தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல (கட்டமைப்பு) மாநில செயலாளராக பொறுப்பு வகித்தவர் கமீலா நாசர்.
இவர் நடிகர் நாசரின் மனைவி.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இவர் இந்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலுக்கு (ஏப்ரல் 6) முன்பே தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
தேர்தல் நேரத்திலும் கூட எதிலும் பங்கேற்காமல் கமீலா நாசர் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளரான சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த கமீலா நாசர் நேற்று முதல் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கமீலா நாசர் கருதியதாக சொல்லப்படுகிறது.
Kameela Nassar quits Makkal Needhi Maiam