பர்ஸ்ட் சொல்லுவோம்; அப்புறம் அரசை பாத்துப்போம்… ரஜினிக்கு ஆதரவாக கமல்

பர்ஸ்ட் சொல்லுவோம்; அப்புறம் அரசை பாத்துப்போம்… ரஜினிக்கு ஆதரவாக கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajiniதமிழக அரசின் வரி விதிப்பால் தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே தமிழக அரசு கேளிக்கை வரியை நீக்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் காக்க வேண்டும் என ரஜினி இன்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், அவர் கூறியுள்ளது தமிழக அரசை மிரட்டும் தோனியில் அமைந்துள்ளதை காணலாம்.

அந்த பதிவு இதோ….

“நன்றி ரஜினி அவர்களே உங்கள் குரலைப் பதிவு செய்ததற்கு. முதலில் ஒரு ஜென்டில்மேனாக, வேண்டுகோள் விடுப்போம். பிறகு தமிழக அரசைப் பார்த்துக் கொள்வோம்” என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கமல்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 10m10 minutes ago
Thanks Rajni avaragaLay for voicing your concern. Lets request first as gentlemen should. Then we shall see. @superstarrajini & TN .Govt.

Kamal supports Rajini to stand against TN Govt Tax issue on Cinema

ஆயுதபூஜைக்கு அசத்த வரும் ‘ரெமோ’க்கள்; ஆர் யூ ரெடி.?

ஆயுதபூஜைக்கு அசத்த வரும் ‘ரெமோ’க்கள்; ஆர் யூ ரெடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram sivakarthikeyanவருகிற செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகை வருகிறது.

இதனை முன்னிட்டு பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

செப்டம்பர் 27ஆம் தேதி மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் ரிலீஸ் ஆகிறது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதேநாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரனும் ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் விக்ரம், தமன்னா நடித்துள்ள ஸ்கெட்ச் படமும் அன்றைய நாளில் வெளியாகக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

அட விக்ரம், சிவகார்த்திகேயன் என இரண்டு ‘ரெமோ’க்களும் இணைந்து வந்தால் நமக்கு சந்தோஷம்தானே..

Vikram and Sivakarthikeyan movie release on Ayudha Pooja

சிவகார்த்திகேயன் மோதலை தவிர்க்க மகேஷ்பாபு திட்டம்

சிவகார்த்திகேயன் மோதலை தவிர்க்க மகேஷ்பாபு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Spyder movie avoided clash with Velaikkaran movieஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரீத்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் டீசரை பார்த்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலியே இதை பாராட்டியிருந்தார்.

செப்டம்பர் இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு, மீதமுள்ள ஒரு பாடல் காட்சியை விறுவிறுப்பாக தற்போது படமாக்கி வருகிறார் முருகதாஸ்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் ஸ்பைடம் படமும் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகி மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலை தவிர்க்க தற்போது ஸ்பைடர் குழு முடிவெடுத்து, செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

Spyder movie avoided clash with Velaikkaran movie

‘தியேட்டர் கூட்டம் குறையவும் சினிமா அழியவும் கமலே காரணம்’ – மன்சூர்அலிகான்

‘தியேட்டர் கூட்டம் குறையவும் சினிமா அழியவும் கமலே காரணம்’ – மன்சூர்அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan is reason for Film industry loss says Mansoor Alikhan‘கோலி சோடா’ கிஷோர் ஹீரோவாக நடிக்கும் ‘உறுதிகொள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு காதல் புகழ் விருச்சிககாந்துக்கு பட வாய்ப்பை வழங்கினார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அவ்விழாவில் மன்சூர்அலிகான் பேசியதாவது…

நம்ம கவர்மெண்ட்டின் 100 நாள் வேலை திட்டம் போல் கஷ்டப்படுகிற சினிமாகாரங்களுக்கு ஒரு டி.வி சேனல் ஏதோ படி அளக்கிறாங்க.

ஆனால் கமல் மாதிரி ஒரு உலகப்புகழ் பெற்ற நடிகர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமாவை அழிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியால் ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ காட்சிக்கு மக்கள் வருவதில்லை.

பகல் நேரத்திலும் இந்த நிகழ்ச்சி டிவியில் வருவதால், அப்போதும் தியேட்டரில் கூட்டமில்லை.

வெளியிலிருந்து யாரும் வந்து சினிமாவை அழிக்க வேண்டாம். சினிமாக்காரங்களே போதும்.

நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ அல்லது வேறு ஒரு பெரிய நடிகர் நிகழ்ச்சி நடத்தினால், கமல் பட வசூல் என்னவாகும்? அவர் அதை யோசிக்க வேண்டாமா? என்று மன்சூர் அலிகான் பேசினார்.

Kamalhassan is reason for Film industry loss says Mansoor Alikhan

மற்றவர்களை முழுமையாக நம்புவதுதான் என் பலவீனம்… தனுஷ்

மற்றவர்களை முழுமையாக நம்புவதுதான் என் பலவீனம்… தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதனுஷ் கதை எழுதி தயாரித்து நடித்துள்ள விஐபி2 படம் இந்த ஜீலை மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய பலவீனம் எது? வெற்றிமாறன் நெருக்கம் பற்றிய கேள்விகளுக்கு தன் சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துக் கொண்டிருந்தார் வெற்றிமாறன்.

அது ஒரு கனாக்காலம் சூட்டிங்போது ஒரு நாள் இரவில் கதை சொல்ல வந்தார் வெற்றிமாறன்.

கதை கேட்ட உடனே அவரிடம் நான் சொன்ன ஒரே வார்த்தை நிச்சயமாக படம் பண்னுவோம் என்பதுதான்.

அவர் நிச்சயம் உலகளவில் ஒரு பெரிய கலைஞராக வருவேன் என அடுத்த நிமிடமே என் நண்பர்களை அழைத்துச் சொன்னேன்.

பொல்லாதவன் படம் செய்தோம். அதன்பின் மற்ற பட வாய்ப்பு இருந்தும் மீண்டும் எனக்காக ஆடுகளம் படம் செய்தார்.

இன்றளவும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. நான் பெரிதும் நம்பும் ஓரிரு நபர்களில் அவர் முக்கியமானவர்.

எனக்கு வெற்றி தோல்வி எதுவந்தாலும் நான் முதலில் செல்லும் இடம் என் அம்மாவை தேடிதான். அவருக்கு பிறகு என் குழந்தைகள்தான்.

என்னுடைய பலவீனமே நம்பிக்கைதான். என்னுடன் பழகுபவர்களை நிறைய நம்பிவிடுவேன்.

அவர்கள் என்னை ஏமாற்றினாலும் அதை மாற்றிக் கொள்ளமாட்டேன்.

அவர்கள் என்னை ஏமாற்றுவதற்கு நான் என்ன செய்ய முடியும்.” என்றார்.

Confidence is my weekness says Actor Dhanush

சினிமா மீது வரி சுமை; தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

சினிமா மீது வரி சுமை; தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini requests TN government to consider Tamil film industrys pleaஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக சினிமா துறை மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 28% மற்றும் தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரியை திரைத்துறையினர் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இன்றோடு 3வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுவரை திரைத்துறைக்கு சாதகமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரஜினி போன்ற மதிப்புமிக்க கலைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ரஜினி.

அதில்… “தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சக்ணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini requests TN government to consider Tamil film industrys plea

Rajinikanth‏Verified account @superstarrajini
Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea

 

More Articles
Follows