மாணவர்களிடம் உள்ள தெளிவு மத்திய அரசிடம் இல்லை..: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இன்று சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரில் தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது…

“என்னைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதைப் பார்க்கும் போது நியாயமாக பதட்டம்தான் வரும். பெரும் கோபத்தில் வந்தவர்களுக்கு பதட்டம் தெரியாது. போருக்குச் செல்பவர்களுக்கு பதட்டம் போய்விடும், பயமும் போய்விடும்.

இனி, கடமையைச் செய்யும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களும் செய்யும் ஒரு குடும்பமாக இருக்கப் போகிறோம்.

நான் தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து “லோக் ஆயுக்தாவாகதான்” இருக்கும்.

படிப்பு மிக மிக முக்கியம். அதை செய்து விட்டு நீங்கள் வெளியே வந்ததும், உங்களை தாக்கப் போவது அரசியலும், ஊழலும்தான். அதை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் அரசியல்வாதி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அரசியல் தெரிந்தவர்களாக, புரிந்தவர்களாக இருந்தீர்கள் என்றால் வரும் அரசியல்வாதி, நியாயமான அரசியல்வாதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லாதவனாக ஆகிவிடுவான். அதை நான் எதிர்பார்க்கிறேன்.

என்னை பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல விடாமல் பல தடைகள் இருக்கின்றன. அங்கே போய் பேசி புரிய வைத்துவிடுவேனோ என்ற பதட்டம் பலருக்கு இருக்கிறது.

நான் கல்லூரிக்குப் போவதை தடை செய்யலாம், நான் கற்பதைத் தடை செய்ய முடியாது.

ஏதாவது, நல்லது செய்யுங்கள் என்று நம்பி கைகொடுக்கும், ஒரு தோழரிடம், தொண்டனிடம் நான் பாடம் கற்கிறேன். அந்த நம்பிக்கை எனக்கு பாடமாகிறது.

என்னுடைய மேடைகளில் பொன்னாடைகளைத் தவிர்க்கிறோம், பூமாலைகளைத் தவிர்க்கிறோம், காலில் விழுதைத் தவிர்க்கிறோம். இவையெல்லாம் மக்கள் நீதி மய்யம் மேடைகளில் நிகழாது, நிகழ்ந்தால் தடுக்கப்படும்.

மாணவர்களைப் பார்த்து நான் பேச வேண்டும், எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்ல வேண்டும், அவர்களிடமிருந்து நான் கற்க வேண்டும் என்ற சாதாரண தமிழனின் ஆசையைத் தடை போடும் சிலர் எனக்கு வேடிக்கை மனிதர்களாகவே தெரிகிறார்கள்.

அந்த வேடிக்கையை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கட்டும். நாம் வேலையைச் செய்வோம்.

பின்னர் ஒரு மாணவி எழுப்பிய நீட் தேவையா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், “உங்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. அது, யாருக்குமே இல்லை என்பது தான் சரியான பதில்.

காரணம் நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது நாம் தாம். நாம் என்பது தமிழகத்தை சொல்கிறேன்.

தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும். நீங்கள் கேட்ட கேள்விக்கு இதில் பதில் உள்ளது” என கமல்ஹாசன் பேசினார்.

Kamal speech at Ponneri Pvt College about politics and society

ஹிந்தியிலும் எதிர்பார்ப்புக்குள்ளான ஹரிஷ் கல்யாண்-ரைசாவின் காதல் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜா, கே புரொடக்‌ஷன்ஸ் ராஜ ராஜன் இணைந்து தயாரித்து வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’.

இப்படத்தை இலன் என்பவர் இயக்கி வருகிறார்.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழடைந்த ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா நாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் இந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

காதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. “High on Love” என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் பிரதிபலன் இது.

இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், இந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை என்கிறார் இயக்குனர் இலன்.

Pyaar Prema Kaadhal movie hindi theatrical rights news updates

சினிமா ஸ்டிரைக் கூட ப்ளஸ்தான்; ராதா மகள் கார்த்திகா ஏன் இப்படி சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா.

