திறனற்ற தமிழக அரசு; ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டும்… கமல் பேச்சு

திறனற்ற தமிழக அரசு; ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டும்… கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொள்ளாச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது..

மக்கள் என்னை எப்படி பார்க்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

ஈரோட்டில் ஒரு வயதான பெண்மணி என்னிடம் வந்து நீங்களும் எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் என்றார்.

மோடி அரசு விமர்சனக் குரல்களை தடுக்க வெற்றுக் கூச்சலிடுகிறது.

தமிழக அரசை யாரும் மதிப்பீடு செய்ய வேண்டாம். அது திறனற்றது. ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசாக அது உள்ளது.” எனப் பேசினார்.

பொது நலன் கருதி விழாவில் புயலை கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ்

பொது நலன் கருதி விழாவில் புயலை கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pothu nalan karuthiபொது நலன் கருதி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

சீயோன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இவருடன் சிறப்பு விருந்தினர்களாக பிடி. செல்வகுமார், மிஷ்கின், வசந்தபாலன், உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறீர்களா என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு இயக்குனர் வசந்தபாலன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மலையாளம், தெலுங்கு உள்ளிட் மற்ற மொழி படங்கள் வெளியாகி 6 மாதம் ஆனால் கூட அந்த இணையத்தில் படங்கள் இல்லை. ஆனால் தமிழ் படம் மட்டும் உடனே வெளியாகிறது என ஆவேசத்துடன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் மிஷ்கின், தமிழ் ராக்கர்ஸை பிடிப்பதற்காக இரவு பகலாக விஷால் உழைத்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார்.

பின்னர் படக்குழுவினரை வாழ்த்தினார்.

சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப சொல்லும் படம் ‘தேவ்’ : கார்த்தி

சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப சொல்லும் படம் ‘தேவ்’ : கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor karthiரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தேவ் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லட்சுமண் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கார்த்தி பேசும்போது

தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன்.

அவரின் தாத்தா வெற்றி படமான “மதுர வீரனை” தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.

இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.

ரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.

ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் பேசுகையில்,

குழந்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜாத் கதை சொல்லும்போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன் என்றார்.

ரகுல் ப்ரீத் சிங் பேசும்போது

இயக்குநர் ரஜாத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.

கார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது.

அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

இயக்குநர் ரஜாத் ரவி ஷங்கர் பேசும்போது

இந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் பேசிக்கொண்டிருக்கும் போது தான் முடிவானது.

இப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம் தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.

கார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

ரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தான் இருக்கும். இந்த படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார்.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

கேன்சர் நோயாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடிய கௌதமி

கேன்சர் நோயாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடிய கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautamiநடிகை கௌதமி சென்னையில் நேற்று கேன்சர் நோயாளிகளை நேரில் சந்தித்தார்.

VS Hospital அங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார்.

சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்.

இந் நல்லெண்ணத்தில் திருமதி கௌதமி கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

இளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய்சேதுபதி..; திருமுருகன் காந்தி பாராட்டு

இளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய்சேதுபதி..; திருமுருகன் காந்தி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and thirumurugan gandhiமெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார் , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திருமுருகன் காந்தி பேசுகையில்…

“இந்த வெற்றிவிழாவிற்குஇயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புகொடி காட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் சூழலில் 96படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் 96.படம் அற்புதமாக இருந்தது.ஆனால்இந்த படத்தில் இன்னும் சில விசயங்கள் சொல்லியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.

காதல் என்பது ஒரு அற்புதமான விசயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம். காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள். ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி அப்படி செய்ய முடியும்.?எங்கே கோளாறு இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம்.

இது போன்ற தகவல்கள் ஊடகங்களில்அதிகமாக வெளியாகும் சமயத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது போன்றவற்றை பேசும் 96 படம் வெளியாகியிருக்கிறது. காதல் என்பது மனிதர்களுக்குள் மட்டுமே வரக்கூடிய உணர்வு அல்ல,இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிடத்திலும் இருக்கும் அடிப்படை குணாதிசயம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தைப்போல் காதல் என்பது காலத்துடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது.காதல்என்பது காலத்தின்இனிமை, காதல் என்பது நேசத்துடன்கூடிய ஒரு உணர்வு.

