விக்ரம் பிரச்சினையை தீர்க்க பிக்பாஸில் இருந்து கமல் எஸ்கேப்

விக்ரம் பிரச்சினையை தீர்க்க பிக்பாஸில் இருந்து கமல் எஸ்கேப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் 5 சீசன்களை வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் சீசன்களை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளில் பிசியாகி இருந்தார்.

இத்துடன் விக்ரம் பட சூட்டிங்கிலும் கலந்து கொண்டு நடித்து வந்தார் கமல்.

இந்த நிலையில் தற்போது ஓடிடி.,யில் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.

ஆனால் தொடர்ச்சியாக தொகுத்து வழங்க முடியாது என தெரிவித்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது…

இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. இவர்களோடு இணைந்து புதுமைப் பாதையில் பயணிப்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு.

லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்படிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது.

இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்தக் காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன், இன்றைய எபிஸோடுக்குப் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Kamalhassan made shocking news that he quits Bigg Boss

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நாயகனாகும் வடிவேலு

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நாயகனாகும் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் கார்டு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து நடிகர் வடிவேலு தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் காமெடி கேரக்டர்களில் நடிக்கவும் முன்வந்துள்ளார்.

உதயநிதியின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்துடன் கௌதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறாராம் வடிவேலு.

தற்போது சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இதயைடுத்து வடிவேலு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை சீரியஸ் மற்றும் ரொமான்டிக் படங்களை இயக்கியவர் கௌதம்மேனன்,

முதன்முறையாக வடிவேலுவை வைத்து ரொமான்டிக் காமெடி படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் நலன் குமாரசாமி இயக்கத்திலும் வடிவேலு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வாங்க வைகைப்புயல் வடிவேலு…

Gautham Menon to make a romantic comedy film with Vadivelu

சேரன் கார்த்தி சிம்பு விஜய்சேதுபதி படங்களின் பாடலாசிரியர் லலிதானந்த் மரணம்

சேரன் கார்த்தி சிம்பு விஜய்சேதுபதி படங்களின் பாடலாசிரியர் லலிதானந்த் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில்
“என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் லலிதானந்த்.

‘அதே நேரம் அதே இடம்’ திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தமிழ் சினிமா உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.

மேலும் இவர் கோகுல் இயக்கத்தில் ரௌத்திரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம்,கார்த்தி நடிப்பில் காஸ்மோரா, விஜய்சேதுபதி நடித்த ஜூங்கா, சேரனின் இயக்கத்தில் திருமணம், அன்பிற்கினியாள், போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் இவரது பாடல் வரிகளில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் உட்பட இன்னும் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

லெமூரியாவில் இருந்த காதலி வீடு, ஒரு எலுமிச்சையின் வரலாறு, என்ற இரு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாடலாசிரியர் லலிதானந்த் உடல்நிலை குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20-02-2022) மதியம் 3:35 மணிக்கு காலமானார்.

இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Lyricist Lalithaanand passed away due to health issue

அஜித்தை 2வது திருமணம் செய்த நடிகை அஞ்சலி

அஜித்தை 2வது திருமணம் செய்த நடிகை அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி நாயர்.

இவர் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பென் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் கோட்டி, நெல்லு, இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல், கிருஷ்ணம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்திலும நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் உதவி இயக்குனர் அஜித் ராஜுவை இவர் 2வதாக திருமணம் செய்துள்ளார்.

இத்தகவலை அஜித் ராஜு தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்வதர் தான் அஞ்சலி நாயர். இந்த தம்பதிக்கு ஆவ்னி
என்ற பெண் குழந்தை உள்ளது.

சில கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்த அஞ்சலி கடந்த சில வருடங்களாக
தனியாக தான் வசித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Anjali nair gets married to assistant director Ajith raju

வாக்களித்த கமல் விஜய் சூர்யா.; வாக்களிக்காத ரஜினி அஜித் தனுஷ்

வாக்களித்த கமல் விஜய் சூர்யா.; வாக்களிக்காத ரஜினி அஜித் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2022 பிப்ரவரி 19 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் நடைபெற்றது.

இதில் சினிமா நட்சத்திரங்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, அருண்விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

ஆனால் பிரபல நட்சத்திரங்களான ரஜினிகாந்த், அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை.

வாக்களிப்பது அவரவர் விருப்பம் என பலர் கமெண்ட் அடித்தாலும் சென்னையில் இருந்துக் கொண்டே பிரபலங்கள் இப்படி வாக்களிக்க வராமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu Urban Local Body Election Tamil Cinma Stars Cast their Votes

இம்முறை காரில் வந்து வாக்களித்த விஜய்..; மக்களிடம் மன்னிப்பு கேட்டார்

இம்முறை காரில் வந்து வாக்களித்த விஜய்..; மக்களிடம் மன்னிப்பு கேட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2022 பிப்ரவரி 19 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்தார்.

சிவப்பு நிற மாருதி காரில் வந்து ஓட்டளித்து விட்டு சென்றார் விஜய்.

விஜய்யை காண பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வாக்களிக்க நின்றவர்களுக்கு சிரமம் ஏற்ப்பட்டது.

இதனை கவனித்த விஜய், தன்னால் ஏற்ப்பட்ட சிரமத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோவை ரசிகர்கள் சிலர் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது.

கடந்தாண்டு 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்க வந்தபோது சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu urban Local body election Vijay cast his vote and apology

More Articles
Follows