கனா ஹீரோவின் 2வது படத்திற்கு இசையமைக்கும் அனிருத் & விவேக்-மெர்வின்

கனா ஹீரோவின் 2வது படத்திற்கு இசையமைக்கும் அனிருத் & விவேக்-மெர்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dharshanசிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்த ‘கனா’ படத்தில் அப்பாவியான புன்னகை, யதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவை மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தவர் நடிகர் தர்ஷன்.

இந்த படத்தையும், இதை வெற்றி படமாக்க உழைத்த ஒவ்வொரையும் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

நடிகர் தர்ஷன் மட்டும் விதிவிலக்கல்ல. தர்ஷன் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒருவராக மாறியிருக்கிறார்.

இந்நிலையில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP & ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 1’ என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஹரிஷ் ராம் LH இயக்குகிறார்.

அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்துக்கு இசையமைப்பது அனைவரின் கவனத்தையும் படத்தின் மீது திசை திருப்பியிருக்கிறது.

நகைச்சுவையான குடும்ப சாகச பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு தர்ஷன் மிக பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் தயாரிப்பாளர்கள் அவரை நாயகனாக்கி இருக்கிறார்கள்.

“குறிப்பாக கனாவில் அவரது குளிர்ச்சியான, எளிமையான, கவரும் நடிப்பை பார்த்த பிறகு, இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் கொடுக்க அவர் தான் சரியாக இருப்பார் என்று உணர்ந்தோம்” என்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம் LH.

அறிமுக இயக்குனரான இவர் இதற்கு முன்பு இயக்குனர் துரை செந்தில்குமாரின் எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

தங்களின் மாயாஜால இசையால் இளைஞர்களை மயக்கியிருக்கும் அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைத்திருப்பதால், இந்த படம் ஒரு இசை விருந்தாக இருக்கும் என தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உதவியாளர் நரேன் இளன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் (படத்தொகுப்பு), நூர் (ஸ்டண்ட்ஸ்), ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் AR (உரையாடல்), வாசுகி பாஸ்கர் & பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஒலி வடிவமைப்பு) டி உதயகுமார் & வினய் ஸ்ரீதர் (ஆடியோகிராஃபி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தில் நிறைய VFX காட்சிகள் இருப்பதால், VFX உலகின் மிகப்பெரிய திறமையாளர்களான வில்லவன் கோதை G, (VFX கிரியேட்டிவ் இயக்குநர்), ரெங்கராஜ் J (VFX இயக்குனர்) மற்றும் சந்திரமோகன் J (VFX தயாரிப்பாளர்) ஆகியோரை படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் படத்திற்கு தனஞ்செயன் பாராட்டு

சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் படத்திற்கு தனஞ்செயன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer dhananjayanஸ்ரீபிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள படம் மிக மிக அவசரம்.

ஜகன்நாத் என்பவர் கதை எழுதியுள்ளார். இப்படத்தில் பெண் காவலர்களின் நிலை குறித்து பேசப்பட்டுள்ளது.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை பிரபலங்கள் பலரும் பார்த்துள்ளனர்.

இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அனைருவருக்கும் விருப்பமான நல்ல கருத்துடன் மிக மிக அவசரம் படத்தை சுரேஷ் காமாட்சி உருவாக்கியுள்ளார்.

படம் ரிலீசாவுடன் அனைவரின் பாராட்டும் படத்திற்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய க்ராஸ்ரூட் பிலிம்ஸ் பேனரில் மிக மிக அவசரம் படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது

ராயல்டி தொகையில் ஒரு பகுதியை 2 சங்கங்களுக்கு வழங்கும் இளையராஜா

ராயல்டி தொகையில் ஒரு பகுதியை 2 சங்கங்களுக்கு வழங்கும் இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal talks about Ilayaraaja 75 event and Ilayaraaja songs royalty amountதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது.

அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம்.

ஆகையால், அதற்கான வேலைகள் நிறைய உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பு தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.

முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள்.

இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதற்கான ‘MO’ -வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

மற்ற இசையமைப்பாளர்களும் வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம்.

ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம்.

யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதை பற்றி விபரம் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ – வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது.

இவ்வாறு தலைவர் விஷால் கூறினார்.

Vishal talks about Ilayaraaja 75 event and Ilayaraaja songs royalty amount

Isaignani Ilayaraja 75 event ticket sales event

மணிகர்னிகா-ஜான்சியின் ராணி பட சென்னை பிரஸ் மீட்டில் கங்கனா ரனாவத்

மணிகர்னிகா-ஜான்சியின் ராணி பட சென்னை பிரஸ் மீட்டில் கங்கனா ரனாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bollywood Actress Kangana Ranaut at Chennai Manikarnika Movie Press Meetஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் “மணிகர்னிகா – ஜான்சியின் ராணி”.

ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.

அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

ஜான்சியின் ராணி, லக்‌ஷ்மி பாய் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017 தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். கங்கனா ரனாவத் இந்த கதையின் நாயகியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் பொருத்தமான தேர்வு.

ராணி லக்‌ஷ்மி பாய் தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணி. அதனால் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்தோம்.

மேலும் தமிழ், தெலுங்கு என்பது இந்திக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கிறது, கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன என்றார் தயாரிப்பாளர் கமல் ஜெயின்.

”தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது.

இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார்.

தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன.

அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது.

அதே போல ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல.

அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்.” என்றார் நாயகி.

Bollywood Actress Kangana Ranaut at Chennai Manikarnika Movie Press Meet

கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் காசுக்காக இப்படி செய்யலாமா..?

கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் காசுக்காக இப்படி செய்யலாமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KamalHaasans Vijay Star Value Pack Promo in controversyமக்களை எப்போதுமே வாட்டும் விஷயங்களில் மிக மிக முக்கியமானது விலைவாசி உயர்வு தான்.

தினம் தினம் பெட்ரோல் விலை உயர்வதால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை வைத்தே அரசியல் செய்து வருகின்றனர்.

அரசியலுக்கு வரும் புதுமுகங்களும் இந்த குற்றச்சாட்டை கூறாமல் இருப்பது இல்லை.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஸ்டார் விஜய் டிவி விளம்பரத்தில் கேபிள் டிவி சந்தா கட்டணம் குறைவாக இருப்பதாக கூறி இன்னும் அதிக விலைக்கு விற்கலாமே என சொல்வதாக காட்சிகள் உள்ளது.

பொதுவாக பேரம் பேசி பணத்தை குறைக்கச் சொல்வோம். ஆனால் கடைக்காரர் பசுபதி விலை குறைவாக சொன்ன போதும், அதற்கு அதிக பணம் தருவதாக கமல் சொல்வது போல் விளம்பரம் உள்ளது.

அது விளம்பரம் தான் என்றாலும் மக்களே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மக்கள் பிரச்சினையை பேசும் கமல், காசுக்காக இப்படி பேசலாமா? என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

KamalHaasans Vijay Star Value Pack Promo in controversy

தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vairamuthu speech at Tamilattrupadai event‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

தமிழாற்றுப்படை நிகழ்ச்சி திருப்பூரில் நிகழ்வது மகிழ்ச்சி. மற்ற ஊர்களையெல்லாம் நான் மூளையில் பதிவு செய்திருக்கிறேன்; திருப்பூரை மட்டும் நான் இதயத்தில் அணிந்திருக்கிறேன். பனியன் வடிவத்தில் திருப்பூர் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அப்படிச் சொல்லுகிறேன்.

சித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப்போல அப்துல் ரகுமான் கவனம் பெறாமல் போய்விட்டார். அவர் கவிதைகளைத் தமிழர்கள் போற்ற வேண்டும்.

ஒரு மொழியின் உலக அடையாளமே அது எத்தனை ஆண்டு நீண்ட இலக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். ஆண்டு வளையங்களைக் கொண்டு மரங்களின் வயதறியலாம்.

