எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவுக்கு கமல் இரங்கல்

எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasan and Ashoka mithranஉடல்நலக்குறைவால் பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் (85) காலமானார்.

இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தன் இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.

அசோக்மித்திரன் பற்றி சில குறிப்புகள்…

1931ம் ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் தியாகராஜன்.

இவரது தண்ணீர் நாவல் வாசகர்களிடையே மிகப்பிரபலமானது.

அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதை தொகுப்பிற்கு 1996ல் சாகித்ய அகாடமி விருதை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர், மானசரோவர், ஒன்றன் உள்ளிட்ட 15 நாவல்களையும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

சாரல் இலக்கியச் சிந்தனை, அக்சரா உள்ளிட்ட இலக்கிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ குறித்து ஸ்னேகா

சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ குறித்து ஸ்னேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and snehaமோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், பஹத்பாசில் உள்ளிட்ட நட்சத்திர பட்டளாமே நடித்து வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் சினேகா கூறியதாவது…

‘பஹத் பாசில் உடன் ஏற்கனவே மலையாளப் படத்தில் நடித்திருக்கிறேன்.

அவரது ரசிகையான நான் இதில் அவருடன் ஜோடியாக நடிக்க உள்ளேன்.

இந்தப் படத்தின் கேரக்டருக்காக உடல் எடையை குறைத்துள்ளேன்.

என் கேரக்டர் இப்போதே சொல்வது நன்றாக இருக்காது.’ என்றார்.

உங்க சினிமா ஸ்டார்ஸ் எவ்வளவு வரி கட்டுறாங்க..?

உங்க சினிமா ஸ்டார்ஸ் எவ்வளவு வரி கட்டுறாங்க..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hrithik roshan and salman khanசினிமாவில் டாப் ஹீரோஸ்க்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பட்ஜெட் படங்களை எடுத்துவிடலாம் என்பார்கள்.

எனவே, கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இவர்கள் முறையாக வரி கட்டுகிறார்களா? என்ற சந்தேகம் நிச்சயம் ரசிகர்களிடைய எழத்தான் செய்யும்.
இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக சம்பளம் பெறும் இந்தி நடிகர்கள், தங்கள் வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி வருகிறார்களாம்.

அதன்படி கிடைத்துள்ள தகவல்களின் படி…

சல்மான்கான் வருமான வரியாக ரூ. 44.5 கோடி இந்தாண்டு செலுத்தி இருக்கிறார். கடந்த முறை இவர், ரூ. 32.2 கோடி வரியாக செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய்குமார் ரூ.29 கோடியையும், ஹிருத்திக் ரோஷன் ரூ.25.5 கோடியையும் வரியாக செலுத்தி உள்ளனர்.

கோச்சடையான் புகழ் நடிகை தீபிகா படுகோன் ரூ.10 கோடி வரி செலுத்தி இருக்கிறார்.

நடிகை அலியா பட் முன் கூட்டியே வரி செலுத்தும் பட்டியலில் இந்த வருடம்தான் இணைந்திருக்கிறார். இவர் ரூ.4.33 கோடி செலுத்தியுள்ளார்.

‘நான் பிழைப்பேனா….?’ யாரிடம் மாட்டிக் கொண்டார் தனுஷ்..?

‘நான் பிழைப்பேனா….?’ யாரிடம் மாட்டிக் கொண்டார் தனுஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush enpt ஒரு பக்கம் இயக்கம். மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

தான் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தை வெளியிடும் முயற்சியில் இருக்கும் தனுஷ், மற்றொரு புறம் கெளதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷ் உடன் மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன், இப்படத்தில் இடம் பெற்ற ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற பாடல் டீசர் வெளியாகி ஹிட்டானது.

ஆனால் படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற தகவல் மட்டும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் மார்ச் 25ஆம் தேதி இந்த படத்தின் அடுத்த பாடலான
‘நான் பிழைப்பேனா?’ என தொடங்கும் பாடலை வெளியிட இருக்கிறார்களாம்.

அது இருக்கட்டும்… யாரிடம் மாட்டிக் கொண்டு நான் பிழைப்பேனா? என தனுஷ் கேட்கிறார் என்பதுதான் தெரியவில்லை.

enpt 2nd single

உலக நாயகன் ரூட்டில் பயணிக்கிறாரா இளைய தளபதி.?

உலக நாயகன் ரூட்டில் பயணிக்கிறாரா இளைய தளபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Vijayஎந்தவிதமான கேரக்டர் என்றாலும் எந்த ஈகோவும் இல்லாமல் இறங்கி அடிப்பார் உலக நாயகன் கமல்ஹாசன்.

ஓரிரு படங்கள் சீரியஸ் என்றால், மற்றொரு படத்தை காமெடி ஸ்பெஷலாக கொடுப்பார்.

சில வருடங்களாவே கமல் இந்த ரூட்டில் பயணித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அதுபோல் இளையதளபதி விஜய்யும் இந்த ரூட்டில் பயணித்து வருவதாக தெரிகிறது.

துப்பாக்கி, தலைவா சீரியஸ் படங்களை தொடர்ந்து, ஜில்லா என்ற கமர்ஷியல் படத்தை கொடுத்தார்.

அதன்பின்னர், கத்தி என்ற சீரியஸ் படத்தை கொடுத்து புலி படத்தை கொடுத்தார்.

தெறியை தொடர்ந்து பைரவா என்ற கமர்ஷியல் படத்தை கொடுத்தார்.

தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் சமூகம் சார்ந்த சீரியஸ் பிரச்சினையை கதைக்களமாக கொண்டுள்ளது என தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ரூட் இனியும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

Did Vijay follows Kamalhassan route

ஆட்டத்தை ஆரம்பிக்க போகும் தனுஷுக்கு சிம்பு வாழ்த்து

ஆட்டத்தை ஆரம்பிக்க போகும் தனுஷுக்கு சிம்பு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanushதனுஷ் முதன்முறையாக இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படத்தின் ட்ரைலர் வெளியானது.

தற்போது இப்படத்திற்கு ப. பாண்டி என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலரில் இறுதியாக இனிமே தாண்டி ஆட்டமே ஆரம்பம் என தனுஷ் கூறுவது போல் காட்சி உள்ளது.

இதனை ரசித்த இவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக தனுஷ் இயக்கியுள்ள ப.பாண்டி ட்ரைலருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் சிம்பு.

இதற்கு தனுஷ் நன்றி தெரிவித்தார்.

Simbu wishes Dhanush for Power Paandi Trailer

More Articles
Follows