கனா போதும். இனி வேண்டாம்.; ஐஸ்வர்யாவுக்கு அம்மா அட்வைஸ்

Kanaa is enough for your career says Aishwarya Rajesh mother to her daughterசிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தின் வெற்றி விழாவில் பட நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

“குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு படம் தயாரிக்கும் போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள்.

அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி. என் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படி என்னை வளர்த்தார் அம்மா.

சினிமாவில் நடிகைகளுக்கு குறைந்த காலமே வாய்ப்பு இருக்கும். எனவே எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். என் அம்மாவும் அப்படிதான் எனக்காக நினைத்தார்.

ஆனால் இந்த படம் நடித்த பிறகு, இனிமே நீ படமே நடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. இது போதும் உன் சினிமா வாழ்க்கைக்கு என்று என் அம்மா சொன்னாங்க.

எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது தான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள் என்று பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Kanaa is enough for your career says Aishwarya Rajesh mother to her daughter

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின்…
...Read More
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்…
...Read More
அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தின்…
...Read More

Latest Post