இணையத்தை கலக்கும் முனி 4 காஞ்சனா 3 பட மோசன் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது.

வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி  என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் motion poster பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார் ராகவா லாரன்ஸ்.

Kanchana 3 motion poster goes viral in Internet

8 கோடியை நெருங்கி சாதனை படைக்கும் சார்லி சாப்ளின் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “சார்லி சாப்ளின் 2”.

இந்த படத்தின் முதல் பாகமான சார்லிசாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.

முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ரவிமரியா, T.சிவா, கிரேன் மனோகர், செந்தி,சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது…

என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால் தான் படம் எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

16 வருடங்களுக்கு பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார்.

நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு சார் டாக்டராகவும் அதா சர்மா மனோதத்துவ நிபுனராகவும் நடிக்கிறார்கள்.

படத்தில் இடம் பெற்றுள்ள கிராமப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் யூ டியூப்பில் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் டப் மேஷ் உருவாக்கப் பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு கோவா கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. இம்மாதம் 25 ம் தேதி படம் வெளியாகிறது.

Chinna Machan song from Charlie Chaplin 2 creates record in Youtube

இனிமையான பயணத்திற்கு இனி Ryde தான் பெஸ்ட்; சினேகா புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல், முதல் தலைமுறை தொழிலதிபர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து துவங்கியிருக்கும் கார் சேவை நிறுவனம் தான் இந்த Ryde.

ஓட்டுனர்களுக்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் மூலம் பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை கொடுப்பதுதான் இந்த Ryde நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும். இந்த வாகன சேவைக்கான ‘Ryde App’ அறிமுக விழாவில் நடிகை சினேகா கலந்துகொண்டு ‘Ryde App’ஐ அறிமுகப்படுத்தி வைத்தார்

இந்த நிகழ்வில் பேசிய சினேகா, “இன்று கால் டாக்ஸி சேவைகள் புதிது புதிதாக வருகின்றன தான். ஆனால் பல ஓட்டுனர்களால் பயணிகள் பலரும் பலவிதமாக அவதிக்குள்ளாகி சங்கடப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. எனது கணவர் பிரசன்னா கூட, இதுபோன்ற கால் டாக்ஸி சேவை தாமதத்தாலும் ஓட்டுனரின் அலட்சியத்தாலும் பாதிக்கப்பட்ட நிகழ்வும் கூட உண்டு.

இன்று பல கால் டாக்சி நிறுவனங்கள் தங்கள் சேவையை பயன்படுத்தும் பெண்களுக்கு அவர்களின் பயண பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது.

இந்த பிரச்னைகளை எல்லாம் களையும் விதமாக தற்போது உருவாகியிருக்கும் Ryde நிறுவனம் தனது பணியை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன்” என்று கூறி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்

Ryde நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர் பிரீத்தி பேசும்போது, “சென்னை போன்ற மாநகரங்களின் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு நாங்கள் இந்த ‘Ryde’ஐ துவங்கியுள்ளோம். இதுவரை பல கால் டாக்ஸி நிறுவனங்களும் தற்போது அச்சத்துடன் பார்க்கும் விஷயம்தான் பயண பதிவு ரத்து (booking cancellation).

இன்னும் விளக்கமாக சொன்னால் இதற்கு முன்பு சில கால் டாக்ஸி நிறுவனங்களில் வாகனங்களை பயன்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்த பணிகளில் பெரும்பாலோனோர், அவர்களின் சேவை தரம் சரியில்லாத காரணத்தினால் பயணம் துவங்குவதற்கு முன்பாகவோ, அல்லது பாதி வழியிலோ தங்களது பதிவை ரத்து செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது பெரும்பாலும் வாகன ஓட்டுனருக்கும், பயணிக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் தான் ஏற்படுகிறது.

இந்த குறைகளைக் களைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக பயணிகளுக்கு நிம்மதியான வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் விதமாக உருவாகி இருக்கும் நிறுவனம்தான் Ryde’.

மற்ற நிறுவனங்களின் கால் டாக்ஸி சேவைகளால் பயணிகளுக்கு என்னென்ன அசௌகரியங்கள் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாக அலசி, அவற்றிற்கு தீர்வு தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனம்தான் இந்த ‘Ryde’.

இதன் தாரக மந்திரமே “ஓட்டுனர்களை நாங்கள் மிகச் சிறப்பாக நடத்துகிறோம்.. ஓட்டுநர்கள் பயணிகளை மிகச்சிறப்பாக நடத்துவார்கள்” என்பதுதான்.

அந்தவிதத்தில் ஓட்டுனர்களின் மனநிலையை கணித்து அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக தங்களுக்கு கிடைக்கும் கமிஷனில் 90 சதவீதத்தை ஓட்டுனர்களுக்கு கொடுத்துவிட்டு 10 சதவீதத்தை மட்டுமே ‘Ryde’ பெற்றுக்கொள்கிறது (மற்ற நிறுவனங்களில் இது 75-25 என்கிற விகிதத்தில் தான் இருக்கிறது)

இதனால் ஓட்டுனர்கள் மனமகிழ்ச்சியுடன் தங்கள் வேலையில் ஈடுபடுவார்கள்.. அவர்களது தேவை சரியானபடி பூர்த்தியாவதால், வாடிக்கையாளர்களை மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்துவதுடன், அவர்களது பயணம் சிறப்பாக அமையவும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை ‘Ryde’ உறுதியாக நம்புகிறது” என கூறினார்.

Sneha launches new cab service Ryde mobile App

ப்ளாஸ்டிக்கு தமிழக அரசு தடை; மஞ்சப்பையுடன் வரும் தாதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.

பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக அனைத்து இல்லங்களிலும் தனது வரவை அறிவிக்கிறார் தாதா87.

தமிழக அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாதா87 படக்குழுவினர் மக்களின் தினசரி உபயோகத்திற்காக மஞ்சப்பைகளை விநியோகிக்கவுள்ளனர்.

DhaDha 87 team plans to distribute Yellow cloth bags to Public

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா நடிக்கும் *ஆலீஸ்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா,  தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் “பியார் பிரேமா காதல்” என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.

தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளி இட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி,பியார் பிரேமா காதல் வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் கோலோச்சிய ரைசா வில்சன் “ஆலிஸ்” கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

“ஆலிஸ்” ஒரு பிரமாதமான கதை. இயக்குனர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியும், அதை தொடர்ந்து பெருகிய ரைசாவின் புகழும் அவரையே தேர்ந்து எடுக்க வைத்து உள்ளது. அவருடைய நடிப்பு திறமையும் , கட்டுக்கோப்பான தொழில் நேர்த்தியும் அவரையே கதாநாயகியாக்கியது.

மற்ற நடிக நடிகையர் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.எங்கள் நிறுவனத்தின் கோட்பாட்டின் படி இந்த படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு, கலை இயக்குனர் ஏ ஆர் ஆர் மோகன், அர்ஜுனா நாகா ஏ கே படத்தொகுப்பாளராக அறிமுகமாகின்றனர்.

யுவன் ஷங்கர் இசை அமைக்கிறார் . படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு எங்களது நிறுவனம் தொடர்ந்து நல்ல படங்கள் வெளி வரும் என்று உத்திரவாதம் அளிக்கிறோம்” என்கிறார் தயாரிப்பாளர் இர்பான் மாலிக்.

Raiza Wilson as Alice in Yuvan shankar Raja productions

மீண்டும் மாதவன்-அனுஷ்கா இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.

நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர்.

ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமேரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பாளர்கள் T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.

கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Madhavan Anushka Shetty Anjali and Shalini Pandey team up in new movie

More Articles
Follows