அஜித் & சேரன் பட நாயகி விஜய்சேதுபதியுடன் இணைந்தார்

அஜித் & சேரன் பட நாயகி விஜய்சேதுபதியுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ஆட்டோகிராப் படத்தில் சேரனுக்கு மனைவியாக நடித்தவர் கனிகா.

மேலும் அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவையில்லாமல் நடிகைகளுக்கு டப்பிங்கும் செய்துள்ளார்.

சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்,விஜய் சேதுபதி நடிக்கும் 33வது படத்தில், அவரோடு இணைந்து நடிக்கவுள்ளார் கனிகா.

அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் என்பவரது இயக்கத்தில், சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் இந்த வாய்ப்பு.

ஆம்பளைக்கு எது அழகு…?; கல்யாணம் பற்றி அதுல்யா ஓபன் டாக்

ஆம்பளைக்கு எது அழகு…?; கல்யாணம் பற்றி அதுல்யா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)கோவையில் இருக்கும்போது குறும்படங்களில் நடித்தவர் அதுல்யா.

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

தற்போது நாடோடிகள் – 2, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன் வருங்கால கணவர் ஒரு பேட்டியில் குறித்துள்ளார்.

அதில்… ”தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு உண்மையானவராக பாதுகாவலராக ஆண் இருக்க வேண்டும். அதுதான் ஆணுக்கான அழகு.

அப்படிப்பட்டவரே எனக்கு பிடிக்கும். முகமோ, உடலோ, சாகசங்கள் செய்வதையோ ஒரு ஆணுக்கான தகுதியாக நான் நினைக்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு தடை..? கோர்ட் அதிரடி தீர்ப்பு

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு தடை..? கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ள காப்பான் படத்தை கேவி. ஆனந்த் இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிட தடை கோரி, சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த, ஜான் சார்லஸ் என்பவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்

அந்த மனுவில்…

சரவெடி என்ற தலைப்பில், ஒரு கதையை உருவாக்கினேன். விவசாயம், நதி நீர் பங்கீடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த கதையின் நோக்கம். இந்த கதையை, பதிவு செய்துள்ளேன்.

இயக்குனர், கே.வி.ஆனந்தை, 2017 ஜனவரியில் சந்தித்து, கதை பற்றி விவாதித்தேன். அவரும், பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில், காப்பான் பட சில காட்சிகளை பார்த்த போது அது என் கதையை காப்பி அடித்துள்ளது தெரிய வந்தது.

என் அனுமதி பெறாமல், கதையை படமாக்கியுள்ளனர். எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காப்பான் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், காப்பான் படத்தின் கதையும், சரவெடி என்ற தலைப்பில் உருவான கதையும் வேறு வேறு. இரண்டும் சம்பந்தமில்லை. எனவே மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி, சதீஷ்குமார் விசாரித்தார். மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்

மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு மகாமுனி படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்விகளுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார்,

“மஹிமாவிற்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?”

“அதுதான் எனக்கே தெரியவில்லை. எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயது முதலே நடிப்பின் மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம். நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்”

“முதல்பட அனுபவம் பற்றி சொல்லுங்கள்?”

“எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தினமும் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று நடித்துப் பார்ப்பேன். திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். ஆனால் சினிமாவில் நடிகையாக எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஒருமுறை கேரளாவிற்கு லொக்கேசன் பார்க்க வந்த இயக்குநர் சாமி சார் கண்ணில் நான் படவும், சிந்துசமவெளி படத்தில் ஒரு சிஸ்டர் கேரக்டருக்கு என்னை நடிக்க அழைத்தார். என் பள்ளிப்படிப்பு காரணமாக அப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆனால் அப்போது அவர்கள் மூலமாக என் போட்டோ சாட்டைப் பட இயக்குநர் கண்களில் பட அதன்பிறகு வந்த வாய்ப்பு தான் சாட்டை படம். சாட்டைப் படத்தில் நடிக்கும் போது எனக்கு சூட்டிங் பற்றி எதுவுமே தெரியாது. இயக்குநர் அன்பழகன் சார் தான் நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார். குறிப்பாக தமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் என்னை தமிழ் தெரியவில்லை என்பதற்காக கிண்டல் செய்தார்கள். நான் அப்போது எப்படியாவது இந்தப்படம் முடிவதற்குள் தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை உடன் நடிக்கும் மாணவிகள் துணையோடு சிறப்பாக நிறைவேறியது. தமிழில் முதல் பட அனுபவமே எனக்கு தமிழை நன்றாக கற்றுக் கொடுத்து விட்டது. தமிழை கற்கும் போது இருந்த காதலை தமிழை கற்றபிறகு அம்மொழி மீது அதிக காதல் வந்துவிட்டது”

“மகாமுனி அனுபவம் பற்றி?”

