மக்கள் வேண்டாம் என முடிவெடுத்தால் காலா-வை ரிலீஸ் செய்ய மாட்டோம்…: முதல்வர் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜீன் 7ல் வெளியாகவுள்ளது.

அண்மையில் காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகத்திற்கு எதிராக ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

எனவே கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் காலா திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்து அறிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய ரஜினி, கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தை தென்னிந்திய வர்த்தகசபை பார்த்துக்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.

அதற்கான பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் முதல்வர் குமாரசாமிக்கு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ரஜினியின் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை எனவும், மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சமூக விரோதிகள் பற்றி ரஜினி சொன்னது சரிதான்.; ஆதாரம் தருகிறார் லிங்கா நஷ்ட புகழ் சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் மூலம் திரைப்பட விநியோகஸ்தராக பலராலும் அறியப்பட்டவர் சிங்காரவேலன்.

லிங்கா நஷ்டத்தை ரஜினி திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும் என பல மேடைகளில் பேசி பாப்புலர் ஆனவர் இவர்.

அன்று ரஜினியை எதிர்த்து பேசியவர் இன்று ரஜினிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

அடிப்படையில் சிங்காரவேலன் ஒரு கப்பல் பொறியாளர். இவருடைய நிறுவனம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் கெமிக்கல் டேங்கர் கப்பலை பராமரித்து வருகிறது.

அவர் ஸ்டெர்லைட் குறித்தும், ரஜினிகாந்த் பேசியது குறித்தும் சில விளக்கங்களை கொடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் செய்திகளும், அரசியல் பிரமுகர்கள் சிலரால் கூறப்படும் தகவல்களும் திரித்து, மிகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது.

ஸ்டெர்லைட் ஆலை தாமிர உற்பத்தி செய்யும் போது சல்பர் – டை – ஆக்சைடை வெளியேற்றுவதாகவும், அந்த வாயு கேன்சரை உருவாக்குவதாகவும் ஊடகங்களில் பரப்பப்படுகிறது.

ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் சல்பர் டை ஆக்சைடை சல் ப்யூரிக் அமிலமாக மாற்றி கப்பல் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் காக்கிநாடா, ஒரிஸ்ஸாவில் பாரதீப், விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள உரத் தொழிற்சாலைகளுக்கு விற்று வருகிறது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்பீக் உரத் தொழிற்சாலைக்கும் சல் ப்யூரிக் அமிலத்தை விற்கிறது.
ஆலையிலிருந்து வெளிவரும் தேவையற்ற வாயுவையும் அமிலமாக மாற்றி, அதனை விற்கிறது ஸ்டெர்லைட். வருமானம் தரக்கூடிய வாயுவை ஸ்டெர்லைட் ஏன் வெளியேற்ற வேண்டும்?

அதனைப் போல ஆலையிலிருந்து வெளிவரும் வாயு முதலில் குளிர்விக்கப்பட்டு, அதனை பின்னர் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டிக்குள் செலுத்தப்படுகிறது. கார்பன் உள்ளிட்ட தண்ணீரில் கரையும் பொருட்கள் நீரில் கரைந்த பின்பு, வாயு மட்டும் வெளிவருகிறது.

இதிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, ஆர்சனிக் போன்றவை தனியாக பிரிக்கப்படுகிறது. எஞ்சிய நஞ்சற்ற வாயு மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
கார்பன் கலந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு, தேவைக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த அளவு உள்ள தண்ணீர் கழிவுகள் நீராவி கொண்டு ஆவியாக்கப்படுகிறது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஸ்டெர்லைட் எந்த வித நச்சு வாயுவையும் வெளியேற்றவில்லை.

அதே வேளையில் தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இதிலிருந்து வெளிவரும் வாயுக்களான கார்பன் – டை ஆக்சைடு, கார்பன் மோனாக் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை சுற்றுப்புறத்திற்கு தீங்கை விளைவிக்கின்றன.

களத்தில் போராடும் மற்றும் போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் அனைத்து ஆலைகளையும் நேரில் ஆய்வு செய்தால் ஸ்டெர்லைட்டை எவருமே எதிர்க்கமாட்டார்கள்.

தூத்துக்குடியில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான ஒரு கெமிக்கல் ஆலை உள்ளது. இங்கு டைட்டானியம் – டை – ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் வாயுக்கள் குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை. அரசியல்வாதிகள் போராட கிளம்பினால் ” நியூஸ் 7 ” முகத்திரையை கிழிக்கும் என்ற பயம்.

தமிழ்நாட்டில் தொழில் நடத்தவேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு நியூஸ் சேனல் வைத்திருக்க வேண்டும் என்பதை வேதாந்தா நிறுவனம் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறது.

ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக எழுதியிருக்கிறானே என்று யாரும் என்னை விரோதியாக கருத தேவையில்லை.

ஸ்டெர்லைட் நிறுவனம் சல் ப்யூரிக் அமிலத்தை கப்பலில் அனுப்புகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அந்த கப்பலை என்னுடைய நிறுவனம் தான் பராமரித்து வருகிறது.

அதனால் எனக்கு தெரிந்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை குறிப்பிடுகிறேன்.

அதைப்போல, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமூகவிரோதிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று குறிப்பிட்டதை எல்லோரும் எதிர்க்கிறார்கள்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், ரஜினிகாந்த் கூறியதில் எந்தவித தவறுமில்லை. உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.

