கள் எதையாவது செய்து, மற்ற ரசிகர்களை உற்சாகமாக்கி விடுகின்றனர்.

அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படம் மங்காத்தா. அந்தளவு மகத்தான வெற்றியைப் இப்படம் பெற்றது. இது அவரது 50வது படமாகும்.

இப்படம் ரிலீஸ் ஆகி 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் நாளை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் காமென் டிபி, ஹேஷ்டேக் க்ரியேட் செய்து ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

மேலும் மதுரை ரசிகர்கள் 400 அடிக்கு சுவர் போஸ்டர் அடித்து கலக்கி வருகின்றனர்.

இந்த போஸ்டர் காண்பதற்கு சீன பெருஞ்சுவரை போல நீளமாக இருப்பதால், அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்களாம்.

More Articles
Follows