வில்லன் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு; உலக நாயகன் கமல் உதவி

வில்லன் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு; உலக நாயகன் கமல் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan ponnambalamஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம்.

இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார்.

மேலும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்.

காமெடி நடிகரின் ‘ஜல்கோ’ சேனல்..; ச்சலோ… ச்சலோ… தாடி பாலாஜி

காமெடி நடிகரின் ‘ஜல்கோ’ சேனல்..; ச்சலோ… ச்சலோ… தாடி பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Thaadi Balaji launches new Youtube Channel Jalkoபிரபல நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை தொடங்கி சாத்தான்குளம் போலீஸ் தாக்குதல் வரை மக்களுக்கான குரலாக தாடி பாலாஜி ஒலித்துக் கொண்டிருக்கிறார்.

காவல்துறையின் அராஜக போக்கை எதிர்த்து முதலில் தைரியமாக தன் கருத்தினை பதிவிட்டு இருந்தார்.

காவல் துறையால் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் முதல் ஆளாக அங்கு வந்து நிற்பேன் எனவும் கூறியிருந்தார்.

தன் மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்து வந்தாலும், தன் வாழ்வில் பல இன்னல்கள் வந்தாலும் மக்களுக்கான சமூக பிரச்சனையில் முதல் குரல் தாடி பாலாஜியின் குரலாக தான் இருக்கிறது.

தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் விரைவில் ஒன்றாக சேர்ந்து வாழப்போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக பிரச்சனைகளை பற்றி குரல் கொடுப்பதற்காகவே தனியாக ’ஜல்கோ தாடி பாலாஜி’ என்ற யூ-டியூப் பக்கத்தை துவக்கியுள்ளார்.

இனி தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், பிரச்சனைகளையும் இதன் மூலமாக மக்களிடையே பேசப்போவதாகவும் தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.

Actor Thaadi Balaji launches new Youtube Channel Jalko

https://www.youtube.com/channel/UCKmtmQ4NUBQZncOtr80ZpPg

மின் கட்டணம் கட்ட சிறுநீரகத்தை விற்கும் நடிகர்.; நொந்து போன நடிகரை கலாய்த்த நெட்டிசன்கள்

மின் கட்டணம் கட்ட சிறுநீரகத்தை விற்கும் நடிகர்.; நொந்து போன நடிகரை கலாய்த்த நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arshad warsiகொரோனா லாக் டவுன் காரணமாக நாள் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கிட்டதட்ட 3 மாதங்கள் இதே நிலை நீடித்து வருவதால் வீட்டில் பயன்படுத்தப்படும் மின் கட்டணம் வெகு அளவில் உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் கருத்து தெரிவித்தது.

தற்போது இதே பிரச்சினை நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது.

பாலிவுட் நடிகர்கள், நடிகைகளும் மின்கட்டணம் அதிகம் குறித்து குற்றஞ்சாட்டி இருந்தனர்.

அந்த வரிசையில் பாலிவுட் நடிகர் அர்ஷாத் வர்ஷியும் இணைந்துள்ளார்.

அவர் மின்கட்டணம் குறித்து கூறியுள்ளதாவது…

என் மாத மின்கட்டணம் ரூ. 1.03 லட்சம் என வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டர் பதிவில்… என்னுடைய ஓவியத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் மின் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகத்தை விற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அவரே நொந்து இப்படி பதிவிட்டு இருந்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள்… உங்கள் ஓவியத்தை நாங்கள் வாங்க வேண்டுமென்றால் எங்களுடைய சிறுநீரகத்தை நாங்கள் விற்க வேண்டும் என கலாய்த்துள்ளனர்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா.; ஸ்டாலின் நலம் விசாரிப்பு

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா.; ஸ்டாலின் நலம் விசாரிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

stalin thangamaniகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அம்மன் அர்ஜுனன், பா.வளர்மதி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டரில்…

“கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.

பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர்.

நடிகர் நடிகைகளின் 50% சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு

நடிகர் நடிகைகளின் 50% சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor actressகொரோனா லாக் டவுனால் 100 நாட்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மற்றும் சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சினிமா இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன் பணிகள் இன்று ஜூலை 8 முதல் தொடங்கியுள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

(ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் படத்தை வெளிட்டு வருகின்றனர்.)

இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக கலந்துக் கொண்டனர்.

ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்ய ஆலோசித்துள்ளனர்.

அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது-

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, இதர சங்கங்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

‘முருங்கைகாய் சிப்ஸ்’ போட சாந்தனுவுடன் இணைந்த அதுல்யா

‘முருங்கைகாய் சிப்ஸ்’ போட சாந்தனுவுடன் இணைந்த அதுல்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

murungakkai chipsவிஜய்யுடன் நடிகர் ஷாந்தனு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சாந்தனு கைவசம் தற்போது ராவணக்கோட்டம் படம் உள்ளது.

இந்த படம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இப் படங்களை அடுத்து அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் அதுல்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு முருங்கைகாய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தரண், ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

More Articles
Follows