பார்வையற்ற திருமூர்த்தியின் இசைக் கல்விச் செலவை ஏற்றார் கமல்ஹாசன்

பார்வையற்ற திருமூர்த்தியின் இசைக் கல்விச் செலவை ஏற்றார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது.
கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி  ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நேற்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.
திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார். திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.
திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ  வைரலானது.
அதனை தன் செல்போனில் படம் பிடித்த ஒருவர், இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் டேக் செய்து ட்வீட் செய்தார்.
அந்த வீடியோவை பார்த்த இமான் தன் இசையில் திருமூர்த்தி பாட வைப்பதாக உறுதியளித்து அதன்படி ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து உருவான சீரு என்ற படத்தில் ஒரு அருமையான ஆத்மார்த்தமான பாடலை கொடுத்தார்.
அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்ற ‘வா சாமி…’ என்ற ஹிட் பாடலைப் பாடியவரும் பாடகர் திருமூர்த்தி தான்.
கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகையின் கல்விக்கு உதவிய நடிகர் ஜெய்

கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகையின் கல்விக்கு உதவிய நடிகர் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள்  படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.
‘களவாணி’ படத்தில் விமலின் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி.
சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருகிறார். படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.
தற்போது சட்ட படிப்பு LLB இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அவர் தாயின் கனவு தன் மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என்று .
தற்போது , UPSC… IAS..ஆரம்ப கட்ட படிப்பிற்கு தனக்கு புத்தகங்கள்  வாங்கி தருமாறு நடிகர் ஜெய் இடம் உதவி கேட்க அவரும் அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து நன்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்வேன் என்று வாழ்த்தியுள்ளர் ஜெய்.
இத்துடன் ஜெய்யை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார் மனீஷா பிரியதர்ஷினி
என் அன்பு உங்களுக்கும் உங்கள் ஆசி எனக்கும்.; விக்ரமை வாழ்த்திய இளையராஜாவுக்கு கமல் நன்றி

என் அன்பு உங்களுக்கும் உங்கள் ஆசி எனக்கும்.; விக்ரமை வாழ்த்திய இளையராஜாவுக்கு கமல் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் விக்ரம்.
லோகேஷ் இயக்கிய இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி ரிலீசானது.
இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை செய்து முன்னேறி வருகிறது.
இந்த படம் ரிலீசுக்கு முன்பும் படத்தின் ரிலீஸ் பின்பும் கமல்ஹாசன் பிரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் படம் வெளியாகி மூன்று வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா. தனது ட்விட்டர் பக்கத்தில்…
“வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே. மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே அது வெற்றிப் புன்னகை புரியுதே என மாற்றிக்கொள்ளலாம்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன்…
 “நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்” என்று தெரிவித்துள்ளார்
லாரன்ஸ் – கதிரேசன் இணையும் ‘ருத்ரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

லாரன்ஸ் – கதிரேசன் இணையும் ‘ருத்ரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகிர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர்  கதிரேசன்.
இவரை பைவ் ஸ்டார் கதிரேசன் என்று அழைத்தால் மட்டுமே பலருக்கு தெரியும்.
பிரபல தயாரிப்பாளரான இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’.
இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் இப்படம் உருவாகுகிறது.
 இங்கு ராகவா லாரன்ஸ், சரத்குமார் மோதும் சண்டைக் காட்சி 10 நாட்கள் படமாக்கப்படுகிறது.
இப்படத்தின் சண்டைக் காட்சியை ஸ்டன்ட்  சிவா அமைக்கிறார். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
பழையபடி கேப்டனாக விஜயகாந்த் கர்ஜிக்க வேண்டும்.; இறைவனிடம் ரஜினி வேண்டுதல்

பழையபடி கேப்டனாக விஜயகாந்த் கர்ஜிக்க வேண்டும்.; இறைவனிடம் ரஜினி வேண்டுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கேப்டன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.
இவரது படங்களில் பஞ்ச் வசனங்களும் ஆக்சன் காட்சிகளும் அனல்பறக்கும்.
ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
தேமுதிக என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பதவி வகித்து வருகிறார் விஜயகாந்த்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவித்து வந்தார்.
கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில்…
“நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சினை காரணமாக விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
டாக்டர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளை நம்ப வேண்டாம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த செய்தியை நம் filmistreet தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் விஜயகாந்த உடல் நலம் குறித்து ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்….
எனப் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
சூர்யாவுக்கு 1.. பஹத்துக்கு 1 கார்த்திக்கு 1.; விக்ரம் படத்தை பிரித்து மேயும் லோகேஷ்

சூர்யாவுக்கு 1.. பஹத்துக்கு 1 கார்த்திக்கு 1.; விக்ரம் படத்தை பிரித்து மேயும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’.

லோகேஷ் இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன் பகத்பாசில், விஜய் சேதுபதி சூர்யா, காளிதாஸ், நரேன், ஷிவானி, மைனா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் ஜூன் 3ம் தேதி வெளியானது.

இப்படம் வெளியான முதல்நாள் முதலே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் மொத்த வசூல் மட்டும் இதுவரை ரூ.350 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் சூர்யா நடித்த ரோலஸ் கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் ரோலஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நடிகர் கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பகத் பாசில் நடித்த அமர் என்ற கேரக்டரையும் மெருகேற்றி ஒரு புதிய கதையை உருவாக்க போகிறாராம் லோகேஷ்.

கமலின் ‘விக்ரம்’ கேரக்டர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் பகத்தின் அமர் கேரக்டர் என ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியாக கதைகளை அமைத்து மூன்றையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ்.

இதில் அமர் கேரக்டரின் முந்தைய காலகட்டம் சொல்லப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி நடித்த கைதி படத்தின் காட்சிகள் இடம் பெற்றது. எனவே கார்த்தியின் டெல்லி கேரக்டரும் அடுத்த பாகத்தில் இடம் பெறும் என நம்பலாம்.

எனவே கைதி மற்றும் விக்ரம் படங்களின் தொடர்புள்ள காட்சிகளும் அடுத்த பாகத்தில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Lokesh Kanagaraj talks about his upcoming films

More Articles
Follows