தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
60 வருடங்களுக்கு மேலாக தன் நடிப்பால் இந்திய ரசிர்களை கவர்ந்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தன் பயணத்தை தொடங்க உள்ளார்.
அன்றைய தினம் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். பின்னர் பிப்ரவரி 23-ம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகிறார்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
இதில்… திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்துகொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொதுக்கூட்டத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது.
யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்து வரக்கூடாது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாம்.
இது கமல்ஹாசனின் கட்டளையாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kamalhassan political tour news updates