#Breaking: காவிரியை போல் காலா தீர்ப்பையும் மதிக்காத கர்நாடக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

ஆனால் அந்த தீர்ப்பை கர்நாடக அரசு பெரும்பாலும் மதிப்பதே இல்லை.

இந்நிலையில் இன்று காலா ரிலீஸ் குறித்த தீர்ப்பு வெளியானது.

கர்நாடக மாநிலத்தில் காலா வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது…

கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது

காலாவை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்.

காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய உயர்நீதிமன்ற உத்தரவு நகல் வரவில்லை

காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ”

என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சத்யா-மானசா நாயர் நடித்துள்ள •என்னோடு நீ இருந்தால்• ஜூன் 15ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது..

லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது.

யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம்.

அந்த பாதிப்பு என்ன ? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்த படம் பார்த்த பிறகு அதை உணர்த்து அதிர்சியடையும் வண்ணம் படத்தின் திரைக்கதை இருக்கும்.

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதாமாக ரசிக்கவைக்கும்.

சென்சாரில் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது மகிழ்ச்சி படம் ஜூன் 15 ம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் மு.ரா.சத்யா.

ஒளிப்பதிவு – நாகசரவணன்
இசை – கே.கே
எடிட்டிங் – ராஜ்கீர்த்தி
கலை – எஸ்.சுப்பிரமணி
நடனம் – கேசவன்
ஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் – மு.ரா.சத்யா
தயாரிப்பு – எஸ்.யசோதா

Sathya Maanasa starrer Ennodu Nee Irundhal release on 15th June 2018

கட்டிப்பிடி வைத்தியத்தால் காவிரி வந்துடுமா..? கமலுக்கு அமைச்சர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேசினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது காவிரி விவகாரத்தில் பேசி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று கமல் தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

தண்ணீர் விட காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது. அந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் கமல் கர்நாடக முதல்வரை சந்தித்து பேசயுள்ளார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் சினிமா போல கமல் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் எப்படி தண்ணீர் வரும்?

கர்நாடக முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்தது சரியான நடவடிக்கை அல்ல” என்றார்.

TN Minister Jayakumar reaction to Kamal and Karnataka CM meet regarding Cauvery issue

காலா படத்தை பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த ஐடி நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ஜீன் 7ல் வெளியாகிறது.

இப்படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில தியேட்டர்களை தவிர பல இடங்களில் முதல் நான்கு நாட்களுக்கு தியேட்டர்கள் இப்போதே புக் ஆகிவிட்டது.

கேரளாவில் மட்டும் 300க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் தினத்தன்று தன் கம்பெனி ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது கேரளாவை சேர்ந்த ஒரு ஐடி நிறுவனம்.

அந்த சர்குலரில் உங்கள் ஒவ்வொருவரின் கோரிக்கைக்காக காலா ரிலீஸ் அன்று கம்பெனிக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT company granted holiday for their company to watch Kaala on its release date

அந்த நிறுவனத்தின் காலா ஹாலிடே சர்க்குலர் இதோ….

Big News: காலாவை திரையிட பாதுகாப்பு கொடுங்கள்; தனுஷ் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜீன் 7-ம் தேதி வெளியாகிறது.

காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்பினர் கூறி வருகின்றனர்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இப்பட தயாரிப்பாளர் தனுஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது.

அதனால் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் சற்றுமுன் விசாரணைக்கு வந்தது

இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் காலா படத்தை திரையிட கட்டாயப்படுத்த முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து வாதாடினார்.

எனவே இறுதியாக படம் திரையிடப்படுவதற்கு அரசு பாதுகாப்பளிக்க என அவர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Karnataka Govt must give protection to Kaala screening theatres Order by High Court

சினிமாவை கலாய்த்த தமிழ்படம்2-க்கு பாராட்டு; அரசியலை கலாய்த்த “டிராபிக் ராமசாமி*க்கு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி முதல் விஜய், அஜித் வரை எல்லா படங்களையும் கலாய்த்து தமிழ்ப்படம் 2.0 படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.

அதில் சினிமாவை மட்டுமே கலாய்த்து இருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்ல் கோமாளி என்ற பாடலில் இந்திய நாட்டில் தற்போது நடந்து வருகின்ற அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கலாய்த்துள்ளனர்.

எனவே அந்த படக்குழுவினர் மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளது.

இந்த பாடல் குறித்து விவரம் வருமாறு…

மத்திய மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் கோமாளி பாடல் நேற்று வெளியானது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் நக்கலடிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

பெரியார் பற்றி பதிவிட்டு பின் அட்மின் செய்த தவறு என்று சொன்ன எச்.ராஜா முதல் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் வரை பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து போட்டு தாக்கியிருக்கிறார்.

பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு தரப்பில் இருந்து படக்குழுவினர்க்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Komaali 2nd Single Track from Traffic Ramasamy made an issue

More Articles
Follows