அரசியலில் வெறி எது.? வீரம் எது.? விளக்கம் கொடுத்த உலக நாயகன்

அரசியலில் வெறி எது.? வீரம் எது.? விளக்கம் கொடுத்த உலக நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஉலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள்.

எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள்.

முன்னது வெறி. பின்னது வீரம்.

நீங்கள் யார் பக்கம்..?

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan’s recent political punch on twitter

அரசியலுக்கு வரமாட்டார் ரஜினி..; அன்றே சொன்ன ‘டிரெண்டிங் ஜோதிடர்’ பாலாஜிஹாசன்

அரசியலுக்கு வரமாட்டார் ரஜினி..; அன்றே சொன்ன ‘டிரெண்டிங் ஜோதிடர்’ பாலாஜிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth balaji haasanநடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் உலகமே டிரம்ப் அவர்கள் ஜெயிப்பார் என கருத்துகளை வெளியிட்ட நேரத்தில் 300 முதல் 310 இடங்களை பெற்று ‘ஜோ பைடன்’ தான் வெற்றி பெறுவார் என கணித்து அசத்தினார் ‘டிரண்டிங் ஜோதிடர்’ பாலாஜி ஹாசன். அதே போன்றே இலங்கை தேர்தலிலும் அவர் கணித்தது போலவே ராஜபக்சே வெற்றி பெற்றார். அதற்கு முன்னரும் 34 க்கும் அதிகமான தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்து தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு பார்ப்பவர்களை அதிசயப்படுத்தி வருகிறார்.

இப்படி தொடர்ச்சியாக ஜோதிட உலகில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி வரும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்கள், தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே News7 தொலைக்காட்சியிலும், வேந்தர் தொலைக்காட்சியிலும் மிகச் சரியாக கணித்துக் கூறினார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

YouTube Channel Link : https://youtube.com/channel/UC9ABPCcwLk1_CUstg-GbAxA

Astrologer Balaji Haasan prediction on Rajinikanth’s political desicion

‘பிக்பாஸ்’ அனிதா தந்தை மரணம்..; டாடி வீட்டுக்கு வா உன்கிட்ட பேசனும்.. அனிதா அழுகை

‘பிக்பாஸ்’ அனிதா தந்தை மரணம்..; டாடி வீட்டுக்கு வா உன்கிட்ட பேசனும்.. அனிதா அழுகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anitha Sampathபிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கியவர் அனிதா சம்பத்.

3 மாதங்களுக்கு முன்பிலிருந்து பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்தார்.

84 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா 10-வது போட்டியாளராக வெளியேறினார்.

இந்த நிலையில் அனிதாவின் தந்தை ஆர்.சி.சம்பத் இறந்துவிட்டார்.

அவர் தரிசனத்திற்காக ஷீரடி சென்ற போது ரயிலில் திடீரென இறந்துள்ளார்.

இது குறித்து அனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில்….

‘என்னால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு வரனும். உன்கிட்ட நிறைய பேசணும்.

உன் வாய்ஸ் கேட்டு 100 நாள் மேல ஆச்சு’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார் அனிதா.

Bigg Boss Tamil 4 Anitha Sampath father passed away

உயிரே போனாலும் பரவாயில்லை என்றவர் ரஜினிகாந்த்.; அவர் பயப்பட வேற அழுத்தம்.. – பிரவீன் காந்த்

உயிரே போனாலும் பரவாயில்லை என்றவர் ரஜினிகாந்த்.; அவர் பயப்பட வேற அழுத்தம்.. – பிரவீன் காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Praveen Kanthநாளை மறுநாள் டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.

ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி…

“உயிருக்கு பயந்தவரல்ல ரஜினிகாந்த். அரசியலுக்கு வரவில்லை அவர் கூறியிருப்பதன் பின்னணியில் வேறு சில அழுத்தங்கள் உள்ளன.

உயிரே போனாலும் பரவாயில்லை சொன்ன அவர் அரசியலுக்கு வரப் போவதில்லை என தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே” என தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பிரவீன் காந்தி தீவிர ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Praveen Kanth about Rajinikanth’s political announcement

தலைவா அரசியலுக்கு வா..; ரஜினிகாந்த் வீட்டு முன்பு ரசிகர்கள் தர்ணா..

தலைவா அரசியலுக்கு வா..; ரஜினிகாந்த் வீட்டு முன்பு ரசிகர்கள் தர்ணா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fansநாளை மறுநாள் டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.

ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்..

ஆனால் அவரது ரசிகர்கள், அவரது வீடு முன் அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Rajini fans protest infront of Rajinikanth house

திரையுலக பயணத்தில் 50வது ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் தாணு

திரையுலக பயணத்தில் 50வது ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணுதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது.
தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி தாணு

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

1971 ல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்களின் ஐம்பதாவது ஆண்டுதிரைப் பயணத்தில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது திரைத்துறை சேவைக்கான உயரிய அங்கீகாரம் என்றால் மிகையில்லை

சினிமாவுக்குள் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பயணிப்பவர்களுக்கு மத்தியில் கடந்த கால் நூற்றாண்டுகளாக பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெற்றிபெற்றதன் மூலம் தமிழ் சினிமா இவரை சுற்றி சுழல்கிறது என்றே கூறலாம்

நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கதாநாயகர்கள் காத்திருக்கின்றனர் என்கிறார் தயாரிப்பாளர் காட்ரகட் பிரசாத்

தமிழ் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.
எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள் அந்த வரிசையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக ஜனவரி 1/2 021 அன்று கலைப்புலி தாணு பதவியேற்க உள்ளார்

இவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக
C, கல்யாண்,C.P.விஜயகுமார்,N.M சுரேஷ், ஆனந்தா L.சுரேஷ், T.P.அகர்வால், ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்

செயலாளர்களாக
ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர்

ஜனவரி 1, 2021 முதல் ஒரு வருடத்திற்கு தலைவர் பொறுப்பில் கலைப்புலிதாணுபதவி வகிப்பார்.

KalaiPuli S Thanu selected as Head of All India Movie Association

More Articles
Follows