அதிகாலையிலே விவேகம் பார்க்கும் கமல்; அஜித்துக்கு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் இன்று உலகம் முழுவதும வெளியாகியுள்ளது.

சிவா இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடிக்க, முதன்முறையாக இப்படத்தின் மூலம் கமல் மகள் அக்ஷராஹாசன் அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் குறித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

என் மகள் அக்ஷராவுடன் விவேகம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். படம் பற்றி நல்ல விமர்சனங்களையே கேட்டு வருகிறேன். படத்தில் பணியாற்றிய அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 3m3 minutes ago
Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

டிடிவி தினகரனுடன் நடிகர் விஷால் ரகசிய சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பக்கம். டிடிவி தினகரன் அணி ஒரு பக்கம் என அதிமுக பிரிந்து உள்ளது.

மேலும் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அதிமுக ஆட்சி கவிழுமா? அடுத்த முதல்வர் யார்? என்ற பரபரப்பான சூழ்நிலை தமிழக அரசியலில் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் டிடிவி தினகரனை நேரில் சந்தித்துள்ளார்.

விஷாலின் தங்கை திருமணம் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், திருமண பத்திரிகையை கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் சந்தித்த எந்த விதமான படங்களையும் இதுவரை வெளியிடவில்லை.

அண்மையில் வைகோவையும் இதுபோல் சந்தித்தார் விஷால். ஆனால் அந்த படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Vishal met ADMK Party member TTV Dhinakaran

முதல்நாளில் கபாலி-தெறி-பாகுபலி2 ரெக்கார்டுகளை முறியடித்த விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் விவேகம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் இது போன்ற கேரளாவிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது அங்குள்ள திரையுலக வல்லுனர்களே அசர வைத்துள்ளதாம்.

கேரள உரிமையைப் பெற்றுள்ள குளோபல் யூனிட்டட் மீடியா என்ற நிறுவனம்தான் இப்படத்தை கிட்டதட்ட 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட உள்ளது.

இந்நிலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் ஒரே நாளில் 50 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.

இதற்கு முன் அதிகப்பட்சமாக கபாலி படத்திற்கு 48 காட்சிகளும், பாகுபலி-2 மற்றும் தெறி படங்களுக்கு 44 காட்சிகளும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கேரளா முழுவதும் முதல் நாளில் மட்டும் 1,650 காட்சிகள் திரையிடப்பட் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vivegam beat Kabali Theri Baahubali2 records in first day

பைரவா படைத்த கட்-அவுட் சாதனையை வீழ்த்தியது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த பைரவா படம் பொங்கல் சமயத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இப்படத்திற்கு நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் சார்பாக விஜய்யின் 150அடி உயர கட்அவுட்டை வைத்தனர்.

தற்போது அதனை மிஞ்சும் வகையில் நாளை வெளியாகவுள்ள விவேகம் படத்திற்கு 180அடி உயர அஜித் கட்-அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

தமிழக சினிமா வரலாற்றிலேயே இந்த அளவு உயரத்திற்கும் எந்த நடிகருக்கும் கட் அவுட் வைத்தது இல்லை என தெரிய வந்துள்ளது.

Vivegam beat Bairavaa cutout record in Nellai district

 

ரஜினியை அஜித் முந்திடுவார்; மோடி மேஜிக் மீது ரசிகர்கள் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை ஆகஸ்ட் 24-ம் தேதி மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

அதிகாலை காட்சிக்கான தமிழக அரசு அனுமதி கிடைத்தவுடன், காலை 5 மணிக்கே பல தியேட்டர்களில் காட்சிகள் திரையிடப்பட் உள்ளது.

இதற்கு முன் வெளியான ‘வேதாளம்’ (2015) படத்தின் முதல் நாள் வசூலான 15.5 கோடியை, ரஜினியின் ‘கபாலி’ முதல் நாள் வசூல் முறியடித்தது.

கபாலி படம் 22 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது தமிழ் சினிமாவின் பல சாதனைகளை முறியடித்தது.
தற்போது ஜிஎஸ்டி வரி சேர்ந்து, டிக்கெட் விலை அதிகரிள்ளது.

எனவே, விவேகம் படத்தை அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி மேஜிக்தான் என ரசிகர்கள் கூறிவருவது இங்கே கவனிக்கதக்கது.

Will Vivegam beat Kabalis records by Modis GST Magic

அஜித்தின் வழக்கறிஞரே… விவேகம் டிக்கெட் ரேட் ரூ.900 தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து 3வது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’.

இப்படம் நாளை (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) உலகமெங்கும் கிட்டதட்ட 2900க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 850க்கும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதால் கடந்த இரண்டு தினங்களாக ரிசர்வேசன் களை கட்டத் தொடங்கியுள்ளது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் முதல்நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் விலைகள் ரூ. 500, 600, 800, 900 என விற்கப்பட்டு வருகிறது.

அண்மையில் அமலான ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்தால் ரூ. 153.60 மட்டுமே டிக்கெட் கட்டணமாக இருக்கவேண்டும்.

ஆனால் அதைவிட 4-5 மடங்கு அதிகமாக டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் ரூ. 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

எனவே, மிகப்பெரிய தொகையைக் கொடுத்து படத்தை வாங்கியிருப்பதால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க முடியவில்லை என சில உரிமையாளர்கள் கூறிவருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அண்மையில் சில தினங்களுக்கு முன், அஜித் சார்பாக அவரது சட்ட ஆலோசகர் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில்… நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர் அஜித் என தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் பெயரில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர் பொறுப்பு இல்லை எனவும், யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் இது அஜித் படத்துக்கான வியாபாரம். அதை அப்படி கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட முடியுமா..?

சட்ட ஆலோசகரின் கவனத்திற்கு… இதுபோன்ற நடைபெறும் பகல் கொள்ளையை கவனத்தில் எடுத்து தக்க நடவடிக்கையை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களே எதிர்பார்ப்பாகும்.

Ajiths Vivegam release and Ticket rates reaches Rs 900

More Articles
Follows