குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் “கண்களை மூடாதே“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் K.E.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் “கண்களை மூடாதே“.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து,தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் “K.E.எட்வர்ட் ஜார்ஜ்“ நாயகியாக சித்ராய் நடித்துள்ளார்.

மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – திஷாத் சாமி

எடிட்டிங் – தமிழ்மணி சங்கர்

துணை இயக்கம் – அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

முற்றிலும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பகதை தான் இந்த படம். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும், நம் பாரம்பரியம் என்ன என்பதை உணர்த்தும் கதை.

படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் நமக்கு இது போல மனைவி கிடைக்காதா என்று மனதில் தோன்றும். அதே மாதிரி எல்லா பெண்களுக்கும் தங்களுக்கு இதுபோல் கணவன் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஏங்குவார்கள் அப்படியான திரைக்கதை இது.

படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகிறது என்றார் இயக்குனர் K.E.எட்வர்ட் ஜார்ஜ்.

சின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள காக்க காக்க 2 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

இதனிடையில் விஷாலை வைத்து ஒரு படத்தை விரைவில் இயக்கவுள்ளாராம் கௌதம்.

இப்படத்தை கே.பி.பிலிம்ஸ் கே.பாலு தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான படமான சின்னதம்பி உட்பட பல படங்களை தயாரித்தவர் தான் இந்த கே.பாலு.

கடந்த சில வருடங்களாக படங்களை இவர் தயாரிக்கவில்லை. மாறாக படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் மட்டும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா காவல்துறை விழிப்புணர்வு படத்தில் ரஜினியின் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேற்கு ஆஸ்திரேலியா டெர்பி மாநில டிராபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு நபர் அதிக போதையில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

அவரை பரிசோதித்தபோது அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த அளவு மயக்க மருந்தானது ஒருவர் கோமா நிலையில் இருப்பது சமம் அல்லது ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது கொடுக்கும் மருந்திற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

அதனை குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டு ஒரு படத்தை டிசைன் செய்துள்ளனர்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 பட படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18ல் தொடங்கியது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் கமலுடன் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

வில்லன் கேரக்டரில் நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் நெடுமுடி வேணுவின் உதவியாளராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது அந்நியன் படத்தில் கம்பீரமான போலீஸ் பிரகாஷ் ராஜ் உடன் காமெடி போலீஸ் விவேக் இருப்பது போல இந்த கேரக்டர் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

காதலர் தின வாழ்த்து சொல்லி தன் திருமணத்தை அறிவித்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு தற்போது 38 வயது ஆகிறது.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனிடையில் ஒரு டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனக்கான மணப்பெண்ணை தேடினார்.

ஆனால் அதில் எந்த பெண்ணையும் இவர் தேர்வு செய்யவில்லை.

அதன்பின்னர் இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகை சாயிஷாவுடன நெருக்கமாகி அவருடன் காதல் கொண்டார்.

அதன்பின்னர் சாயிஷாவும் காதலிக்க, தற்போது அது திருமணம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில், காதலர் தினத்தில் சாயிஷாவுடனான தனது காதலை வெளிப்படுத்தி ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.

அத்துடன் திருமண அறிவிப்பையும் வெளியிட்டார்.

இவர்களின் திருமணம் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி ஐதராபாத்தில் இருவீட்டார் முன்னிலையில் நடக்கவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா-சசிகலா வேடங்களில் நடிப்பவர்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அதன்படி தி அயர்ன் லேடி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

இவையில்லாமல் இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், லிங்குசாமி ஆகியோரும் படங்களை இயக்குவதாக அறிவித்துள்ளனர்.

இவையில்லாமல் ராணி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரிசாகவும் உருவாக்கவுள்ளார் கவுதம் மேனன்.

இதை 30 எபிசோட்களாக தயாராக்கிறாராம். ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் கொண்டதாக இருக்கும்.

முதலில் ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் பின்னர் இணையதளங்களிலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சசிகலா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கியபோது தைரியமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை விஜி சந்திரசேகர்.

இவர் நடிகை சரிதாவின் சகோதரி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

முதல்கட்டமாக விஜி சந்திரசேகர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறாராம் கவுதம் மேனன். அப்படி என்றால் இது ஜெயலலிதா மறைந்த பின் நடக்கும் காட்சிகளாக இருக்கலாம் என நம்பலாம்.

More Articles
Follows