ரூ. 400 கோடியில் உருவான ‘ஆளவந்தான்’ மீண்டும் வருகிறான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் இரு வேடங்களில் மிரட்டிய திரைப்படம் ஆளவந்தான்.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து மிகப்பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தார்.

மனீஷா கொய்ராலா மற்றும் ரவீணா தாண்டன் நாயகிகளாக நடித்த இப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இதில் கமலின் அர்ப்பணிப்பும் தொழில்நுட்பமும் அதிகளவில் பேசப்பட்டது.

தற்போது இப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கவுள்ளதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அந்த போஸ்டர்களில் இன்றைய மதிப்பில் அன்றைய தினத்தில் ரூ. 400 கோடியில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிட்டுள்ளனர்.

Kamals Aalavandhan digital version will be released soon

‘15 மொழி; 15000 தியேட்டர்…’ அசர வைக்கும் 2.0 ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ஷங்கரிடம் இருந்தது.

ஆனால் அவரை மிஞ்சும் வகையில் பாகுபலி, பாகுபலி 2 என பிரம்மாண்ட படங்களை எடுத்து, வசூலிலும் மிரட்டிவிட்டார் இயக்குநர் ராஜமௌலி.

எனவே தற்போது ரஜினியை வைத்து இயக்கிவரும், 2.0 படத்தில் மிகப்பிரம்மாண்டத்தை காட்ட முடிவு செய்து, அதற்கான பணியில் முழு மூச்சியில் இறங்கிவிட்டாராம் ஷங்கர்.

எனவே படத்தின் ரிலீஸையும் இந்தியாவே வியக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம் இதன் தயாரிப்பு நிறுவனம் லைக்கா.

அடுத்த 2018 வருடம் ஜனவரி 26ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் 15 மொழிகளில் 80க்கும் அதிகமான நாடுகளில் வெளியிட உள்ளனர்.

அன்றைய தினமே சீனாவிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதால், உலகம் முழுவதும் தியேட்டர்களின் எண்ணிக்கை மட்டும் 15,000த்தை தாண்டும் என சொல்லப்படுகிறது.

Lyca production plans to release 2pointO movie in 15 languages

2015ல் கமல்-அஜித் மோதல்; 2017ல் கமல்-விஜய் மோதல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிவரும் விஜய்-61 படத்தை 2017 இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இத்தகவல் அதிகாரப்பூர்வமாகவும் வந்துவிட்டது.

இந்நிலையில் கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம்2 தீபாவளிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ல் கமலின் தூங்காவனமும் அஜித்தின் வேதாளம் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகி மோதியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இணையத்தை அதிர வைக்கும் ரஜினி டான்ஸ் – பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஹீமா குரோஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் காலா.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை 40 நாட்கள் மும்பையில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் சூட்டிங்கின் போது திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஓபனிங் பாடலில் ரஜினி நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளது.

மேலும், ரஜினி பேசும் பன்ச் டயலாக் ’நான் கால வைக்கிறதும் வைக்காததும், உன் தலை இருக்குறதும், இருக்காததும் உன் கையிலதான் இருக்கு…’ என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

இது இணையத்தில் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

மீண்டும் கலக்க வரும் சந்தானம்-ராஜேஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ்.

இதில் பெரும்பாலான படங்களில் காமெடி நாயகனாக சந்தானம் நடித்திருந்தார்.

தற்போது சந்தானம் ஹீரோவாகிவிட்டதால் ராஜேஷ் இறுதியாக இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு படத்தில் காமெடியனாக ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்தார்.

இந்நிலையில் சந்தானத்தை நாயகனாக வைத்து ராஜேஷ் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

“GST-ஐ அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவேன்” – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடு முழுவதும் விரைவில் ஜிஎஸ்டி-ஐ மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது…

“சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது கலை.

ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது சரியல்ல.

சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளனர்.

திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்.

28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றார் கமல்ஹாசன்.

More Articles
Follows