இவர் முன்னாள் நடிகை ராதாவின் மகள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் தற்போது நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக் குறித்து தன் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

வருகிற மார்ச் 30ஆம் தேதி கமல், அம்பிகா நடித்த காக்கி சட்டை படம் ரி-ரிலீஸ் ஆகிறது.

அப்பட போஸ்டரை பதிவிட்டு இந்த சினிமா ஸ்டிரைக்கால் மற்றொரு பக்கம் நல்லது நடக்கிறது.

மிகச்சிறந்த படங்கள் மீண்டும் வெளியாகிறது என பதிவிட்டுள்ளார்.

நடிகை அம்பிகா இவரது பெரியம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Karthika Nair‏Verified account @KarthikaNair9 2h2 hours ago
The plus side of the Tamil film strike.. re-release of some golden movies

Some Golden hit movies releasing in Cinema Strike is plus says Karthika

ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்தில் ரஜினி-சிரஞ்சீவி ஸ்டைல்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘ரங்கஸ்தலம்’.

சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ராம்சரண் தேஜா, சமந்தா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சிட்டிபாபு என்ற கிராமத்து இளைஞராக ராம்சரணும், ராமலட்சமி என்ற கிராமத்துப் பெண்ணாக சமந்தாவும் நடித்துள்ளனர்.

இந்த வாரம் மார்ச் 30ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

80களில் நடக்கும் கதையாக கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் தயாராகியுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்காக 1980களில் வெளியான இவரது தந்தை சிரஞ்சீவியின் ‘ஊரிக்கிச்சின மாட்டா, மன ஊரி பாண்டவலு, ஆபத்பாந்தவடு” ஆகிய படங்களை பார்த்தாராம்.

மேலும் ரஜினிகாந்த் படங்களையும் பார்த்துள்ளதாகவும் அவர்களின் சில ஸ்டைல்களை அதில் பின்பற்றியுள்ளதாகவும் ராம்சரண் தெரிவித்துள்ளார்.

Ramcharan followed Rajini Chiranjeevi styles in Rangasthalam movie

ரசிகரின் காதல் கடிதத்தால் ஆடிப்போன ஆடுகளம் டாப்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஆடுகளம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் டாப்சி.

இதனையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வைராஜா வை ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் தனக்கு வந்த காதல் கடிதங்களிலேயே ஒரு கடிதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாக டாப்சி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-

“பல ரசிகர்களிடமிருந்து காதல் கடிதங்கள் வருகின்றன.

ஒவ்வொரு கடிதத்திலும் ஒவ்வொருவரின் ஆழமான அன்பை காண்கிறேன்.

அதில் ஒரு ரசிகர் “நான் மது அருந்த மாட்டேன். மாமிசத்தை தொட மாட்டேன்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவனாக வாழ்கிறேன்.

உன்மேல் நான் வைத்திருக்கும் அன்பை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.

உண்மை கண்டறியும் சோதனைக்கு கூட தயாராக இருக்கிறேன்.

என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே அன்பே. என் மனது முழுவதும் நீதான் இருக்கிறாய்” என்று எழுதியிருந்தார்.

அந்த கடிதம் என்னை கவர்ந்த ஒன்று” என டாப்சி தெரிவித்துள்ளார்.

27 நாட்களை நெருங்கியது சினிமா ஸ்டிரைக்; தீர்வுதான் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் போராட்டம் செய்து வருகின்றனர்.

பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

மேலும் எல்லா தியேட்டர்களிலும் ஆன்லைட் டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும், ‘பார்க்கிங்’ கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கி இன்றோடு 27 நாட்கள் ஆகிவிட்டது.

மேலும் கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டனர்.

இதனால் சினிமா துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்..

ஒரு சில நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கியிருந்தாலும் சிலர் வெளிநாடுகளுக்கு பறந்து விட்டனர்.

சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பட அதிபர்கள் நேரில் சந்தித்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கி உள்ளனர்.

டைரக்டர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

வேலை நிறுத்தத்தால் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர்.

அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படுமா? என்பது அப்போதுதான் தெரியவரும்.

More Articles
Follows