ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு கமல் ரூ. 20 லட்சம் நன்கொடை

ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு கமல் ரூ. 20 லட்சம் நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan donates Rs 20 lakhs for Tamil Chair at Harvard Universityஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

இதற்கு நடிகர்கள் ஜிவிபிரகாஷ், விஷால் ஆகியோர் நன்கொடைகளை அளித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

தற்போது நடிகர் கமல்ஹாசனும் தற்போது ரூ. 20 லட்சம் நன்கொடையை அளித்துள்ளார்.

அதுகுறித்த விவரம் வருமாறு…

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் அவர்கள் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார்.

இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

‘ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்’ என்பது அவர் கருத்து’ எனக் கூறினார். இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.

Kamalhassan donates Rs 20 lakhs for Tamil Chair at Harvard University

kamal donates 20 lakhs

பிரேம்ஜி-யை என் படத்தில் நடிக்க வச்சா திட்டுறாங்க: வெங்கட்பிரபு

பிரேம்ஜி-யை என் படத்தில் நடிக்க வச்சா திட்டுறாங்க: வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabu premjiசுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ், பார்த்திபன், ஆர்ஜெய், டேனி, சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம்.

இப்படத்தை சந்திரன் மற்றும் அவரது அண்ணன் ரகுநாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அஸ்வத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை சற்றுமுன் சென்னையில் வெளியிட்டனர்.

இது தொடர்பான விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா, தனஞ்செயன், வெங்கட் பிரபு, ஜெயப்பிரகாஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது வெங்கட் பிரபு பேசியதாவது…

எனக்கு முன்னால் பேசியவர்கள் எனக்கு ஒரு தம்பி (பிரேம்ஜி) கிடைத்த மாதிரி ரகுநாந்துக்கு சந்திரன் கிடைத்துள்ளதாக பலரும் பேசினர்.

என்னுடைய எல்லாம் படத்திலும் பிரேம்ஜி இருப்பார். ஆனால் ட்விட்டரில் நிறைய பேர் என்னுடைய படத்தில் பிரேம்ஜி வேண்டாம் சொல்றாங்க.

எனவே இனி என் படத்திற்கு பிரேம்ஜி இசையமைப்பார்.

என்னுடைய இயக்கத்தில் டி.சிவா தயாரிக்கும் ஒரு படத்தில் பிரேம்ஜிதான் இசையமைக்கிறார்.” என பேசினார்.

Here after Premji will not be there in my movies as a actor says Venkat Prabu

ரஜினி-சூர்யா-தனுஷிடம் பார்த்த அதே குணம் விஜய்ஆண்டனியிடம் உள்ளது: ராதிகா

ரஜினி-சூர்யா-தனுஷிடம் பார்த்த அதே குணம் விஜய்ஆண்டனியிடம் உள்ளது: ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhika vijay antonyபாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் அண்ணாதுரை.

அறிமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி இசையமைத்து படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகை ராதிகா பேசும்போது….

விஜய் ஆண்டனியை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும். அவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல. மிகவும் உண்மையாக நடந்துக் கொள்வார்.

ராடான்’ தயாரித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ டி.வி.தொடருக்கு விஜய் ஆண்டனியை இசை அமைக்க வைத்து அறிமுகப்படுத்தியதிலிருந்து எனக்கு அவரை தெரியும்.

அவருடைய வளர்ச்சி அபாரமானது. என்னுடைய கணவர் சரத்குமாருக்காக வந்த கதைதான் ‘அண்ணாதுரை’.

ஆனால் இந்த கதையில் என்னை விட விஜய் ஆண்டனி நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் என் கணவர் சரத்குமார். அதற்கு பிறகு இந்த கதையை அவரை கேட்க வைத்து அதை நாங்கள் இணைந்து தயாரிக்க முடிவு செய்தோம்.

அதற்கு முன்பே அவரின் பிச்சைக்காரன் படம் பார்த்தேன். அருமையான படம். விஜய் ஆண்டனி நல்ல நடிப்பை கொடுத்திருந்தார்.
விஜய்ன்னு பேரு வச்சாலே அவங்க சூப்பர் ஆயிடுறாங்க. அது ஜோசப் விஜய் இருந்தாலும் விஜய் ஆண்டனியாக இருந்தாலும் அப்படித்தான்.
நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் உதவி கேட்க வேண்டியதில்லை. சிலர் அவர்களாகவே முன்வந்து செய்வார்கள்.