மார்ச் மாதம் இறுதியில் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட்டிற்கான உரிமத்தை புதுப்பித்து தரவில்லை.

எனவே ஸ்டெர்லைட் நிர்வாகம் உற்பத்தி எதையும் செய்யவில்லை. இதனால் எங்கள் நிறுவனத்தின் கப்பலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டோம். நாங்கள் கப்பலை நிறுத்தும் போது மே 30 ஆம் தேதி வரை கப்பலுக்கு தேவையான எரிபொருள், உணவு பொருட்கள், நீர், ஆகியவை இருந்தது.

மே 29 ஆம் தேதி வாக்கில் கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு சென்று டீசல், நீர், உணவுப்பொருட்கள் வழங்கலாம் என திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் மே 20 ஆம் தேதிக்கு பிறகு தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ளே புகுந்து பெரிய அளவிலான தாக்குதலை நடத்த உள்ளார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த நேரத்தில் தூத்துக்குடி பகுதியில் பிரபலமாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எனவே போராட்டத்தை பயன்படுத்தி கொள்ள பலர் முயல்வது தூத்துக்குடி முழுவதும் வெளிப்படையாகவே பேசப்பட்டது.

இதனால் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு கேட்டது. எங்கள் நிறுவன கப்பலில் வேலை செய்வோரில் சிலர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மூலமும் தகவல் உறுதியானது.

இதனால் மே 19 ஆம் தேதியே கப்பலை துறைமுகத்திற்கு வரவழைத்து அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்தனுப்பினோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சமூக விரோதிகள் அல்ல. அனைவரையும் சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடவுமில்லை.

மக்களுக்கே தெரியாமல் போராட்டத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டனர் என்பதே உண்மை.

99 நாட்கள் அமைதியாக போராடினோம் என்று சிலர் கூறுகிறார்கள். இதில் ஒரேயொரு சந்தேகம் மட்டும் எழுகிறது.

மார்ச் இறுதியிலேயே ஆலை மூடப்பட்ட பிறகு எதற்கு மே 22 வரை போராட்டம் என்பது புரியாத புதிராக உள்ளது.

தமிழக மாசு கட்டுப்பட்டு வாரியம் உரிமம் வழங்கியிருந்தால், போராடியிருக்கலாம். மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மார்ச் இறுதியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்த பிறகு, மே 22 அன்று நூறாவது நாள் ஆர்ப்பாட்டம் தேவைதானா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின் போட்டியாளர்களால் சிலர் தூண்டி விடப்படுகிறார்கள் என்பதையும், வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதையும் தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்.

கப்பலில் சல் ப்யூரிக் அமிலம் ஏற்றப்பட்ட டேங்கிலிருந்து சல் பர் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிவரும். ஆனால் இதை சுவாசித்த யாருக்கும் கேன்சர் வரவில்லை. நான்கு வருடமாக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கப்பலில் வேலை செய்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் வரவில்லை. எனவே பொதுமக்கள் வதந்தியை நம்பி பயப்பட தேவையில்லை என்பதையும் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

R. சிங்காரவேலன், முதன்மை கப்பல் பொறியாளர்.

Lingaa fame Distributor Singaravelan reaction to Rajini speech about Tuticorin Sterlite issue

கே.வி.ஆனந்த் படத்திற்காக லண்டன் பறக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் இப்படப்பிடிப்பு நிறைவடையவுள்ளது.

இதன்பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் இருவரும் இணைகின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதன்படி வருகிற ஜூன் 25-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.

அங்கு இரண்டு வாரங்கள் சூட்டிங் நடைபெறவுள்ளதாம்.

இளைஞர்களை புகை-மது பழக்கத்திற்கு அடிமையாக்கியவர் ரஜினி – வேல்முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று சென்னை முதல் தூத்துக்குடி, தூத்துக்குடி முதல் சென்னை வரை சென்றார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் கொடுத்த 3 பேட்டிகள் இன்றுவரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகளே காரணம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என ரஜினி எப்படி சொல்லலாம் என பல்வேறு கட்சியினரும் அவருக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டது போல விடிய விடிய ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களும் ரஜினி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது…

தான் நடிக்கும் படங்கள் ஓடுவதற்காக இளைஞர்களை புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கிய நடிகர் ரஜினிகாந்த்.

அவர்தான் தமிழகத்தின் சமூக விரோதி என குற்றச்சாட்டியுள்ளார்.

பாட்ஷா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் இணையும் ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் கலக்கிய ராதிகா தற்போது சின்னத்திரையின் மகா ராணிக்கு அளவுக்கு இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளார்.

அவர் ராடன் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த, நடித்த சீரியல்கள் செம ஹிட்டாகியுள்ளன.

ஓர் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பல வருடங்களாகப் பிடித்து வைத்திருக்கிறார் ராதிகா.

தற்போது அவர் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல், விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது

இதனையடுத்து தான் தயாரித்து நடிக்கும் புதிய சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ எனத் தலைப்பிட்டுள்ளார்.

ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இந்த சீரியலை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Baasha fame director Suresh Krishna going to direct Radhika

ஒரே நேரத்தில் ரஜினி-கமல் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜீன் 7ல் வெளியாகிறது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
இப்படத்திற்கு இளம் இசையைமப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் இரு துருவங்களின் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anirudh going to compose music for Rajini and Kamal movies

More Articles
Follows