போராட்டத்தை அடக்கினால் அது மேலும் பரவும்..; கமல் கருத்து

போராட்டத்தை அடக்கினால் அது மேலும் பரவும்..; கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal reaction for TN Peoples protest and Police arrest in Cauvery Issueதன் சினிமா படங்களைப் போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியையும் பரபரப்பாகவே வைத்துள்ளார் கமல்ஹாசன்.

தினம் ஒரு அறிவிப்பு, தினம் ஒரு சந்திப்பு, தினம் ஒரு ட்வீட், பத்திரிகையாளர் சந்திப்பு என அதிரடியாக இயங்கி வருகிறார்.

மும்பையில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்துவிட்டு தற்போது சென்னை வந்துவிட்டார்.

அதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.

அவர் பேசுகையில்,

உயிர், பயிர் காலம் சம்பந்தமானது இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது அடக்குமுறை. போராட்டத்தை அடக்கினாலும் அது மேலும் பரவும்.

ஆகவே இவ்விவகாரத்தில் பிரதமர், தமிழக கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச வேண்டும். காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு தான் நடக்கிறது என்றார்.

இது தொடர்பாக தன் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள். அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே”. என பதிவிட்டிருக்கிறார்.

Kamal reaction for TN Peoples protest and Police arrest in Cauvery Issue

முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா; மம்மூட்டியுடன் இணைகிறார்

முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா; மம்மூட்டியுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anushka to romance with Mammootty in malayalam movieகர்நாடக மாநிலத்தை சொந்த மாநிலமாக கொண்டிருந்தாலும் அனுஷ்காவுக்கு அமோக வரவேற்பு கொடுத்தது என்னமோ தெலுங்கு திரையுலகம்தான்.

தெலுங்கில் அசத்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் இதுவரை நேரடியான மலையாள படங்களில் நடித்தது இல்லை.

இந்நிலையில் விரைவில் தொடங்கவுள்ள ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.

அதில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்ர்.

இப்படத்தை சரத் சந்திப் என்வர் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து, ‘பரோல்’ என்ற மலையாள படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anushka to romance with Mammootty in malayalam movie

விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டரை பாராட்டும் சமந்தா

விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டரை பாராட்டும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha praises Vijay Sethupathis Shilpa character in Super Deluxeவிஜய்சேதுபதி, சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.

இவர்களுடன் ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஆரண்யகாண்டம் பட புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

அந்த கேரக்டரில் சேதுபதியின் பர்பாமென்ஸ் பாராட்டிக் கொண்டே இருக்கிறாராம் சமந்தா.

Samantha praises Vijay Sethupathis Shilpa character in Super Deluxe

என்னை யாருமே பாராட்டல; இனி அதுதான் தொடரும்..; சிவகார்த்திகேயன் உறுதி

என்னை யாருமே பாராட்டல; இனி அதுதான் தொடரும்..; சிவகார்த்திகேயன் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans new condition to his movie directorsபெரும்பாலான ஹீரோக்கள் இளைஞராக சினிமாவில் அறிமுகம் ஆகும்போது பெண்களை கிண்டல் செய்வதும், தண்ணி அடிப்பதும் உள்ளிட்ட காட்சிகளில் அதிகம் நடித்திருப்பார்கள்.

பின்னர் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டம் உருவாகும்போது, பன்ச் டயலாக் பேசி, கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

இதே பாணியை தான் சிவகார்த்திகேயன் தன் படங்களில் செய்து வந்தார்.

ரெமோ படத்தில் வேறொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட நாயகி கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி காதலிக்க சொல்ல டார்ச்சர் கொடுப்பார்.

சிறுவர் சிறுமிகளை அதிகம் கவர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இப்படி செய்யலாமா? என கடுமையாக விமர்சித்தனர்.

அதன்பின்னர் வெளியான வேலைக்காரன் படத்தில் குழந்தைகளை கவரும் விதத்தில் நம்முடைய உணவே விஷமாகிவிட்டது என எச்சரிக்கை செய்யும் வகையில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ஒரு முடிவெடுத்திருக்கிறாராம்.

நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நான் சாதாரண சின்ன நடிகன்தான்.

அந்த காட்சியில் நடிக்க நடிக்க மாட்டேன், இப்படி அப்படி நடிக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியாது.

இயக்குனர்கள் சொன்னதை செய்தேன்.

வேலைக்காரன் படத்திற்கு பின் எனக்கு சமூக பொறுப்பு கூடியிருப்பதாக நம்புகிறேன்.

வேலைக்காரன் படத்தில் மது குடிக்கும் காட்சியோ, பெண்களை கிண்டல் செய்யும் காட்சியோ இடம் பெறவில்லை.

அதுபோன்ற பாடலும் இல்லை. ஆனால் அதை யாருமே பாராட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.

இனி வரும் எனது படங்களில் அப்படியான காட்சிகள் இருக்காது.

என்னை இயக்கும் டைரக்டர்களும் பொறுப்பை உணர்ந்து அதுமாதிரி காட்சிகளை வைக்க மாட்டார்கள் என நம்புகிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyans new condition to his movie directors

மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தை வேடிக்கை பார்க்கும் அரசு; ரஜினி கண்டனம்

மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தை வேடிக்கை பார்க்கும் அரசு; ரஜினி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN govt not responding to protests over Sterlite says Rajinikanth‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த 2019 ஆண்டு முடிவடைகிறது.

ஆலையின் அடுத்த விரிவாக்கப் பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

இந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தூத்துக்குடி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த 47 நாட்ளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும் முதல் நடிகராக கலந்துக் கொள்ளும் ஜிவி. பிரகாஷ் ஆரம்பம் முதலே இந்த போராட்டம் குறித்த விவரங்களை தன் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி இந்த புரட்சி போராட்டத்தில் மக்களில் ஒருவனாக கலந்துக் கொள்ளவிருக்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத அரசு குறித்து ரஜினி தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் கருத்து இதோ…

Rajinikanth‏Verified account @rajinikanth

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது #SterliteProtest

TN govt not responding to protests over Sterlite says Rajinikanth

sterlite

ஹாலிவுட் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டு பிராயசித்தம் தேடிய கமல்

ஹாலிவுட் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டு பிராயசித்தம் தேடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan met hollywood director Christopher Nolan news updates‘விஸ்வரூபம்-2’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இவர்சமீபத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலனை மும்பையில் சந்தித்திருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளதில்…

‘‘சமீபத்தில் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலனை சந்தித்தேன்.

அவர் இயக்கிய ‘டன்கிர்க்’ திரைப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ’ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கியிருக்கிறேன்.

அவர் நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த 90-வது ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘டன்கிர்க்’ திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan met hollywood director Christopher Nolan news updates

More Articles
Follows