தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்; கமல் கண்டனம்

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan condemns TN Students must write NEET exam at other states+2 படிப்பை முடித்த பின் மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும்.

இந்தாண்டுக்கான நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.” என கமல் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan condemns TN Students must write NEET exam at other states

நமக்கு தேவையானதை பெற போராட வேண்டும்..; இயக்குனர் ரஞ்சித் பேச்சு

நமக்கு தேவையானதை பெற போராட வேண்டும்..; இயக்குனர் ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Pa Ranjithதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், பா.இரஞ்சித், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, பிரேம் பெண்கள் மைய தலைவர் வைசாலி சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது…

“இது பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம்.

பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் தைரியமாக எதிர்க்கிறார்கள்.

அந்த தைரியத்தின் வெளிப்பாடாக இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.

இந்த சங்கம் ரொம்ப வீரியமாக செயல் பட வேண்டும்.

சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி கூறும் போது, அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் ஆடைதான் காரணமா?

அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும்.

அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும்” என்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் சம்பளம் தெரியுமா.?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் சம்பளம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஜீன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

மற்றொரு படமான 2.0 படம் 2018 தீபாவளிக்குள் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படத்தில் ரஜினியின் சம்பளமாக ரூ. 65-70 கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராகவுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 புரோமோ சூட்டிங்கில் கமல்

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 புரோமோ சூட்டிங்கில் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanவிஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் பலரும் தற்போது சினிமாவில் பிஸியாகிவிட்டனர்.

அதில் பங்கேற்ற ஜீலி என்பவரும் படு பிரபலமாகி தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

எனவே பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொடங்க விஜய் டிவி முடிவு எடுத்தது.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி கமல், அரசியல் பணிகளில் தீவிரமாகி விட்டாலும், கமலை தவிர வேறு எவர் அந்த நிகழ்ச்சியை வழங்கினாலும் தேறாது என்பதாலேயே மீண்டும் அவரை பிக்பாஸாக மாற்றியுள்ளனர்.

எனவே இன்று பிக்பாஸ் 2 புரோமோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் கமல் பங்கேற்கிறார்.

அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்த பாட்ஷா என்பவர் அதிர்ச்சியில் மரணம்

அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்த பாட்ஷா என்பவர் அதிர்ச்சியில் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

avengers infinity warஉலக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’ படம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ஆன்டனி ரஸோ, ஜோரஸோ ஆகியோர் இந்த படத்தை இயக்கி உள்ளனர்.

இப்படத்தில் ராபர்ட்டானி, கிறிஸ்கெம்ஸ் வொர்த், பார்க்ரூபலா, கிறிஸ்வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.150 கோடி வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ‘3டி’ தொழில்நுட்பத்தில் பார்த்தால் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருக்கும்.

துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டுகள் படத்தை பார்ப்பவர் மீது பாய்வது போன்ற பிரமை ஏற்படும்.

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு தியேட்டரில் இந்த படத்தை பார்ப்பதற்கு பாட்ஷா என்பவர் தன் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

3டியில் இந்த படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அதிரடி சண்டை காட்சியை ரசித்துக் கொண்டிருந்த அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதாம்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் கிகிச்சை பலனின்றி பாட்ஷா பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

ரஜினி-கமலின் அரசியல் பேச்சால் தமிழக அரசின் அதிரடி உத்தரவு

ரஜினி-கமலின் அரசியல் பேச்சால் தமிழக அரசின் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and kamal haasanநடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.

இருவரும் கல்லுாரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்களிடையே கலந்துரையாடி அரசியல் பேசி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மத்திய – மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும், பல்வேறு கருத்துகளை பேசியிருந்தனர்.

இதுகுறித்து, ஆளுங்கட்சியினர் தரப்பில், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, கல்லுாரிகளில் அரசியல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்லுாரிகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்போர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளை, தங்கள் உரைகளில் பேசி வருகின்றனர்.

இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமையும். மாணவர்களின் மனப்பான்மை பாதிக்கப்படும்.

கல்லுாரிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், தங்களின் அரசியல் கொள்கைகள், பிற இயக்கங்களின் கருத்துகளை, மாணவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான விழாக்களுக்கு, கல்லுாரிகள் அனுமதி தரக்கூடாது. இதுகுறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Articles
Follows