தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமலை, கலாம் பேரன் சலீம் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்.
அப்போது, கலாம் புகைப்படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை சலீம் கமலிடம் வழங்கினார்.
வீட்டின் உள்ளே, அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல் அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
கலாமின் சகோதரருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல்.
மேலும் தன் காலை உணவை அந்த இல்லத்திலேயே சாப்பிட்டார்.
பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில்…
பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
Kamal started his political tour from APJ Abdul Kalam home at Rameswaram