தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அந்த ஆப் விசிலை டவுன் லோடு செய்து வைத்துக்கொண்டு, சமூகத்தில் நடக்கும் தவறுகள், மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அனுப்பலாம் என கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீங்கள் அனுப்பும் தகவல் உடனடியாக பிரச்சினை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு ஆவன செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார் கமல்.
இதனையடுத்து ஏராளமானோர் விசில் செயலிலை டவுன்லோடு செய்து வந்த நிலையில், விசில் செயலியில் சில புகார்கள் வந்துள்ளன.
அதாவது சென்னை அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் வெளியிடப்படும் கழிவுகள் அங்கிருந்து ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுகிறது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கமல்ஹாசன் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது…
மக்கள் நீதி மையம் பெருமளவு வேலைவாய்ப்பு கொடுத்து வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல.
ஆனால் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இதுபோன்ற கொடுமையான மாசுக்களை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை. தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது… மக்களும் தான் என கமல் பதிவிட்டுள்ளார்.
Kamalhassan reaction to Maiam whistle complaint
