கமல் மலையாளியா? முதல்வருக்கு எழுதிய லெட்டரால் வந்த குழப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபிரான்ஸ் நாட்டு அரசின் ‘செவாலியே’ விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் செய்திகளில் படித்தோம்.

இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் தமிழக அரசு சார்பாக எந்தவித வாழ்த்தும் வரவில்லை.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்… ‘‘உங்களுக்குத் தகுதியான விருது செவாலியர். இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து கமல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது…

‘‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!

‘வேற்று மாநில முதல்வர், தமிழக நடிகரை பாராட்டுவது எவ்வளவு அழகு’ என்பதாகச் சிலர் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.

இதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

திரு.பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்.

நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள் – கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று தெரியும்’’ என்று எழுதியுள்ளார்.

தற்போது கமலின் இக்கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ரஜினிக்கு தெலுங்கு-கன்னடம்; விஜய்சேதுபதிக்கு இந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த ‘தர்மதுரை’ அண்மையில் வெளியானது.

யுவன் இசையமைத்திருந்த இப்படத்தை பிரபல வில்லன் நடிகன் ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.

இப்படத்தை பார்த்த கோலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த்தும் தனது பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கை சீனுராமசாமியே இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்மதுரை வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஏற்காத வேடத்தில் விஜய் – ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னதான் ஆயிரம் வேலை இருந்தாலும், நம்மள பெத்தவங்க நம்மள ஒரு போலீஸாகவோ, டாக்டராகவோ, வக்கீலாவோ, கலெக்டராகாவோ பார்க்க ஆசைப்படுவாங்க.

இதெல்லாம் நடக்கிற காரியமா? பாஸ்.. அப்படின்னு நாம சினிமா பாக்க கிளம்பிடுவோம்.

ஆனா அதுல நம்ம ஹீரோ இதுல ஏதாச்சும் ஒரு கேரக்டரா வந்து சும்மா பறந்து பறந்து விசிலடிப்போம்.

இதுபோல நம்ம விஜய், நிறைய கேரக்டர் பண்ணிட்டாரு. மதுர படத்துல கலெக்டர், தெறி படத்துல போலீஸ், தமிழன் படத்துல வக்கீல் அப்படின்னு எல்லாம் பண்ணிட்டாரு.

ஆனால் இதுவரைக்கும் அவரு டாக்டராக நடிக்கல. இப்போ அந்த குறையையும் தன் ரசிகர்களுக்கு தீர்த்து வைக்கப் போறாராம்.

பரதன் இயக்கி வரும் ‘விஜய் 60’ படத்துல கீர்த்தி சுரேஷும் மருத்துவ கல்லுரி மாணவியாக நடிக்கிறார்.

இதுல விஜய்யும் ஒரு டாக்டராக நடிக்கிறாராம்.

ரஜினி-தனுஷ் கூட்டணியில் இணைந்தது பற்றி ரஞ்சித் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகமே எதிர்பாராத வண்ணம் நேற்று நள்ளிரவு பெரும் இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு வந்தது.

கபாலியை தொடர்ந்து, மீண்டும் ரஜினி படத்தை ரஞ்சித் இயக்குகிறார்.

இப்படத்தை தனுஷ் தன் வுண்டர்பார் பேனரில் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் காட்டுத் தீயாய் பரவியது.

இதுகுறித்து ரஞ்சித் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“ரஜினி சாரிடம் ஒன்லைன் கதை சொன்னேன். அவருக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது.

இது வேறு ஒரு ஜேனர் கதை. நிச்சயமாக இது கபாலி 2 இல்லை. விரைவில் எல்லாம் தகவல்களும் வரும்” என்றார்.

மீண்டும் ஆர்யா பக்கம் சாயும் நயன்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சப்பை படத்தை தொடர்ந்து ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.

இதனையடுத்து, அமீர் இயக்கவுள்ள பீரியட் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு சந்தன தேவன் என்ற பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன், கொஞ்சம் கால அவகாசம் கேட்டு இருக்கிறாராம்.

அவர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் ஆர்யா தோளில் சாய்ந்து டூயட் பாடுவார் என்று எதிர்பார்ப்போம்.

செப்டம்பர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இதற்கு முன்பே, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு விருந்தளிக்க செப்டம்பரில் ஒரு டஜன் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்னும் ஓரிரு தினங்களில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டாலே நிறைய பண்டிகைகள் வரும். எனவே அதனை முன்னிட்டு நிறைய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி விட்டன.

இதில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி சசிகுமாரின் கிடாரி மற்றும் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குற்றமே தண்டனை படங்கள் வெளியாகவுள்ளன.

இதனையடுத்து யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள விக்ரமின் இருமுகன் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.

மற்ற படங்களின் வெளியீட்டு தேதிகள் இதுவரை வெளியாகவில்லை என்பதால் படங்களின் பெயர்களை கொடுத்துள்ளோம்….

  • தனுஷ் நடித்துள்ள தொடரி
  • விக்ரம் பிரபு நடித்துள்ள வீரசிவாஜி
  • அருண்விஜய் நடித்துள்ள வா டீல்
  • பிரபு நடித்துள்ள மீன் குழம்பும் மண் பானையும்
  • விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை
  • த்ரிஷா நடித்துள்ள நாயகி
  • சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா

இவையில்லாமல் அச்சமின்றி உள்ளிட்ட மற்ற படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

More Articles
Follows