தேர்தலில் போட்டியிடும் கமலுக்கு வாழ்த்து; ஆதரவளிப்பாரா ரஜினி ?

தேர்தலில் போட்டியிடும் கமலுக்கு வாழ்த்து; ஆதரவளிப்பாரா ரஜினி ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal thanks Rajini for Best Wishes To MNM Ahead Of Lok Sabha Polls24 வருடங்களாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்று தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருந்தது. விரைவில் வருகிறேன் என அவர் அறிவித்துவிட்டாலும் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திடீரென தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி, நேரடி அரசியலில் களம் கண்டுள்ளார் கமல்.

தற்போது அவரது கட்சி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் மே மாதம் நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியுள்ளார் கமல்.

யாருடனும் கமல் கட்சி கூட்டணி வைக்காமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது 40 ஆண்டு கால நண்பர் கமலை வாழ்த்தியுள்ளார் நடிகர் ரஜினி.

அதில்… “கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப்போகும் மக்கள் நீதி மைய தலைவர், என் நண்பர் கமல்ஹாசன் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,
நன்றி @rajinikanth, என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே. என கமல் பதிவிட்டுள்ளார்.

Kamal thanks Rajini for Best Wishes To MNM Ahead Of Lok Sabha Polls

Breaking சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் ஜிவி. பிரகாஷ் பட நாயகி

Breaking சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் ஜிவி. பிரகாஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naachiyaar fame Ivana team up with Sivakarthikeyan in SK15சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன்பின்னர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்து விட்டு இரும்புத்திரை டைரக்டர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இது சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகவுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் அர்ஜீன் நடிக்கவுள்ளார்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம்.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் நடிகை இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இவர் நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். இன்று இவானாவின் பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Naachiyaar fame Ivana team up with Sivakarthikeyan in SK15

91வது ஆஸ்கார் விருதுகள் முழு விவரப்பட்டியல் இதோ..

91வது ஆஸ்கார் விருதுகள் முழு விவரப்பட்டியல் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

91st Academy Awards 2019 Oscars the complete list of winnersஉலகில் பல சினிமா விருதுகளை இருந்தாலும் உலக சினிமா கலைஞர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு விருது என்றால் அது ஆஸ்கர் விருதுகள் தான்.

தற்போது 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் முதன்முறையாக நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி இந்த விழா துவங்கியது.

இதில் போகிமியான் ராஃப்சோடி படம் அதிகபட்சமாக சிறந்த நடிகர் உட்பட நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

பிளாக் பேந்தர், ரோமா படங்கள் தலா 3 ஆஸ்கர் விருதுகளை வென்றன. கிரீன் புக் உள்ளிட்ட படங்கள் தலா 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.

முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – கிரீன் புக்

சிறந்த இயக்குநர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)

சிறந்த நடிகர் – ரமி மாலக் (போகிமியான் ராஃப்சோடி)

சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மேன் (த ஃபேவரைட்)

சிறந்த ஆவணப்படம் – எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் (ப்ரீ சோலோ)

சிறந்த வெளிநாட்டு படம் – ரோமா (மெக்ஸிகோ)

இந்த திரைப்படம் 1970களில், நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும்.

சிறந்த திரைக்கதை – நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி (கிரீன் புக்)

தழுவல் திரைக்கதை – சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின் வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மேன்)

சிறந்த பின்னணி இசை – லட்விக் கோரன்சான் (பிளாக் பேந்தர்)

சிறந்த பாடல் – ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த துணை நடிகர் – மஹர்ஷலா அலி (கிரீன் புக்)

சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங் (இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)

சிறந்த ஒப்பனை – கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்)

ஆடை வடிவமைப்பு – ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)

தயாரிப்பு வடிவமைப்பு – ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஸ்பைடர் மேன் – இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாவ்

சிறந்த ஆவண குறும்படம் – பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ஸ்கின்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்

சிறந்த ஒளிப்பதிவாளர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)

சிறந்த படத்தொகுப்பாளர் – ஜான் ஓட்மேன் (போகிமியான் ராஃப்சோடி)

சிறந்த ஒலி படத்தொகுப்பு – ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (போகிமியான் ராஃப்சோடி)

ஒலி கோர்ப்பு – பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி (போகிமியான் ராஃப்சோடி)

91st Academy Awards 2019 Oscars the complete list of winners

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி!

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jayam raviஅசாதரணமான திரை ஆளுமை, தொழில்நுட்பம் அறிந்த ஒரு கலைஞர், மற்றும் ‘வெகுஜன’ மக்களின் மனதில் நிற்கும் அம்சங்களை கலவையாக ஒருவர் கொண்டிருப்பது மிகவும் அரிதானது. மிகக் குறைந்த நடிகர்களே இந்த நிலையை அடைந்துள்ளனர். மாஸ் படங்களில் நடித்து கைதட்டல் மற்றும் விசில்களை பெறும் அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார்கள். ஜெயம் ரவியின் அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

மிகவும் மகிழ்ச்சிகரமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஜெயம் ரவி கூறும்போது, “நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

நான் கவனித்த வகையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். அவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை வெளியிடுவது மற்றும் அதை மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். நிச்சயமாக, ஆக்கப்பூர்வமான, வித்தியாசமான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரைப்பட இயக்குனர்கள் இல்லையெனில் இது சாத்தியமில்லை. அவர்களின் நீண்ட பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் அனைவருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் பல மடங்கு பலனை திருப்பி தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

தற்போது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார் நடிகர் ஜெயம் ரவி.

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் “கோடீஸ்வரி “

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் “கோடீஸ்வரி “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KR Vijayaஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கோடீஸ்வரி ” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார்.

இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக காவல் துறை அதிகாரியாக ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகிகளாக் அஷ்மா , சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

கராத்தேராஜா, டி.பி கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் .கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – A.S.ராஜ்

இசை – தாமஸ் ரத்னம்

எடிட்டிங் – ராம் நாத்

பாடல்கள் – நந்தலாலா

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன்.

இவர் ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், கலைமணி, E.ராம்தாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்

ஜெயலலிதா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayalalithaas biopic titled Thalaivi Directed by Vijayமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அவரின் வாழ்க்கையை படமாக்கவுள்ள இயக்குனர் விஜய் அவர்கள் அப்படத்தலைப்பை அறிவித்துள்ளார்.

`தலைவி’ என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்.

இப்படம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது,

“தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் “தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்” என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது.

ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர்.

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர்.

இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்றார்.

விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார்.

ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Jayalalithaas biopic titled Thalaivi Directed by Vijay

Jayalalithaas biopic titled Thalaivi Directed by Vijay

More Articles
Follows