“என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது மகாமுனி. எனக்குப் படத்தின் கதையே தெரியாது. மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் என்றதும் வேறு கேள்வியே கேட்கத் தோன்றாதல்லவா? அப்படித்தான் நான் எதுவுகே கேட்கவில்லை. என்னை ஸ்கீரினில் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது. அது இயக்குநர் சாந்தகுமார் சார் செய்த மேஜிக்”

“படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் பேசிய வசனங்கள் எல்லாம் மிகவும் காத்திரமான வசனங்கள். நீங்களே சொந்தமாக டப்பிங் பேசும்போது எப்படி இருந்தது?”

“எனக்கு டப்பிங் பேசும்போது ரொம்பப் பயமாக இருந்தது. நான் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாக பேசச்சொன்னார். அவரின் நம்பிக்கை நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. இதைப்போல நடிக்கும் போதும் சாந்தகுமார் நம்மை உளவியல் ரீதியாக தயார்படுத்துவார். ஸ்பாட்டில் அவர் நடித்தெல்லாம் காட்டமாட்டார். அந்தக் கேரக்டரின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வருவது போல விவரிப்பார். அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரத்திற்குள் நாம் ட்ராவல் ஆகிடுவோம்.”

“நடிகர் ஆர்யாவுடன் முதல்படம் இது. ஆர்யா உங்களுக்கு உதவியாக இருந்தாரா?”

“ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரை பார்க்கவே முடியாது. அவர் மிகமிக பிரண்ட்லியான மனிதர். படப்பிடிப்பில் அவர் என்னிடம் “அப்படி நடிங்க இப்படி நடிங்க” என்று எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் எனது நடிப்பும் நல்லா வரணும் என்று மெனக்கெடுவார். உதாரணத்திற்கு அவர் எதிரில் நிற்கையில் எனக்கு மட்டும் கேமரா வைத்து சஜேஷன் ஷாட் எடுக்கும்போது அவர் சும்மா நின்றால் போதும். ஆனாலும் அவர் நமது ரியாக்‌ஷன் பெஸ்ட்டாக வர வேண்டும் என்பதற்காக அவரும் நடித்துக் கொண்டிருப்பார். இப்படி சக ஆர்ட்டிஸ்ட் நடிப்பும் நல்லா வரவேண்டும் என்பதற்காக மெனக்கெடும் நடிகர்களை நான் பார்த்ததில்லை”

“மகாமுனி படத்திற்காக உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது?”

“எங்கள் இயக்குநர் சாந்தகுமார் சார் எடிட்டிங்கில் இருக்கும் போது என்னிடம், “நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல” என்று சொன்னார். எனக்கு லைப்லாங் மறக்க முடியாத பாராட்டு அது.”

“உங்களின் அடுத்தடுத்த படங்கள்”?

” ஐங்கரன் படம் ரிலீஸாக இருக்கிறது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவில் ஜனரஞ்சகமான படமாக அது உருவாகி இருக்கிறது. விக்ரம்பிரவுடன் அசுரகுரு படத்திலும் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு புதியபடங்கள் உள்பட ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியுள்ளேன்”

“சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?”

“எல்லா நடிகர்களும் பிடித்த நடிகர்கள் தான். ரஜினிகாந்த் சாரை கூடுதலாக பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா ரொம்பப்பிடிக்கும்”

“இந்தமாதிரி படங்கள் அல்லது இந்தமாதிரி கேரக்டர்கள் தான் நடிக்கணும் என்ற வரையறை எதுவும் வைத்துள்ளீர்களா?”

“அப்படி எந்த வரையறையும் வைத்துக்கொள்ளவில்லை. நான் நடிக்கணும் என்று மிகவும் ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். நடிக்கணும் என்ற ஆசையோடு வந்தேனே ஒழிய இந்தமாதிரி தான் நடிக்கணும் என்று வரவில்லை. அதனால் எனக்கு நடித்தால் மட்டும் போதும். ஐ லவ் ஆக்டிங்” என்றார் உற்சாகமாக

மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்

மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 3’, இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,

நன்றிகளுடன்,
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில் அவரது வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவிருக்கும் பேச்சிலர் படத்தின் மூலம் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொடத் தயாராகியிருக்கிறார்.

விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ராட்சசன் படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் ஜி.டில்லி பாபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பேச்சிலர் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது கூறியதாவது….

கிராமிய மணம் கமழும் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதற்கு முன் நடித்த எந்த படத்திலும் அவருக்கு இப்படி ஒரு வேடம் அமைந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜி.விக்கு பேச்சிலர் திரைப்படம் ஒரு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.

கோயமுத்தூரிலிருந்து பெங்களூரு வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதை சுவைபட விவரிக்கும் படம் இது என்றார் சதீஷ் செல்வகுமார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெங்களூரிலும், சில பகுதிகள் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்படவிருக்கின்றன. பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பகவதி பெருமாள், யு டியூப் நக்கலைட்ஸ் புகழ் அருண் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி.பிரகாஷ் குமாரே ஏற்றிருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனக்க, ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தேனி ஈஸ்வர்.

More Articles
Follows