இந்த குணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பார்த்துள்ளேன். சூர்யா மற்றும் தனுஷ் கூட இதுபோல் செய்வார்கள்.

அதுபோல் விஜய் ஆண்டனியுடம் அவரே தானாக முன்வந்து உதவி செய்வார். என்று பேசினார் ராதிகா.

Radhika sarathkumar speaks about Vijay Antony characters

விஜய்யை போல் விஜய்ஆண்டனியும் சூப்பர் ஸ்டாராக வருவார்: சரத்குமார்

விஜய்யை போல் விஜய்ஆண்டனியும் சூப்பர் ஸ்டாராக வருவார்: சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarathkumarவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்து எடிட்டிங் செய்து இசையமைத்துள்ள படம் ‘அண்ணாதுரை’ இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இயக்குனர்கள் வசந்தபாலன், சுசீந்திரன் முதலானோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சீனிவாசன் இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

ராதிகா சரத்குமாரின் ‘ஆர்.ஸ்டுடியோஸும்’, விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘அண்ணாதுரை’ படத்தின் 10 நிமிட காட்சிகளையும் படத்தின் பாடல்களையும் திரையிட்டனர்.

விழாவில் தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, டி.சிவா, காட்ரகட் பிரசாந்த், தனஞ்சயன், இயக்குனர்கள் வசந்தபாலன், கௌரவ் நாராயணன், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்!

இவ்விழாவில் சரத்குமார் பேசும்போது… ‘‘இங்கு பேசிய நிறைய பேர் ஏதாவது காண்ட்ராவர்சி பண்ணுங்கள். அப்படி பேசுங்கள். அப்போது தான் படம் நன்றாக ஓடும் என்றார்கள்.

ஆனால் இப்படத்திற்கு காண்ட்ராவர்சி தேவையில்லை. இந்த படத்தின் கதைக்காகவே படம் நன்றாக ஓடும்.

இந்த படத்தை இயக்கியிருக்கிற சீனிவாசன் சிறந்த டெக்னீஷியன். வைரம் போன்றவர். வைரத்தை பார்க்கும்போது இது வைரம் என டக்கென்று நமக்கு தெரியும்.

சூரியன் படத்தில் ஒர்க் செய்தபோது ஷங்கரிடம் ஒரு ஃபயரை பார்த்தேன்.

அதன்பின்னர்தான் அவர் ஜென்டில்மேன் படத்தை டைரக்ட் செய்தார்.

நான் கமலா தியேட்டரில் நடந்த ஒரு படத்தின் நூறாவது நாள் விஷாவில் நடிகர் விஜய் பற்றி பேசும்போது அவர் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று சொன்னேன்!

அதைப் போல இந்த விழாவில் சொல்கிறேன், இந்த விஜய் ஆண்டனியும் ஒரு சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆவார் என சொல்கிறேன்.

இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

Vijay Antony will become Superstar Like Vijay says Sarathkumar

துல்கர் சல்மான் உடன் இணையும் துருவ நட்சத்திரம் நாயகி

துல்கர் சல்மான் உடன் இணையும் துருவ நட்சத்திரம் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dulquer salmaan and ritu varmaமலையாளத்தில் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் சில நேரடி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

`வாயை மூடி பேசவும், `ஓ கே கண்மணி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான `சோலா’ படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஐ.டி. ஊழியராக நடிக்க, இவரது ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார்.

இவர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

டி.இமான் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `திருடா திருடா’ படத்தில் `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விக்ரம் மகன் துருவ் உடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி இணைந்தது எப்படி?

விக்ரம் மகன் துருவ் உடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி இணைந்தது எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv and jhanvi kapoorநடிகர் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

பாலா இயக்கவுள்ள இப்படம் அர்ஜீன் ரெட்டி என்ற தெலுங்கி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதே ரீமேக் ரூட்டில் தனது மகள் ஜான்வியை அறிமுகம் செய்யவுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.

மராட்டிய மொழியில் வெற்றி பெற்ற ‘சாய் ராட்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில்தான் ஜான்வி அறிமுகமாகவுள்ளார்.

தனது மகள் ஜான்வி அறிமுகம் பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது:-

நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள்.

மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தியுள்ளேன்.

எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள்.” இவ்வாறு ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

More Articles
Follows