அண்ணாத்த ஆடுறார்… அஸ்வின்குமாரை மகனே என பாராட்டிய கமல் (வீடியோ)

அண்ணாத்த ஆடுறார்… அஸ்வின்குமாரை மகனே என பாராட்டிய கமல் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal impressed with Ashwins dance on a treadmillகமல்ஹாசன் ஒரு சகலகலா வல்லவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

அவர் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கினாலும் ஒரு நடன இயக்குனராக தான் முதலில் தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இதனால் அவரின் நடனத்திற்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.

பாலசந்தர் போன்ற இயக்குனர்களால்தான் தான் தமிழ் சினிமாவில் நிலைக்க முடிந்தது. இல்லை என்றால் மலையாள படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி இருப்பேன் என்று கூட சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் துருவங்கள் பதினாறு படத்தி நடித்த அஸ்வின்குமார் என்பவர் கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு டிரெட்மில்லில் நடந்த படி நின்றபடி நடனமாடியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

தற்போது அந்த வீடியோவை பார்த்த கமல்.. நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!…

என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஒரு அப்பாவை போல தங்களை பார்ப்பதாக அஸ்வின்குமார் கமலுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார்.

இதோ அஸ்வின் குமார் ஆடிய ஆட்டம்…

https://twitter.com/ikamalhaasan/status/1273968183351734273

Kamal impressed with Ashwins dance on a treadmill

 

கபசுபரே… கேரளா ஆந்திரா டெல்லி போல ஆள வருக வாத்தி..; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

கபசுபரே… கேரளா ஆந்திரா டெல்லி போல ஆள வருக வாத்தி..; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madurai Vijay fans wall posters goes viral in internet tooநடிகர் விஜய் வருகிற ஜீன் 22ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதால் மக்கள் அவதிப்படுவதால் தன் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என முன்பே கூறியிருந்தார்.

இருந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் அடங்குவதாக இல்லை. தங்கள் தளபதியை வாழ்த்தி விதவிதமாக போஸ்டர்கள் அச்சடித்துள்ளனர்.

அதில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

‘வாங்கய்யா வாத்தியாரய்யா’ என குறிப்பிட்டு அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது..

கேரளா போன்ற நேர்மையான அரசாகவும்
ஆந்திரா போன்ற மக்களுக்கான அரசாகவும்
டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்
தமிழ்நாடு அமைய வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா

என ஒட்டியுள்ளனர்.

மற்றொரு போஸ்டரில்.. எங்களை காக்கும் கபசுரரே என்று அச்சடித்துள்ளனர்.

அதாவது.. கொரோனாவில் இருந்து தன்னை காத்துக்கொள்ள கபசுப நீரை குடிக்க அரசு சொல்லியுள்ளது. அதை குறிப்பிட்டு விஜய்யை வாழ்த்தியுள்ளனர்.

மதுரை ரசிகர்கள்தான் இத்தகைய போஸ்டர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற போஸ்டர்கள் இதோ…

https://twitter.com/DrVijayGroup/status/1274238572028022784

Madurai Vijay fans wall posters goes viral in internet too

Madurai Vijay fans wall posters goes viral in internet too

அமெரிக்கா ரிட்டர்ன் பெண்ணை காதலித்து மணக்கும் கும்கி அஸ்வின்

அமெரிக்கா ரிட்டர்ன் பெண்ணை காதலித்து மணக்கும் கும்கி அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kumki Ashwin and Vidyasree to get married on 24th June 2020ஆர்யா, சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் மொட்ட ராஜேந்திரனின் மகனாக நடித்திருந்தார் அஸ்வின் ராஜா.

அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் கும்கி படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இதில் பிரபலமாக இவரை கும்கி அஸ்வின் என்றே அழைக்க தொடங்கினர் ரசிகர்கள்.

இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வி சுவாமிநாதன் என்ற தயாரிப்பாளரின் மகன் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

இந்த நிலையில் வருகிற ஜீன் 24ஆம் தேதி அஸ்வினுக்கு திருமணம் நடக்கவுள்ளதாம்.

தன்னை 4 வருடமாக காதலிக்கும் வித்யா ஸ்ரீ என்ற பெண்ணை தான் மணக்கவுள்ளார்.

வித்யா ஸ்ரீ சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள்.

அவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை முடித்துள்ளார்.

கொரோனா விதிமுறைகள் படி இந்த திருமணம் மிக எளிமையாக நடக்கவுள்ளதாம்.

Kumki Ashwin and Vidyasree to get married on 24th June 2020

சுஷாந்த் சிங்கின் மரணத்தையும் விடாமல் படமாக்கும் பாலிவுட்

சுஷாந்த் சிங்கின் மரணத்தையும் விடாமல் படமாக்கும் பாலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sushant Singh Rajput suicide reveals Reel and Real heroesகிரிக்கெட் வீரர் எம்எஸ். தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் அண்மையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.

ஆனால் சுஷாந்த்தின் உறவினர்கள் அது தற்கொலை அல்ல கொலை என்று கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் சுஷாந்த்தின் மரணமே தற்போது சினிமாவாகிறது.

இந்த படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்க விஜய் சேகர் குப்தா தயாரிக்கிறார்.

சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நபர்களை இந்தி திரையுலகம் எப்படி நடத்துகிறது, அவர்களின் போராட்டம் எப்படி பட்டது? என்பதை இந்த படம் சொல்லவிருக்கிறதாம்.

மேலும் பாலிவுட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை ஷாமிக் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Film inspired by Sushant Singh Rajputs life in process

ஊர் பேர மாத்துறீங்க… ஊரடங்குக்குள் ஊரடங்கு போடுறீங்க.. கடுப்பான கமல்

ஊர் பேர மாத்துறீங்க… ஊரடங்குக்குள் ஊரடங்கு போடுறீங்க.. கடுப்பான கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan slams TN Govt and lock down extension ஏற்கெனவே 83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு மீண்டும் ஒரு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டம் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அறிக்கையில்…

வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது.

முழு பொதுமுடக்க காலத்தில் என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை.’ எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கை இதோ…

மார்ச் 24ஆம் தேதி தொடங்கியது இந்த ஒத்துழைப்பு இயக்கம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடங்கியிருக்கும் முழு அடைப்பிற்கு முன், கொரோனாவில் இருந்து தப்பிக்க சொந்த ஊருக்கு, இரு சக்கர வாகனங்களில் கூட செல்லத் துணிந்து விட்ட மக்களை பார்க்கும் பொழுது என் மனதில் எழும் கேள்விகள் இவை.

வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்த வியாதி பரவுகிறது எனும் நிலையில், விமான நிலையத்திலேயே அவர்களுக்கு பரிசோதனைகளை செய்திருந்தால் இத்தனை நீண்ட நெடிய ஊரடங்கினை நாம் எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்காது.

உங்களின் அந்த ஒரு தவறுக்காக ஒட்டு மொத்த தமிழகமும் 68 நாட்கள் ஊரடங்கில் இருந்து, இப்போது தான் மெதுவாக மீளத் தொடங்கியிருக்கிறது.

“முன்பிருந்த நிலை” என்பதை அடைவதற்கே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் விவாதித்து கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகள் நம் பொருளாதார நிலையை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இந்த நுண்ணுயிரி.

சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்வது, பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து எப்போது செயல்படப்போகிறது இந்த அரசு?

பரவலான பரிசோதனையை எல்லா மாவட்டத்திலும் செய்து, உண்மை நிலையை தெளிவுபடுத்தியிருந்தால், கொரோனாவிலிருந்து தப்பிக்க, சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மக்களின் மனநிலையையும், காவல் துறை சோதனை சாவடிகள் அமைத்து தடுக்கும் நிலையினையும் தவிர்த்திருக்கலாம்.

இதை எதையுமே செய்யாமல் ஊர் பெயர்களை மாற்றி, பின் அதை திரும்பபெற்று என செயலாடிக் கொண்டிருக்கிறது அரசு. 83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னையில், மீண்டும் ஒரு முழு ஊரடங்கு என அறிவித்திருந்தார் முதல்வர்.

ஏற்கனவே சற்றே தளர்த்தப்பட்ட ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு எப்படி மறுபடியும் ஊரடங்கு என்பதைக் கூட யோசிக்காமல் அறிவிக்கும் முதல்வரும், அமைச்சர்களும் தான் நம்மை காப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்கள்.

“ஊரடங்கிற்குள் இன்னொரு ஊரடங்கு” என ஏற்கனவே அறிவித்து மக்களை பயமுறுத்தி, கோயம்பேடு தொற்றினை உருவாக்கினார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு செய்த தவறில் இருந்து கூட பாடம் கற்காமல் மீண்டும் அதே தவறைச் செய்கிறார்கள். மக்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

அத்தியாவசிய பொருட்களின் இருப்பும், விநியோகமும் உறுதி செய்யப்படும்” என்கின்ற உறுதிகள் வழங்கப்பட்டாலும் கூட மக்கள் கண்டிப்பாக பதட்டம் அடைவார்கள் என்ற முன்யோசனையின்றி செயல்படுவது ஏன்? ஊரடங்கு என்பது தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சி தான்.

ஆனால் ஏற்கனவே இருக்கும் தொற்றினைக் கட்டுப்படுத்த பரவலான பரிசோதனை முக்கியம் என்று அறிஞர்கள் சொன்ன போதெல்லாம், அதைக் காதில் வாங்காமல் 300, 400 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்ததின் விளைவு, இன்று இந்த பொது முடக்கமும், அதன் விளைவாக பொருளாதார முடக்கமும்.

மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து வென்றெடுப்பதற்கு, நேர்மையாக தகவல்களை பரிமாறாமல், வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதன் விளைவே, ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரம்பித்திருக்கும் இந்த முழு ஊரடங்கு காலத்திலாவது, மக்கள் உள்ளிருக்கும் போது அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதையும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை.

இவ்வாறு கமல் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Kamalhassan slams TN Govt and lock down extension

‘அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குனர் சச்சி மரணம்; பிரபலங்கள் இரங்கல்

‘அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குனர் சச்சி மரணம்; பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ayyappanum Koshiyum director Sachy passes awayமலையாளத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் அய்யப்பனும் கோஷியும்.

இப்படத்தை 48 வயதான ஆர்.சச்சிதானந்தம் என்பவர் சச்சி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Ayyappanum Koshiyum director Sachy passes away

More Articles
Follows