மதம் மாறிய மகளே என்ஜாய்… அக்ஷராஹாசனுக்கு கமல் ட்வீட்

மதம் மாறிய மகளே என்ஜாய்… அக்ஷராஹாசனுக்கு கமல் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal on rumours of Aksharahassan changing her religionஎன் அப்பாவை போன்று நானும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தான் என கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷராஹாசன் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவருடைய பேட்டியில் கடவுளை நேசிப்பவர்களை மதிப்பேன். எனக்கு புத்தமதம் பிடிக்கும்.

அது வாழ்வியலோடு கலந்துள்ளது. அதில் நிறைய விஷயங்களை கற்றுவருவதால் என்னை இணைத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்து இருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனையடுத்து மகளின் பேட்டிக்கு கமல் தன் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில்..

“ஹாய்! அக்‌ஷு… நீ மதம் மாறி விட்டாயா? உனக்கு எனது அன்பு. அதற்காக உன்னை வாழ்த்துகிறேன். சிறப்பாக வாழ். லவ் யு பப்பு” என பதிவிட்டுள்ளார்.

Kamal on rumours of Aksharahassan changing her religion

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Hi. Akshu. Have you changed your religeon? Love you, even if you have. Love unlike religeon is unconditional. Enjoy life . Love- Your Bapu

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mani Ratnam and Vijay Sethupathiகாற்று வெளியிடை படத்தை தொடர்ந்து தன் புதிய படத்திற்கான வேலைகளை ணிரத்னம் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் சூட்டிங்கை தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வத்துடன் விஜய்சேதுபதி இருப்பதாகவும் அதற்காக தன் கால்ஷீட்டுக்களை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

எனவே விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

பிக்பாஸ் வீடு நரகம்; பாதிதான் உண்மை… நமீதா ஓபன் டாக்

பிக்பாஸ் வீடு நரகம்; பாதிதான் உண்மை… நமீதா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Namithaகடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் (அதாவது 25 நாட்களுக்கு பின்னர்) இருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை நமீதா.

அதற்கு முன் அவர் ஓவியாவுடன் பெரும் சண்டை போட்டு அவரை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

வெளியேற்றப்பட்ட பின்னர், நடிகர் பரணி தன்னிடம் தவறான அணுகுமுறையை மேற்கொண்டார் என கமலிம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நமீதா.

அதில்… ‘பிக்பாஸ் வீடு ஒரு நரகம். அதில் பாதிதான் உண்மை.

ஷோ இயக்குனர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றுவதில் அவர்கள் வல்லவர்கள்.

அவர்கள் காட்டுவதை வைத்து என்னை பற்றி மக்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

விஷாலுக்கு கொலை மிரட்டல்; கமிஷ்னரிடம் புகார்

விஷாலுக்கு கொலை மிரட்டல்; கமிஷ்னரிடம் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishalநடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.

அவர் சங்க நலனுக்காக பல வித செயல்களை துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார்.

இதனால் அவருக்கு பல எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, விஷால் சார்பில் கமிஷ்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது…

“தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் வெளியாகி உள்ளது.

அவரின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையை தற்போது சைபர் க்ரைம் அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.

கொஞ்சம் கூட ஓவியா மாறல… சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

கொஞ்சம் கூட ஓவியா மாறல… சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan oviya marinaபாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.

இதில் இவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார்.

தற்போது சிவகார்த்திகேயன் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்.

ஆனால் ஓவியாவுக்கு சொல்லும்படியான படங்களை அமையவில்லை.

ஆனால் இவர் தற்போது பங்குபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு வரலாறு காணாத புகழை தந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் முடித்துவிட்டு வெளியே வரும் நாளில் அவரின் கால்ஷீட் நிரம்பி வழிய போகிறது என்பது நிச்சயிக்கப்பட்ட உண்மை எனலாம்.

இந்நிலையில் பிக்பாஸ் ஓவியா பற்றி ஒரு வரி சொல்லுங்களேன் என ட்விட்டரில் சிவகார்த்திகேயனிடம் ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.

மெரினா படத்தின் போதே ஜாலியாகவும் அப்பாவியாகவும் இருப்பார். இன்றும் அதே போல காணப்படுகிறார்.

ஓவியா இன்னும் மாறவே இல்லை என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan says Oviya hasnt changed a bit

சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி… மூவரையும் இணைத்த சிகை

சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி… மூவரையும் இணைத்த சிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Samantha Nivin Pauly join hands for Kathirs Sigaiஅவ்வை சண்முகி படத்தில் கமல், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடமிட்டு நடித்திருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் கதிரும் சிகை படத்தில் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று ஜீலை 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த டிரைலரை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதன்படி வெளியிட 3 மொழிக்கு 3 பேரை நியமித்துள்ளனர்.

எனவே தமிழுக்கு சிவகார்த்திகேயனும், தெலுங்குக்கு சமந்தாவும், மலையாளத்திற்கு நிவின்பாலியும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஜகதீசன் சுபு இப்படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.

Sivakarthikeyan Samantha Nivin Pauly join hands for Kathirs Sigai

sigai movie poster

More Articles
Follows