பற்களைப் பார்த்து மாடுகளின் வயதறியலாம். ஒரு மலையின் வயதை அது வெளியிடும் கார்பன் அளவுகொண்டு கணக்கிடலாம். அதுபோல ஒரு மொழியின் வயதை அதன் இலக்கியத்தை வைத்தே அளவிட இயலும்.

பழந்தமிழர் வாழ்வில் இலக்கியம்தான் அறம்; இலக்கியம்தான் சட்டம். இலக்கியத்தின் வழிதான் ஆட்சி செலுத்தப்பட்டது; வாழ்வு இயக்கப்பட்டது. தவறுகளைத் தண்டிக்கப் பிறந்ததுதான் பிற்காலத்தில் சட்டம்.

ஆனால் தவறுகளே செய்துவிடக்கூடாது என்று தடுத்ததுதான் இலக்கியம். ஓர் இனத்தின் பண்பாடும் நாகரிகமும், வீரமும் காதலும் இலக்கியத்தில் மட்டும்தான் பாதுகாப்பாகப் பதிவுசெய்யப்பட முடியும்.

ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிறகு இந்தியக் கல்வியில் இலக்கியம் தன் இடத்தை இழந்துகொண்டிருக்கிறது என்பது கவலை தருகிறது.

மூன்று நிமிடங்களுக்குமேல் காற்று இல்லை என்றால் மூளை இறந்துபோகும். மூன்று ஆண்டுகளுக்குமேல் இடைவெளி விட்டால்கூட இலக்கியம் மறந்துபோகும். அதனால் தொழில்நுட்பக் கல்வியிலும்கூட இலக்கியத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பது பலன்தரும் என்று தோன்றுகிறது.

தமிழ் ஒரு கடல். எல்லா நதிகளையும் உள்ளிழுத்துக்கொண்டு அது தன்மயம் ஆக்கிவிடும். பெளத்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு அது மணிமேகலையாய் மாற்றிக்கொண்டது. சமணத்தை உள்ளிழுத்து அது பதினெண்கீழ்க்கணக்காய்ப் பரிணாமம் பெற்றது.

இஸ்லாத்தை உள்ளிழுத்து அது சீறாப்புராணமாய்ச் சிறந்தோங்கியது. கிறித்துவத்தை உள்ளிழுத்து உலகைத் தனக்கும், தன்னை உலகத்துக்கும் அறிமுகம் செய்துகொண்டது. அப்படி வந்த மதங்களெல்லாம் தமிழ் வழியாகத்தான் வினைப்பட்டனவே தவிர, தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் தங்கள் மொழியை அமர்த்திவிடவில்லை.

ஆனால் இந்த நூற்றாண்டு அச்சம் தருகிறது. எப்போதும் நேராத ஓர் உலகப் படையெடுப்பு ஒவ்வொரு தாய்மொழியின் மீதும் இப்போது நிகழ்த்தப்படுவதாய் அறிவுலகம் பதறுகிறது.

இன்றைக்குப் பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கிராமங்கள் வரைக்கும் தமிழைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் முதலில் தமிழின் தரம் குறையும்; பிறகு புலமை குறையும்; பிறகு எண்ணிக்கை குறையும்; பிறகு பேச்சுமொழி ஆகிவிடும் பெருவிபத்தும் நேர்ந்துவிடும்.

சட்டத்தின் துணையின்றி இங்கு எதையும் சாதிக்க முடியாது. மக்களின் குரலின்றிச் சட்டம் ஏதும் இயற்ற முடியாது. எனவே தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொழுது உங்கள் மொழிக்கொள்கையைத் தனித் தலைப்பிட்டு அறிவியுங்கள். பொருளாதாரத்தைக் காப்பது மட்டும் ஜனநாயகத்தின் கடமை அல்ல; கலாசாரத்தையும் காப்பதுதான்.

Lyricist Vairamuthu speech at Tamilattrupadai event

More Articles
Follows