படத்தில் நிகழ்காலம் முழுவதும் இரவிலும், கடந்த காலம் முழுவதும் பகலிலும் நடைபெறும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.இதுவும்நன்றாக இருந்தது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார்.

அதை படத்தின் முதல் பாடலிலேயேதெளிவாக சொல்கிறார் இயக்குநர். காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால்அந்த ஆண் வெறுப்புக்கு ஆளாகாமல், வன்மத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையை நேசிப்பவராக, பேரன்பு மிக்கவராக மாறுவதை அந்த முதல் பாடல் எடுத்துக்காட்டும் போது நாமும் மாறிவிடுகிறோம்.

அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார். இதைத்தான்ஒரு பேட்டியிலும் சொன்னேன். இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார்.

இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்களோ, எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார்.

இப்படிபட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன்.

இன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவே இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார்.

அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களை போன்றவர்கள் தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது.

திரிஷாவும் அற்புதமாக நடித்திருந்தார். இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது,

‘இரும்பு பிசிறாக நீளும்

நானிருக்க

நீ செல்லும் ரயில்’ என்ற அறிவுமதியின் கவிதைத்தான் நினைவுக்கு வருகிறது.

‘மல்லிகையின் வாசம்

மழையின் நேசம்

எதுவும் அதுவாக இல்லை.

எல்லாம் அவளின் நினைவுகளாகவே இருக்கிறது.”என்ற என்னுடைய நண்பரின் கவிதையும் நினைவிற்கு வருகிறது.

இன்றைய தேதியில் செல்போன் இருப்பதால் நாம் நினைத்ததை உடனடியாக பேசிவிடுகிறோம். பிடித்ததையும், பேசிவிடுகிறோம். பிடிக்காததையும் பேசிவிடுகிறோம்.

ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் நாம் நினைத்ததை நேரடியாக சென்று சொல்லிய அல்லது சொல்ல தவறிய அனுபவத்தை இந்த படம் அற்புதமாக பேசியிருக்கிறது.

இந்த படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல் தான். நாங்கள் மனிதர்களை காதலிக்கிறோம். இயற்கையை நேசிக்கிறோம்.அதனால் போராடுகிறோம். இது தான் உண்மை.” என்றார்.

எல்லாரையும் ஏங்க வைத்த ’96’ பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்

எல்லாரையும் ஏங்க வைத்த ’96’ பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban created new climax scene for 96 movie in realகாதல் காவியமான 96 படத்தின் 100வது நாள் விழாவில் பார்த்திபன் கலந்துக கொண்டு படக்குழுவினர் வாழ்த்தினார்.

அதன் பின்னர் பார்த்திபன் பேசும்போது…

சில படங்களுக்கு த்ரிஷா இல்லனா நயன்தாரா இருக்கலாம். ஆனால் த்ரிஷாவை தவிர யாரும் இருக்க முடியாது.

இந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாரும் நாயகனும் நாயகியும் ஒரு முறையாவது கட்டி அணைக்க மாட்டார்களா? என்று ஏங்க வைத்தனர்.

எனவே எல்லாருடைய விருப்பமாக தற்போது இருவரை மேடையேற்றி கட்டி அணைக்கு சொல்கிறேன். இது இந்த 96 படத்தின் 100வது நாள் விழாவில் நடைபெறட்டும்.

எனவே பார்த்திபன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும் திரிஷாவும் மேடையேறி ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேடையில் இந்த படத்தின் ஜீவனாக இருந்த பின்னணியிசையை வாசித்து காட்டி ரசிகர்களை உற்சாகமடையவைத்தார்.

Parthiban created new climax scene for 96 movie in real

More Articles
Follows