தன் அரசியல் பயணத்திற்கு எம்ஜிஆர் பட தலைப்பை வைத்தார் கமல்

kamalவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்த்தில் கமல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு பாஜக. வை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கமல் அரசியல் கட்சி தொடங்கட்டும். ஆனால் அரசியல் கட்சியை சாராத அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்க கூடாது என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் கமல் தன் அரசியல் சுற்றுப்பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளாராம்.

எம்ஜிஆர் நடிப்பில் 1975ல் உருவான ஒரு படத்திற்கு நாளை நமதே எனப் பெயரிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமலின் இந்த சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதற்கு பல நல்ல திட்டங்களை வழங்கவிருக்கிறாராம்.

மேலும் பல பின்தங்கிய கிராமங்களை ஒன்றன் பின் ஒன்றாக தத்து எடுக்கவுள்ளாராம்.

இதுகுறித்து கமல் பேசியதாவது…

இது எம்ஜிஆர் படத்தலைப்புத்தான். அவருக்கும் நாளை நமதே என்ற எண்ணம் இருந்தது. எனக்கு அந்த எண்ணமே.

கிராம புறங்களில் உள்ளவர்கள் வசதிக்காக நகரங்களை நோக்கி வருகின்றனர். எனவே கிராமத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிட்டால், அவர்கள் அங்கேயே வசதியாக வாழ்வார்கள் என்ற அடிப்படையில் கிராமங்களை தத்து எடுத்து அதன் தேவைகளை பூர்த்தி செய்கிறேன்”. என்றார்.

Kamalhassan named his TN Political tour as Naalai Namadhe Its MGR movie title

Overall Rating : Not available

Related News

Latest Post